சியா லா கணவாய்

சியா லா கணவாய் (Sia La) என்பது இமயமலையிலுள்ள காரகோரம் மலைத்தொடரின் துணை மலைத் தொடரான சால்டோரா முகட்டின் மேல் அமைந்துள்ளது. 1972-இல் இந்தியா மற்றும் பாகித்தானுக்கு இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் படி[2] என்.யே9842 என்ற வரைபடப்புள்ளிக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு-வடமேற்கில் இக்கணவாய் வரையறுக்கப்பட்டுள்ளது. சிம்லா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இவ்விரு நாடுகளுக்கிடையில் 1972 எல்லைக்கோடு கட்டுப்பாட்டு முடியும் பகுதி என்று இக்கணவாய் வரையறுக்கப்பட்ட்து. சியா லா கணவாய் சீன எல்லைக்கு அருகிலும் மற்றும் வடமேற்கு சியாசின் பனிமலையின் மேற்பகுதிக்கு மிக அருகிலும் அமைந்திருக்கிறது. சியாசென் பனிமலை, பாகித்தான் கட்டுப்பாட்டிலுள்ள கோண்டூ பனிமலையையும் மற்றும் மேற்கிலுள்ள பள்ளத்தாக்கையும் இணைக்கிறது.

சியா லா
ஏற்றம்5,589 மீ (18,337 அடி)
அமைவிடம்சம்மு மற்றும் காசுமீர், இந்தியா [1]
மலைத் தொடர்கிழக்கு காரகோரம் மலைத்தொடர்
ஆள்கூறுகள்35°34′55″N 76°47′33″E / 35.58194°N 76.79250°E / 35.58194; 76.79250
ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டு கோட்டின் வரைபடம். NJ 980420-வின் வடக்கில் பிலாபாண்ட் லா மற்றும் சியா லா பார்க்க முடிகிறது.

பூகோள அரசியல் பிரச்சனைகள்

தொகு

சியாச்சின் பனியாறை பிடிக்கும் இந்திய இராணுவத்தின் மேகதூது இராணுவ செயல்முறையின் போது சியா லா கணவாய் மட்டுமல்லாது, அதன் அருகிலுள்ள கயாங் லா மற்றும் பிலாபாண்ட் லா கணவாய்களிலும் இராணுவ நடவடிக்கைகள் 1984- ஆம் ஆண்டில் துவங்கின. இது சியாசென் பூசலில் ஏற்பட்ட முதல் இராணுவ நடவடிக்கையும் மற்றும் மிகப் பெரிய காசுமீர் பூசலின் ஒரு பகுதியும் ஆகும். இந்த கணவாய்கள் அனைத்தும் தற்போது இந்தியா வசம் உள்ளது[3]. மேற்கு திசைக்கு அருகில் பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. India is in de facto control of this region of Kashmir; the Indian claim is disputed by Pakistan. See e.g. The Future of Kashmir on the பிபிசி website.
  2. The fight for Siachen
  3. Barua, Pradeep P. (30 June 2005). The State at War in South Asia (Studies in War, Society, and the Military). University of Nebraska Press. pp. 253–255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-1344-9. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா_லா_கணவாய்&oldid=3520906" இலிருந்து மீள்விக்கப்பட்டது