சிரம்பான் மாநகராட்சி

சிரம்பான் மாவட்டத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி

சிரம்பான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Seremban; ஆங்கிலம்: Seremban City Council); (சுருக்கம்: MBS) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில்; சிரம்பான் மாநகரத்தையும்; சிரம்பான் மாவட்டத்தையும் நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.

சிரம்பான் மாநகராட்சி
Seremban City Council
Majlis Bandaraya Seremban
மரபு சின்னம் அல்லது சின்னம்
சிரம்பான் மாநகராட்சி சின்னம்
வகை
வகை
மாநகர் மன்றம்
வரலாறு
தோற்றுவிப்பு1897
முன்பு1. பொதுத் தூய்மைக் கழகம்
(Sanitary Board)
2. சிரம்பான் நகராட்சி
(Seremban Town Council)
தலைமை
நகர முதல்வர்
மசுரி ரசாலின்
Dato' Masri bin Razali
23 சூலை 2021
கூடும் இடம்
சிரம்பான் மாநகராட்சி தலைமையகம்
Majlis Bandaraya Seremban, Wisma MBS, Persiaran Forest Heights 1, Jalan Seremban-Tampin 70450 Seremban, Negeri Sembilan சிரம்பான், நெகிரி செம்பிலான்
வலைத்தளம்
www.mbs.gov.my
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976
அடிக்குறிப்புகள்
2020 சனவரி 1-ஆம் தேதி சிரம்பான் நகராட்சியும்; நீலாய் நகராட்சியும் ஒன்றிணைக்கப் பட்டன.[1][2]

இந்த மாநகராட்சி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.

வரலாறு

தொகு

வளர்ச்சிப் படிகள்

தொகு

பொது

தொகு

சிரம்பான் மாநகராட்சி முதல்வரும்; சிரம்பான் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப் படுகின்றனர்.

இந்த மாநகராட்சியின் நோக்கம்; சிரம்பான் மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[5].

அமைவு

தொகு

சிரம்பான் மாநகராட்சி, சிரம்பான் மாவட்டத்தை முழுவதுமாக உள்ளடக்கியது. அதன் எல்லைகளாக உள்ள இடங்கள்:

சிரம்பான் மாநகராட்சி தமிழ்ப்பள்ளிகள்

தொகு

சிரம்பான் மாநகராட்சிக்குள் சிரம்பான் மாவட்டம் அமைந்து உள்ளது. அந்த வகையில் 19 தமிழ்ப்பள்ளிகள் சிரம்பான் மாநகராட்சியின் கவனிப்பில் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]

இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
சிரம்பான் SJK(T) Convent Seremban
(Kompleks Wawasan)
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி
மலேசியத் தொலைநோக்கு பள்ளி
சிரம்பான் 642 43
சிரம்பான் SJK(T) Lorong Java லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி சிரம்பான் 693 51
சிரம்பான் SJK(T) Jalan Lobak ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி சிரம்பான் 389 33
நீலாய் SJK(T) Nilai நீலாய் தமிழ்ப்பள்ளி நீலாய் 537 40
நீலாய் SJK(T) Ladang Batang Benar பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி நீலாய் 57 11
கெர்பி தோட்டம் SJK(T) Ladang Kirby கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி லாபு 38 10
குபாங் தோட்டம் SJK(T) Ladang Kubang குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி சிரம்பான் 35 10
நீலாய் SJK(T) Desa Cempaka டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி நீலாய் 99 10
மந்தின் SJK(T) Ldg Cairo கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மந்தின் 163 18
லாபு SJK(T) Labu Bhg 1 லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1 சிரம்பான் 45 11
லாபு SJK(T) Ladang Labu Bhg 4 லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4 லாபு 23 10
செனவாங் SJK(T) Ladang Senawang செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி சிரம்பான் 543 42
சிரம்பான் தோட்டம் SJK(T) Ladang Seremban சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி சிரம்பான் 565 44
கோம்போக் தோட்டம் SJK(T) Ladang Kombok[7][8] கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி ரந்தாவ் 60 14
ரந்தாவ் SJK(T) Rantau[9][10] ரந்தாவ் தமிழ்ப்பள்ளி ரந்தாவ் 293 28
சங்காய் சிரம்பான் தோட்டம் SJK(T) Ladang Shanghai Seremban சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி சிரம்பான் 169 15
பாஜம் SJK(T) Tun Sambanthan[11] துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மந்தின் 229 27
செமினி
Makhota Hills
SJK(T) Ladang Lenggeng லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி லெங்கெங் 82 11
பண்டார் ஸ்ரீ செண்டாயான் SJK(T) Bandar Sri Sendayan பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
பண்டார் ஸ்ரீ செண்டாயான் 192 17

மேற்கோள்கள்

தொகு
  1. "Seremban Municipal Council". Archived from the original on 11 December 2019.
  2. "Nilai Municipal Council". Archived from the original on 8 December 2019.
  3. "Latar Belakang".
  4. "Background".
  5. Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987
  6. "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  7. "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  8. "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK". sjktladangkombok.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  9. "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU". பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  10. "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  11. "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி". sjkttunsambanthanpajam.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரம்பான்_மாநகராட்சி&oldid=3811774" இலிருந்து மீள்விக்கப்பட்டது