சின்பான்டெல்

சின்பான்டெல் (Zinfandel) என்பது, கருநிறத் தோல் கொண்ட "வைன்" திராட்சையின் ஒரு வகை ஆகும். இவ்வகைத் திராட்சை கலிபோர்னியாவின் 10% திராட்சைத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது.[1] மரபணுப் பகுப்பாய்வுகள், இவ்வகைத் திராட்சை குரோசியத் திராட்சைகளான "கிரில்ஜெனாக் காஸ்தெலான்ஸ்கி", "டிரிபிட்ராக்" ஆகியவற்றையும், இத்தாலியின் அப்புலியாவில், 18 ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி வளர்க்கப்படும் வகையான "பிறிமிட்டிவோ" வகையையும் மரபியல் அடிப்படையில் ஒத்தது என வெளிப்படுத்தியுள்ளன.[2] இத்திராட்சை வகை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், புகழ்பெற்ற "ஹெகென்ஸ்ட்ராட்" வைன் குழுவின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகமானது. இது பொதுவாகக் கடும் சிவப்பு நிற வைனைத் தருகிறது. எனினும் ஐக்கிய அமெரிக்காவில், "வெண் சின்பான்டெல்" எனப்படும் குறைவான இனிப்புக் கொண்ட இளம்சிவப்பு வைன், சிவப்பு வைனைவிட ஆறு மடங்கு கூடுதலாக விற்பனையாகிறது.[3] இத்திராட்சை வகை உயர்ந்த சர்க்கரை அளவைக் கொண்டிருப்பதால் இதை நொதிக்க வைத்து 15 நூற்றுவீதத்துக்கு மேற்பட்ட அல்ககோல் அளவு கொண்ட வைனைத் தயாரிக்க முடியும்.[4] சிவப்பு வைனின் சுவை பயன்படுத்தப்பட்ட திராட்சை எவ்வளவு பழுத்துள்ளது என்பதைப் பொறுத்து அமையும்.

சின்பான்டெல்/பிறிமிட்டிவோ
திராட்சை (விட்டிசு)
சின்பான்டெல் திராட்சை கொடியில் பழுக்கின்றது
இனம்விட்டிசு வினிபெரா
வேறு பெயர்கிரில்ஜெனாக் காஸ்தெலான்ஸ்கி, சின், ZPC
தோற்றம்குரோசியா
குறிப்பிடத்தக்க பகுதிகள்கலிபோர்னியா, அப்புலியா, டால்மேசியா
பிரச்சினைகள்குலை அழுகல், ஒழுங்கின்றிப் பழுத்தல்

வரலாறு

தொகு

தொல்லியல் சான்றுகளின்படி விட்டிஸ் வினிபேரா கிமு 6000 அளவில் காக்கேசியப் பகுதியில் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. சில காலங்களுக்குப் பின்னர் வைன் தயாரிப்பும் தொடங்கியது.[5] தொடர்ந்து திராட்சை வளர்ப்பு நடுநிலக்கடல் பகுதிக்கும் அதைச் சார்ந்த பகுதிகளுக்கும் பரவியது. சின்பான்டெல் வகைக்கு உறவுடைய பல உள்ளூர் வகைகள் ஒரு காலத்தில் குரோசியாவில் இருந்தன.[6] 19 ஆம் நூற்றாண்டில் குரோசியாவின் வைன் தொழிலுக்கு இவையே அடிப்படையாக அமைந்தன. இவ்வேறுபாடுகள், திராட்சை வேறெந்த இடத்தையும் விட குரோசியாவிலேயே நீண்ட காலம் வளர்க்கப்பட்டன என்பதைக் காட்டுகின்றது. எனினும், "பிலொக்சேரா" நோய்த் தொற்றுக் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்வகைகள் அழிந்துவிட்டன. இறுதியாக "கிரில்ஜெனாக் காஸ்தெலான்ஸ்கி" என உள்ளூரில் அழைக்கப்பட்ட சின்பான்டெல் கொடிகள் ஒன்பது மட்டும் 2001 ஆம் ஆண்டில் குரோசியாவின் டால்மேசன் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.[6]

"பிறிமிட்டிவோ" என்னும் சொல்லின் பதியப்பட்ட முதல் பயன்பாடு 1870 களில் இத்தாலிய அரசாங்க வெளியீடுகளில் காணப்படுகின்றது.[4] பிறிமட்டிவஸ் (primativus) அல்லது பிறிமட்டிக்கோ (primaticcio) ஆகிய சொற்களில் இருந்து பெறப்பட்ட இப்பெயர், ஏனைய வகைகளைவிட முன்னதாகவே பழுக்கக்கூடியது என்னும் பொருளைத் தருகின்றது.[7] இப்பெயர், "சின்பான்டெல்" என்னும் பெயர் பயன்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகளின் பின்னரே அறிமுகமானதால், பிறிமிட்டிவோ அத்திலாந்திக் பகுதிகளில் இருந்தே இத்தாலிக்கு அறிமுகமானது என்னும் கருத்து நிலவியது. எனினும், இத்திராட்சை குரோசியாவில் தோன்றியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முன்னைய எடுகோள் வலுவிழந்தது.[8] பிறிமிட்டிவோ 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் அப்புலியாப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இப்போது கருதப்படுகிறது.[7][9]

ஆசுத்திரியாவின் வியன்னாவில் உள்ள அரசாங்கத் தாவரப் பண்ணையில் இருந்தே ஐக்கிய அமெரிக்காவுக்கு சின்பான்டெல் கொடி சென்றிருக்கக்கூடும். 1797 ஆம் ஆண்டில் முன்னைய வெனிசுக் குடியரசின் டால்மேசன் பகுதிகளை ஆசுத்திரியா கைப்பற்றிக்கொண்டபோது, ஆசுத்திரியாவுக்குள் அடங்கிய "அப்சுபர்க் அரசு" குரோசியா மீது தனது ஆட்சியை விரிவாக்கியிருந்தது. இக்காலத்திலேயே வெனிசின் தாவரப் பண்ணை சின்பான்டெல் கொடியைப் பெற்றிருக்கக்கூடும்.[10][11]

1835 ஆம் ஆண்டில் "சின்பான்டெல்", "மேசைத் திராட்சை"யாகப் பயன்படுத்துவதற்காக பொசுட்டனில், சூடாக்கப்பட்ட பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்டது. "சின்பான்டெல்" திராட்சையைப் பயன்படுத்தி வைன் தயாரிப்பது தொடர்பான குறிப்புக்கள் 1947 ஐச் சேர்ந்த வைன் தொடர்பான நூலொன்றில் காணப்படுகிறது. 1850 களில், "சின்பான்டெல்" பயிர்ச் செய்கை பொசுட்டனில் கைவிடப்பட்டது.[10] 1850க்குப் பின்னர் இது கலிபோர்னியாவில் அறிமுகமானது.

மேற்கோள்கள்

தொகு
  1. National Agricultural Statistics Service (2007-04-13). "Grape Acreage Reports". USDA. Archived from the original on 2008-02-16. பார்க்கப்பட்ட நாள் 2007-12-17.
  2. Jancis Robinson, "The Great Grapevine" in The Financial Times, October 12th, 2012
  3. "U.S. wine sales 2006". Wine Communications Group. பார்க்கப்பட்ட நாள் 2007-12-17.
  4. 4.0 4.1 Sullivan, Charles L (2003-09-02). Zinfandel: A History of a Grape and Its Wine. Berkeley: University of California Press. pp. 167–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-23969-2.
  5. McGovern, P. E. (2003). Ancient Wine: The Search for the Origins of Viniculture. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-07080-3.
  6. 6.0 6.1 Piljac, Jasenka (2005). "The Application of Bioinformatics Techniques in Genetic Identification and Profiling of Rare Grape Varieties Indigenous to Croatia". Essays in Bioinformatics (IOS Press) 368: 220–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58603-539-6. https://books.google.com/?id=fwuk4zA0YiUC&printsec=frontcover#PPA220,M1. 
  7. 7.0 7.1 "Apiula". DiWineTaste. March 2007.
  8. Albertson, Lynda (2008-01-01). "A Multitude of Zins". The American. Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
  9. "I vitigni". Strada del vino a D.O.C. Primitivo di Manduria e Lizzano. Archived from the original on 2007-07-03. பார்க்கப்பட்ட நாள் 2007-12-17.
  10. 10.0 10.1 Sullivan, Chapter 2 பரணிடப்பட்டது 2008-07-19 at the வந்தவழி இயந்திரம்
  11. Sweet, Nancy L (November 2007). "The Zinfandels of FPS" (PDF). FPS Grape Program Newsletter (UC Davis): 11. http://fpms.ucdavis.edu/WebSitePDFs/Newsletters&Publications/GrapeNewsletterNov2007.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்பான்டெல்&oldid=3849765" இலிருந்து மீள்விக்கப்பட்டது