சியாம் சுந்தர் சக்ரவர்த்தி

இந்திய அரசியல்வாதி

சியாம் சுந்தர் சக்ரவர்த்தி (Shyam Sundar Chakravarthy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர், சுதந்திர ஆர்வலர், என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். சியாம் சுந்தர் சக்கரவர்த்தி என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சூலை மாதம் 12 ஆம் தேதியன்று தற்போது வங்காளதேசத்திலுள்ள பப்னா நகரத்தின் பரெங்காவில் இவர் பிறந்தார்.

அபினாசு சக்ரவர்த்தி மற்றும் அன்னதா கவிராச்சு ஆகியோருடன் சேர்ந்து வங்காள புரட்சியாளர்களின் "பாப்னா குழு" என்ற இயக்கத்தைச் சேர்ந்தவராக இவர் இயங்கினார். [1] வங்காளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவர் 1905 ஆம் ஆண்டில் சந்தியா என்ற புரட்சிப் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் இருந்தார். 1906 ஆம் ஆண்டில், வங்காள தேசியவாத செய்தித்தாள் வந்தே மாதரத்தில் அதன் ஆசிரியரான சிறீ அரவிந்தோவின் உதவியாளராக சேர்ந்தார், பின்னர் அப்பத்திரிகையின் ஆசிரியரானார். [2] 1908 ஆம் ஆண்டில் சியாம் சுந்தர் சக்கரவர்த்தி பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.[3] பின்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசின் வன்முறையற்ற முறைகளைப் பின்பற்றும் அகிம்சைவாதியாக சுயராச்சியக் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக ஆனார். ஒத்துழையாமை இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக 1920 ஆம் ஆண்டில் "தி சர்வண்ட்" என்ற செய்தித்தாளை நிறுவி அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. Guha, Arun Chandra (1971). First spark of revolution: the early phase of India's struggle for independence, 1900-1920. Orient Longman. பக். 214–216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780883860380. https://books.google.com/books?id=3oi6yfbzEGMC&q=pabna+group. 
  2. "Bande Mataram". sankalpindia. 17 July 2008. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
  3. Political Agitators in India. பக். 8. https://archive.org/stream/politicalagitato00slsnuoft#page/10/mode/2up. 
  4. Sharma, Jagdish Saran (1981). Encyclopaedia Indica, Volume 2. S. Chand. பக். 1121. https://books.google.com/books?id=hWtDAAAAYAAJ&q=%22Shyam+Sundar+Chakravarty%22. 
  5. Gandhi, Gopalkrishna; Amartya Sen (2008). A frank friendship: Gandhi and Bengal : a descriptive chronology. Seagull Books. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-905422-63-0. https://books.google.com/books?id=VrkVAQAAIAAJ&q=%22Shyam+Sundar+Chakravarty%22.