சின்மயானந்த்
இந்திய அரசியல்வாதி
சின்மயானந்த் (Chinmayanand) (பிறப்பு: கிருஷ்ணா பால் சிங்) [1] என்பவர் இந்திய நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 1999 ஆம் ஆண்டு பதின்மூன்றாவது மக்களவையின் போது தேர்தலில் போட்டியிட்டு வென்று, வாஜ்பாய் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். மேலும் 1991 ஆம் ஆண்டு 10வது மக்களவையின்போது ஷபா தொகுதியிலிருந்தும், மேலும் 1998 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மச்லிஷாஹரிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கைது
தொகு2019 ஆம் ஆண்டு இவர் நடத்தும் கல்லூரியில் படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துண்புரித்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். [2] பின்னர் இவர் மீது குற்றம் சாட்டிய மாணவி காணாமல் போனதால் இவரை காவல் துறை கைது செய்தது. பின்னர் இவர் 15 நாட்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.[3][4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.newslaundry.com/2019/09/11/our-beloved-swamiji-chinmayanands-experiments-with-power-and-piety
- ↑ https://www.outlookindia.com/website/story/india-news-girl-student-who-accused-ex-bjp-mp-swami-chinmayanand-of-harassment-goes-missing/337295
- ↑ https://timesofindia.indiatimes.com/india/swami-chinmayanand-booked-after-girl-alleging-harassment-goes-missing-in-up/articleshow/70863964.cms
- ↑ சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார்: முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயனாந்த் பலாத்கார வழக்கில் கைதுதி இந்து தமிழ் திசை - வெள்ளி, செப்டம்பர் 20 2019
- ↑ Chinmayanand case: Police obtain records showing victim's mother worked at college run by BJP leader's ashram[தொடர்பிழந்த இணைப்பு]Firstpost - Saturday, September 21, 2019