சியாம் (இசையமைப்பாளர்)
சியாம், சாமுவேல்,ஜோசப், ( Shyam) (பிறப்பு 19 மார்ச் 1937) என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மலையாள இசையமைப்பாளர் ஆவார். இவர் 1970களின் நடுப்பகுதியிலிருந்து 1980களின் பிற்பகுதி வரை, மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக, ஏறத்தாழ 200 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அக்காலத்தின் அனைத்து முதன்மை இயக்குநர்களுடனும் பணிபுரிந்த இவர், ஜெயனின் பல வெற்றிப் படங்களுக்கும், மம்முட்டி, மோகன்லாலின் ஆரம்பகால திரைப்படங்களுக்கும் இசையமைத்தார்.[1]
சியாம் | |
---|---|
இயற்பெயர் | சாமுவேல் ஜோசப் |
பிற பெயர்கள் | ஷியாம் |
பிறப்பு | 19 மார்ச்சு 1937 |
பிறப்பிடம் | கிண்டி, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம், வயலின் |
இசைத்துறையில் | 1963 – நடப்பு |
தொழில்
தொகுஇசை மேதைகள் எம். எஸ். விஸ்வநாதன், சலில் சௌதுரி ஆகியோரிடம் சியாம் பயிற்சி பெற்றார்.[2] அவர்கள் இருவரும் இவருக்கு 'ஷியாம்' என்று பெயர் மாற்றினர். இவர் வயலின் கலைஞராக பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜனுடன் பணியாற்றினார்.
1974 ஆம் ஆண்டு வெளியான மன்யஸ்ரீ விஸ்வாமித்திரன் திரைப்படத்தில் மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]
திரைப்படப் பட்டியல்
தொகு- கருந்தேள் கண்ணாயிரம் (1972)
- அப்பா அம்மா (1974)
- உணர்ச்சிகள் (1976)
- மனிதரில் இத்தனை நிறங்களா! (1978)
- அல்லி தர்பார் (1978)
- தேவதை (1979)
- தேவைகள் (1979)
- பஞ்ச கல்யாணி (1979)
- நீ சிரித்தால் நான் சிரிப்பேன் (1979)
- நான் நன்றி சொல்வேன் (1979)
- ஸ்ரீ தேவி (1980)
- மற்றவை நேரில் (1980)
- அந்தி மயக்கம் (1981)
- மற்றவை நேரில் (1981)
- கல் வடியும் பூக்கள் (1981)
- கண்ணீரில் எழுதாதே (1981)
- சலனம் (1981)
- வா இந்தப் பக்கம் (1981)
- புனித மலர் (1982)
- இதயம் பேசுகிறது (1982)
- குப்பத்து பொண்ணு (1983)
- நன்றி மீண்டும் வருக (1983)
- ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது (1983)
- குழந்தை யேசு (1984)
- குயிலே குயிலே (1984)
- நலம் நலமறிய ஆவல் (1984)
- சந்தோஷக் கனவுகள் (1985)
- விலங்கு மீன் (1987)
- ஜாதிப்பூக்கள் (1987)
- பூ மழை பொழியுது (1987) (பின்னணி இசை மட்டும்)
- விலங்கு
- ஊஞ்சல்
- நீ சிரித்தாள் நான் சிரிப்பேன்
- வேலைக்காரி விஜயா
- இனியவளே வா
- கண்ணீரில் எழுதாதே
- பாசம் ஒரு வேசம்
- குயிலே குயிலே
- நான் நன்றி சொல்வேன்
- இது கதை அல்ல
- குங்கும கோலங்கள்
- அக்கரைக்கு வரீங்களா
- இதயம் பேசுகிறது
- காலடி ஓசை
- அந்த வானம் சாட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Play it again, Shyam". தி இந்து. 2003-10-27. Archived from the original on 2004-01-17. Retrieved 2016-12-01.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "On a musical trip down memory lane". The Hindu. Retrieved 2016-12-01.
- ↑ Balasubramanian, V. (9 June 2016). "Of song and spirit". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/music/shyaam-aka-t-samuel-joseph-goes-down-memory-lane/article8709686.ece.