சிம்லா ஒப்பந்தம், 1914

சிம்லா ஒப்பந்தம், 1914 (Simla Accord) என்பது பிரித்தானிய இந்தியா, சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே எல்லைகள் குறித்து சிம்லாவில் 1914இல் செய்து கொண்ட உடன்படிக்கையாகும்.[1]

சிம்லா ஒப்பந்தப் படி 1914ஆம் ஆண்டில் மெக்மோகன் வரையறுத்த வரைபடம் 1
சிம்லா ஒப்பந்தப் படி 1914ஆம் ஆண்டில் மெக்மோகன் வரையறுத்த வரைபடம் 2

சிம்லா உடன்படிக்கையின் படி, திபெத் பகுதியை உள் திபெத் மற்றும் வெளி திபெத் என பிரிக்கப்பட்டது. திபெத்தின் மேற்கு பகுதியான வெளி திபெத், லாசாவை தலைமையிடமாகக் கொண்டு, சீனாவின் இறையாண்மைக்குட்பட்ட தன்னாட்சி பகுதியாகவும்; திபெத்தின் கிழக்குப் பகுதியான உள் திபெத் சீன அரசின் நேரடி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியாகவும் ஒத்துக்கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் படி திபெத் மற்றும் சீனாவிற்கும் இடையே மற்றும் பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத்திற்கும் இடையே ஆன எல்லையை பின்னர் மெக்மோகன் கோட்டால் வரையறை செய்யப்பட்டது.[1] சிம்லா ஒப்பந்தப் படி பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத் எல்லைகளை வரையறைக்கும் எல்லைக் கோட்டு வரைபடங்கள் மார்ச் 1914இல் பிரித்தானியா மற்றும் திபெத் ஆட்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த உடன்படிக்கை குறித்து சீனா எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.[2]

பின்னர் 3 சூலை 1914 அன்று சீனா, சிம்லா உடன்படிக்கையை ஏற்க மறுத்தது. சீனாவின் பிரதிநிதித்துவம் இன்றி, அதே நாளில் பிரித்தானியாவும், திபெத்தும் இணைந்து சிம்லா உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.[3][nb 1][4]

பின்னணி

தொகு

திபெத் நாட்டின் வணிக மையமாக விளங்கிய தவாங் மற்றும் சிக்கிம் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர்.[5]திபெத்-பர்மா-சிக்கிம் எல்லைகள் குறித்து பிரித்தானியா அரசு சீனாவுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டது.[6][7]

சீனா அரசு, திபெத்தில் (1910 - 1912) படைகளை அனுப்பி திபெத்தின் நிர்வாகத்தை ஏற்றது. பிரித்தானிய இந்தியாவின் வடகிழக்கில், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளில் இராணுவத்தை அனுப்பி, வடகிழக்கு எல்லைப்புற முகமையை 1912இல் நிறுவியது.[8] சீனாவில் குயிஞ் அரசு வீழ்ச்சி கண்ட நேரத்தில், திபெத்தின் லாசா அரசு, அங்கிருந்த அனைத்து சீன இராணுவத்தை வெளியேற்றி, 1913இல் திபெத்தை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது.[9][10] திபெத்தின் இந்நடவடிக்கையை குடியரசு சீன அரசு பின்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.[11]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. எனவே சிம்லா ஒப்பந்தத்தில், பிரித்தானிய சார்பாக ஏ. ஹென்றி மெக்மோகன் என்பவரும், திபெத் சார்பாக லோசன் சாத்ரா என்பவரும் கையொப்பமிட்டனர்.("Convention Between Great Britain, China, and Tibet, Simla (1914)", Tibet Justice Center பரணிடப்பட்டது 2009-03-10 at the வந்தவழி இயந்திரம். Retrieved 20 March 2009).

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Convention Between Great Britain, China, and Tibet, Simla (1914)", Tibet Justice Center. Retrieved 20 March 2009
  2. [(Sinha, (Calcutta 1974), p. 12 (pdf p. 8)]
  3. Goldstein 1991, ப. 837.
  4. Sinha (Calcutta 1974), pp. 5,12 (pdf pp. 1,8)
  5. Calvin, James Barnard, "The China-India Border War", Marine Corps Command and Staff College, April 1984
  6. Convention Relating to Burmah and Tibet (1886), Tibet Justice Center பரணிடப்பட்டது 2009-03-10 at the வந்தவழி இயந்திரம். Retrieved 20 March 2009
  7. "Convention Between Great Britain and China Relating to Sikkim and Tibet (1890)", Tibet Justice Center பரணிடப்பட்டது 2009-03-10 at the வந்தவழி இயந்திரம். Retrieved 20 March 2009
  8. See North East Frontier of India (1910 & 1911 editions).
  9. Goldstein 1997, ப. 30–31
  10. "Proclamation Issued by His Holiness the Dalai Lama XIII (1913)", Tibet Justice Center பரணிடப்பட்டது 2009-03-10 at the வந்தவழி இயந்திரம். Retrieved 20 March 2009
  11. Smith, Warren W., "Tibetan Nation", pp. 182–183

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்லா_ஒப்பந்தம்,_1914&oldid=3357088" இலிருந்து மீள்விக்கப்பட்டது