சியான்-ஷீங் வு
சியான்-ஷீங் வு (Chien-Shiung Wu (எளிய சீனம்: 吴健雄; மரபுவழிச் சீனம்: 吳健雄; பின்யின்: Wú Jiànxióng; மே 31, 1912 – பிப்ரவரி 16, 1997) சீன அமெரிக்க, இயற்பியல் ஆய்வாளர் ஆவார். இவர் அணுக்கரு இயற்பியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். வூ மன்ஹாட்டன் திட்டத்தில் பங்களித்த போது யுரேனியம் அணுவிலிருந்து யுரேனியம் 235, யுரேனியம் 238 ஆகிய ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுக்கும் பணியில் துணைபுரிந்தார். அணுக்களின் சமச்சீரற்ற தன்மை குறித்த இவரது ஆய்வு, 'வு சோதனைமுறை' என இவரது பெயராலே அறியப்படுகிறது. இச்சோதனையில் இவருடன் ஆய்வில் ஈடுபட்ட, சுங்க் தாவோ லீ, சென் நீங் யங் ஆகியோருக்கு, 1957 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1978 இல் தொடங்கி வைக்கப்பட்ட வோல்ஃப் பரிசு அந்த ஆண்டே முதன்முறையாக வுவிற்கு வழங்கப்பட்டது. இயற்பியல் சோதனைகளில் இவருடைய திறமையினால் இவர், மேரி கியூரியுடன் ஒப்பிடப்படுகிறார். மேலும் இவர் இயற்பியலில் முதல் பெண்மணி என்றும், சீனாவின் மேடம் கியூரி என்றும் அணுக்கரு ஆய்வின் ராணி எனவும் அழைக்கப்படுகிறார்.[1]
சியான்-ஷீங் வு | |
---|---|
சியான்-ஷீங் வு 1958 இல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் | |
பிறப்பு | லியுஹே, தைசங், ஜியாங்சு, சீனா | மே 31, 1912
இறப்பு | பெப்ரவரி 16, 1997 நியூ யார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 84)
தேசியம் | சீன அமெரிக்கர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | இயற்பியல் நிறுவனம், அகாடமியா சினிகா கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி ஸ்மித் கல்லூரி பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் சீஜியாங் பலகலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தேசிய மத்தியப் பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி |
ஆய்வேடு | I. The Continuous X-Rays Excited by the Beta-Particles of 32 P. II. Radioactive Xenons (1940) |
ஆய்வு நெறியாளர் | எர்னஸ்ட் லாரன்ஸ் |
அறியப்படுவது | |
விருதுகள் |
|
துணைவர் | Luke Chia-Liu Yuan (தி. 1942) |
பிள்ளைகள் | வின்செர் யுவான் (மரபுவழிச் சீனம்: 袁緯承) |
இளமையும் கல்வியும்
தொகுசியான்-ஷீங் வு, சீனாவின் ஜியாங்சூ மாநிலம், தாய்சிங் என்ற நகரத்தில் உள்ள லியுஹெ என்ற இடத்தில் மே 31, 1912 இல் பிறந்தார்.[2],[3] இவர் இவரது வீட்டில் மூன்று குழந்தைகளில் இரண்டாமவர் ஆவார். இவருடைய தந்தை வு சோங் யீ, தாயார் ஃபான் ஃபு ஹுவா ஆவர். இவருடைய பெயரில் உள்ள சியான் என்பது குடும்பத்தில் பரம்பரையாகச் சூட்டிக்கொள்ளும் பெயராகும். இதன் பொருள், மற்றவர்களை விட சிறந்த திறமையான கதாநாயகர்கள் என்பதாகும். இவருடைய மூத்த சகோதரர் சியான் யிங், இளைய சகோதரர் சியான் ஹொவா ஆவர். வு தனது தந்தையிடம் மிகுந்த நெருக்கமாக இருந்தார். எப்பொழுதும் புத்தகங்கள், இதழ்கள், செய்தித்தாள்கள் ஆகியவை சூழ இருக்கும் வு-வின் விருப்பத்திற்கு அவருடைய தந்தை ஊக்கமளித்தார்.[4]
வு மிங் டி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பெண்குழந்தைகள் மட்டுமே படிக்கும் இப்பள்ளி அவருடைய தந்தையால் தோற்றுவிக்கபப்ட்டதாகும்.[5] 1923 இல் இவர் தனது பதினோறாம் வயதில் சொந்த நகரத்தைவிட்டு, சுசோவு பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.No. 2. இப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியும், ஆசிரியர் பயிற்சிப்பள்ளியும் இணைந்த உண்டு உறைவிடப்பள்ளியாகும். இதில் பயில மிகப்பெரிய போட்டி இருந்தது. ஏனெனில் இப்படிப்புக்கான கல்விக்கட்டணம் கிடையாது. மேலும் படித்தவுடன் வேலை கிடைக்கும் உத்திரவாதமும் இருந்தது. வு-வின் குடும்பம் கட்டணம் தரத் தயாராக இருந்தும் வு போட்டிகளுக்கிடையே வெற்றி பெறுவதையேத் தேர்ந்தெடுத்தார். இப்போட்டியில் விண்ணப்பித்த பத்தாயிரம் பேரில் ஒன்பதாவதாக வெற்றிபெற்று வு பள்ளியில் இடம்பிடித்தார். [6]
1929 -இல் வு வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றதால் நான்சியாங்கில் உள்ள தேசிய மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அரசு விதிகளின் படி ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் ஒரு வருடம் ஆசிரியராக வேலை செய்ய வேண்டும். ஆனால் வு-வைப் பொறுத்தவரையில் இது ஒரு பெயரளவான நடைமுறை மட்டுமாகவே இருந்தது. வு சாங்காய் நகரில் இருந்த ஒரு அரசுப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து, கற்பித்தலில் ஈடுபட்டார். இப்பள்ளியின் தலைவராகவும் தத்துவவாதியாகவும் இருந்த ஹூ ஷி என்பவருடைய வகுப்புக்கு இவர் கற்பித்தலில் ஈடுபட்டார்.[7][8] 1930 முதல் 1934 வரை வு, தைவானில் தேசிய மத்திய பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னாளில் இது நான்சிங் பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது. முதலில் கணிதப்பாடத்தைத் தேர்ந்தெடுத்த வு பின்னர் இயற்பியலுக்கு மாறினார்.[9]
பயிலும் போதே வு மாணவர் அரசியலில் ஈடுபட்டார். இந்த சமயத்தில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவியது. மாணவர்கள் ஜப்பானுடனான ஒரு வலுவான கொள்கையைக் கொண்டுவர அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள்.வார்ப்புரு:SFN உடன் படித்த மாணவர்கள் தங்களின் மாணவர் தலைவர்களில் ஒருவராக வு வைத் தேர்வு செய்தவனர். ஏனெனில், வு பல்கலைக் கழகத்தின் சிறந்த, முதன்மை மாணவராக விளங்கினார். ஆனால், இவருடைய மாணவர் தலைமைச் செயல்பாடுகள் உயரதிகாரிகளால் கண்டுகொள்ளப்படவில்லை அல்லது புறக்கணிக்கப்பட்டது எனக் கொள்ளலாம். ஆனாலும் வு தனது படிப்பில் மிகவும் கவனமாக இருந்தார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chiang, T.-C. (27 November 2012). "Inside Story: C S Wu – First Lady of physics research". CERN Courier. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் April 5, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hammond 2007, ப. 1.
- ↑ Benczer-Koller, Noemie (2009). "Chien-Shiung Wu, 1912–1997" (PDF). National Academy of Sciences.
- ↑ McGrayne 1998, ப. 254–260.
- ↑ Wang 1970–80, ப. 364.
- ↑ Chiang 2014, ப. 11.
- ↑ Chiang 2014, ப. 15–19.
- ↑ "吴健雄" (in சீனம்). China Network. Archived from the original on நவம்பர் 3, 2015. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 16, 2015.
- ↑ Weinstock, M. (October 15, 2013). "Chien-Shiung Wu: Courageous Hero of Physics". Scientific American. http://blogs.scientificamerican.com/guest-blog/2013/10/15/channeling-ada-lovelace-chien-shiung-wu-courageous-hero-of-physics/. பார்த்த நாள்: October 17, 2013.
- ↑ Benczer-Koller, Noemie (2009). "Chien-Shiung Wu 1912–1997". Biographical Memoirs (National Academy of Sciences). http://www.nasonline.org/publications/biographical-memoirs/memoir-pdfs/wu-chien-shiung.pdf. பார்த்த நாள்: 5 May 2015.