சிரவணம் அல்லது கேட்டல் எனில் உபநிடதம் மற்றும் வேதாந்த வாக்கியங்களை செவிகளால் கேட்பது என்று மட்டும் பொருள் அல்ல. குரு கற்றுத் தரும் உபநிடத வேதாந்த வாக்கியங்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பகுத்தாராய்ந்து தருக்கம், யுக்தி, அனுமானம் போன்ற பிரமாணங்கள் மூலம் பொருள் விளங்குமாறு கேட்டலே சிரவணம் ஆகும்.

உபநிடத, வேதாந்த வாக்கியங்களை ஆறு (ஷட்) வகையான லிங்கங்கள் (அடையாளங்கள்) மூலம் அனைத்து வேதாந்த உபநிடதங்களுக்கும் இரண்டற்ற வஸ்துவான பிரம்மமே அடிப்படையானது என்று உறுதிப்படுத்திக் கொள்வதே சிரவணம் ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரவணம்&oldid=3913649" இலிருந்து மீள்விக்கப்பட்டது