சியாமாமணி தேவி

இந்தியாவின் ஒடிசி இசைக் கலைஞர்

சியாமாமணி தேவி (Shyamamani Devi) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய ஒடிசி இசையின் குரு, பாடகர் இசையமைப்பாளர் என பன்முகங்களில் புகழ்பெற்ற ஓர் இசைக்கலைஞர் ஆவார். 1938 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சிங்கரி சியாமசுந்தர் கர் மற்றும் சங்கீத சுதாகர பாலகிருட்டிண தாசு ஆகியோரிடம் சீடராக இசையை கற்றார். இடைக்கால ஒடியா இசைக்கலைஞர்களான உபேந்திரா பஞ்சா, கவிசூர்ய பலதேவ ராதா, வனமாலி தாசா, கோபாலகிருட்டிணா போன்ற கவிஞர்களால் எழுதப்பட்ட ஒடிசி, சந்தா, சம்பு போன்ற பாரம்பரிய ஒடிசி இசையின் பிரபலமான பாடல்களுக்காக தேவி பரவலாக அறியப்பட்டார். பாரம்பரிய ஒடிய நாட்டுப்புற இசை மற்றும் அதுனிகா பாடல்கள் போன்ற இலகுவான இசைப்பாடல்களாலும் தேவி நன்கு அறியப்பட்டார். ஒடிசி இசைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 2022 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1] [2]

கோகிலா காந்தி
சியாமாமணி தேவி
Shyamamani Devi
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ଶ୍ୟାମାମଣି ଦେବୀ
இயற்பெயர்சியாமாமணி பட்நாயக்
பிறப்பு(1938-12-21)21 திசம்பர் 1938
பங்கி, கட்டக், ஒடிசா
இசை வடிவங்கள்ஒடிசி இசை
தொழில்(கள்)ஒடிசி இசை குரு, பாடகர் மற்றும் இசையமைப்பாளர்

2018 ஆம் ஆண்டில், திரைப்படத் தயாரிப்பாளர் சந்தோசு கவுர், இவரது வாழ்க்கையை மையமாக வைத்து "சியாமாமணி தேவி - ஒடிசி பாரம்பரியப் பாடகர்" என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படத்தை இயக்கினார். [3] [4]

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • ஒரிசா சங்கீத நாடக அகாடமி விருது (1994) [5]
  • சண்டிகர் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2004)
  • உத்கல் கலாச்சார பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் (2012)
  • குரு கோபால் பாண்டா ஒடிசி அகாடமியின் குரு சிங்காரி விருது (2014) [6]
  • குரு சகதேவ் பதி நினைவு விருது (2016)
  • சர்யன் (2017) வழங்கிய குரு கேளுச்சரண மகோபாத்திரா விருது [7]
  • குரு தேவபிரசாத் தாசு அறக்கட்டளையின் தேவ பிரசாத் தாசு விருது (2018) [8]
  • கபி சாம்ராட் உபேந்திர பஞ்சா விருது (2019) [9] [10]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Here's the list of Padma Awardees from Odisha for this year" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  2. "Padma Awards 2022: Six from Odisha to get Padma Shri, Pratibha Ray to get Padma Bhushan". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  3. "Documentaries get a fillip at film fest - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  4. "DOCU FILM FEST BEGINS AMID HUGE FERVOUR". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-09-29. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  5. "Odisha Sangeet Natak Akademy Award Winners (1970-2012)". Odisha Reference Annual - 2011 (Government of Odisha): 104–108. 2011. http://magazines.odisha.gov.in/orissaannualreference/ORA-2011/pdf/104-108.pdf. 
  6. Oct 15, TNN / Updated:; 2014; Ist, 12:33. "Odissi ragas take centre stage at concert | Bhubaneswar News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-25. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  7. "Guru Kelucharan Mohapatra Awards 2017 announced | OdishaChannel.com" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  8. "Debaprasad Utsav to honour Odissi exponent". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  9. "Shyamamani Devi, Upendra Panigrahi To Get Upendra Bhanja Award". Odisha Bytes (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-26. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  10. "Odissi vocalist Shyamamani Devi, Daskathia artiste Upendra Kumar Panigrahi honoured". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமாமணி_தேவி&oldid=3519979" இலிருந்து மீள்விக்கப்பட்டது