சிரத்தா ஜாதவ்

இந்திய அரசியல்வாதி

சிரத்தா ஜாதவ் (Shraddha Jadhav) (பிறப்பு 1964கள்) மகாராட்டிராவின் மும்பையைச் சேர்ந்த சிவ சேனா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 1 திசம்பர் 2009 முதல் 8 மார்ச் 2012 வரை மும்பை நகரத்தின் நகரத் தந்தையாகவும், நாட்டின் பணக்கார நகராட்சி அமைப்பான பெருநகரமும்பை மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.[1][2] இவர் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.[3] 1992 முதல் 2017 வரை தொடர்ந்து ஆறு முறை பெருநகர மும்பை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

சிரத்தா ஜாதவ்
श्रद्धा जाधव
மும்பையின் நகரத் தந்தை
பதவியில்
1 திசம்பர் 2009 – 8 மார்ச் 2012
முன்னையவர்சுபா ரவுல்
பின்னவர்சுனில் பிரபு
தொகுதிபகுதி 202, மும்பை
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா
துணைவர்சிறீதர்
பிள்ளைகள்பவன் , கோவிந்த் சாகர்
வாழிடம்பரேல் , மும்பை

சொந்த வாழ்க்கை

தொகு

சிரத்தா முதலில் மகாராட்டிராவின் கொங்கண் பகுதியில் உள்ள சங்கமேசுவரத்தைச் சேர்ந்தவர்.[5]

சிறீதர் ஜாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு பவன், கோவிந்த் சாகர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[5] இவர் தற்போது பரேலில் வசிக்கிறார்.[5]

இவரது மாமனார், முகுந்த் ஜாதவ், இவரது அரசியல் வழிகாட்டியாகவும் இருந்தார்.[5] இவரது குடும்பத்தினர் சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இது இவரது கணவரால் நடத்தப்படுகிறது. சிரத்தா 2007இல் பெருநகர மும்பை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பணக்கார உறுப்பினர்களில் ஒருவர்.[5]

அரசியல் வட்டாரங்களில், ஜாதவ் "நேர்த்தியான உடை" அணிவதிலும் "அழகாகத் தோற்றமளிப்பதற்கும்", குறிப்பாக தனது "மிருதுவான" பருத்திப் புடவைகளுக்கு பெயர் பெற்றவர்.[5][6]

அரசியல் வாழ்க்கை

தொகு

1992 இல், சிரத்தா முதன்முதலில் பரேல் பகுதி 36இலிருந்து ஒரு சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] அடுத்த இரண்டு பெருநகர மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தல்களில் இவர் அதே பகுதியில் வெற்றி பெற்றார். 1997ஆம் ஆண்டில், இவர் சிவசேனா கட்சியி சேர்ந்தார், 1998இல், அப்போதைய மும்பை நகரத் தந்தையான நந்து சதத்தின் 11 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 2006இல், மகாராட்டிரா சட்டமன்ற இடைத்தேர்தலில் நாராயண் ராணேவின் நெருங்கிய உதவியாளர் காளிதாஸ் கோலாம்ப்கரை எதிர்த்து போட்டியிட்டார்.[6] 2007ஆம் ஆண்டில், இவர் பரேல் , அன்டோப் ஹில் உள்ளடக்கிய பகுதி 169இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாதவ் 1 திசம்பர் 2009 அன்று மும்பை நகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் , 228 உறுப்பினர்களைக் கொண்ட பெருநகர மும்பை மாநகராட்சியில் 114 வாக்குகள் பெற்று 96 வாக்குகள் பெற்ற காங்கிரசு கட்சியின் பிரிசில்லா கடத்தைதோற்கடித்தார். சிவசேனா - பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியின் கூட்டு வேட்பாளராக இருந்தார்.[8][9] சிவசேனாவைச் சேர்ந்த மற்றொரு பெண் நகரத் தந்தையான சுபா ரவுலுக்குப் பிறகு இவர் மும்பையின் ஐந்தாவது பெண் நகரத் தந்தையானார்.[10]

சிரத்தா தோட்டங்கள் மற்றும் சந்தைக் குழுக்கள் , பெருநகர மும்பை மாநகராட்சியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கும் தலைமை தாங்கினார். இவர் நிலை மற்றும் மேம்பாட்டு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். 2010 உலக நகரத் தந்தை பரிசுக்கான 25 இறுதிப் போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.[11]

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. ET Bureau (2 December 2009). "Shiv Sena retains Mumbai mayor post". தி எகனாமிக் டைம்ஸ். http://economictimes.indiatimes.com/news/politics/nation/Shiv-Sena-retains-Mumbai-mayor-post/articleshow/5290138.cms. பார்த்த நாள்: 2 December 2009. 
  2. Desai (9 March 2012). "Shiv Sena all set to elect new mayor". DNA India. http://www.dnaindia.com/mumbai/report_shiv-sena-all-set-to-elect-new-mayor_1659987. பார்த்த நாள்: 9 March 2012. 
  3. Press Trust of India (1 Dec 2009). "Sena retains Mumbai bastion; Jadhav is Mayor". DNA. http://www.dnaindia.com/mumbai/report_sena-retains-mumbai-bastion-jadhav-is-mayor_1318893. பார்த்த நாள்: 1 December 2009. 
  4. "Ex-Shiv Sena Mayor Shraddha Jadhav wins consecutively for 6th time". http://m.dailyhunt.in/news/india/english/news24online-epaper-newsonline/bmc+polls+2017+ex+shiv+sena+mayor+shraddha+jadhav+wins+consecutively+for+6th+time-newsid-64236758. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "From novice to Mumbai's first citizen". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2 December 2009 இம் மூலத்தில் இருந்து 20 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020010506/http://www.hindustantimes.com/india-news/mumbai/from-novice-to-mumbai-s-first-citizen/article1-482142.aspx. பார்த்த நாள்: 28 September 2014. 
  6. 6.0 6.1 6.2 6.3 Times News Network (2 December 2009). "My priority is to save water, says Jadhav". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Mumbai). 
  7. Press Trust of India (1 Dec 2009). "Sena retains Mumbai bastion; Jadhav is Mayor". DNA. http://www.dnaindia.com/mumbai/report_sena-retains-mumbai-bastion-jadhav-is-mayor_1318893. பார்த்த நாள்: 1 December 2009. 
  8. ET Bureau (2 December 2009). "Shiv Sena retains Mumbai mayor post". தி எகனாமிக் டைம்ஸ். http://economictimes.indiatimes.com/news/politics/nation/Shiv-Sena-retains-Mumbai-mayor-post/articleshow/5290138.cms. பார்த்த நாள்: 2 December 2009. 
  9. "Shiv Sena's Shraddha Jadhav is new Mumbai mayor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 December 2009. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Shiv-Senas-Shraddha-Jadhav-is-new-Mumbai-mayor/articleshow/5287672.cms. பார்த்த நாள்: 1 December 2009. 
  10. "Shraddha Jadhav is the fifth woman Mayor in Mumbai". டைம்ஸ் நவ். 1 December 2009 இம் மூலத்தில் இருந்து 26 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120226092316/http://www.timesnow.tv/Shraddha-Jadhav-is-the-fifth-woman-Mayor-in-Mumbai/articleshow/4333316.cms. பார்த்த நாள்: 1 December 2009. 
  11. "Twenty-five mayors from across the world competed for the 2010 World Mayor Prize". World Mayor. 7 December 2010. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரத்தா_ஜாதவ்&oldid=3920528" இலிருந்து மீள்விக்கப்பட்டது