சிபு சக்கரவர்த்தி

சிபு சக்ரவர்த்தி (Shibu Chakravarthy) இவர் ஓர் இந்தியப் பாடலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும் மற்றும் கதாசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். சுமார் 200 பாடல்களை எழுதியுள்ளார். நாயர் சாப், மனு மாமா, ஆதர்வம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்குத் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்துள்ளார். இவர் மோலிவுட்டில் புதிய படங்களுக்கு எழுதுகிறார். 1984ஆம் ஆண்டில் அல்லிமலர்காவ் திரைப்படத்திற்காகத் தனது முதல் பாடலை எழுதினார். இவர் இன்னும் திரைத்துறையில் பணியாற்றுகிறார். 80க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

சிபு சக்கரவர்த்தி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சிபு ஜி. தாஸ்
பிறப்பு17 பெப்ரவரி 1961 (1961-02-17) (அகவை 63)
பிறப்பிடம்கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)பாடலாசிரியர்
திரைக்கதை ஆசிரியர்
திரைக்கதை ஆசிரியர்
இசைத்துறையில்1984 முதல் தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்ஹெச்எம்வி இந்தியா
பிஎம்ஜி இந்தியா
தரங்கிணி
இன்ரிக்கோ

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சிபு சக்ரவர்த்தி கொச்சியில் 1961 பிப்ரவரி 17 அன்று, எர்ணாகுளம் மாவட்டத்தின் கலூரில், மறைந்த கே. ஜி. தாஸ் மற்றும் ஆசிரியரான லீலா என்பவருக்கும் பிறந்தார். எடப்பள்ளி புனித ஜார்ஜ் பள்ளியிலிருந்து தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் தனது மாமா எரூர் வாசுதேவன் என்பவரால் ஈர்க்கப்பட்டு மிகச் சிறிய வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

பாடலாசிரியர்

தொகு

18 வயதில் மலையாள அடிப்படை இசைத்தொகுப்புகளுக்கு பாடல்களை எழுதத் தொடங்கினார்.

இவரை 'பிரகாஷ் மூவி டோன்' என்ற நிறுவனத்தின் இராஜன் பிரகாஷ் மலையாளத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். 1984ஆம் ஆண்டில் தனது 23 வயதில் மகாராஜா கல்லூரியில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் செய்து கொண்டிருந்தபோது, இவரது முதல் படம் அல்லிமலர்காவ் வெளிவந்தது. திரைப்படத் துறையில் பணியாற்றும் போது பத்திரிகைத் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றார்.

ஷைமா என்ற படத்தில் இவர் எழுதிய "செம்பருத்தி பூவு" என்ற பாடல் பெரியளவில் அவருக்கு வெற்றியைத் தந்தது.. மேலும் இவர் மலையாளத் திரையுலகில் வெற்றிகரமான பாடலாசிரியரானார். 80க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 250 பாடல்களையும், திருவிழா/பக்தி பாடல்களுக்காகச் சுமார் 200 பாடல்களையும் எழுதியுள்ளார்..[1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சக்ரவர்த்திக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர். இவரது மனைவி ஷிஜி, விஜயனா சாகர் பள்ளியில் (என்.பி.ஓ.எல் பள்ளி) முதல்வராகப் பணிபுரிகிறார். இவருக்கு ஒரு மகன் சாந்தனு மற்றும் ஒரு மகள் மாளவிகா, ஆஸ்திரேலியாவின் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருக்கிறார். சக்ரவர்த்தி ஒரு தீவிர வாசகர், இவருடைய ஆர்வங்கள் தத்துவம் மற்றும் உளவியல் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Shibu Chakravarthy in MSI". malayalasangeetham. பார்க்கப்பட்ட நாள் 2012-02-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபு_சக்கரவர்த்தி&oldid=3923469" இலிருந்து மீள்விக்கப்பட்டது