நிதித்யாசனம்
நிதித்யாசனம் என்பது ஒரு வகை தியானமாகும். மெய்ப்பொருளிலிருந்து வேறானதாக உள்ள உடல் போன்றவற்றைக் குறித்த எண்ணங்கள் இல்லாமல், அந்த இரண்டற்ற பரம்பொருளைக் குறித்த ஒருமித்த எண்ணத்தின் தொடர்ந்த மன ஓட்டமே நிதித்யாசனம் ஆகும்.[1]
தியானத்தில் வஸ்துவை (பிரம்மம்) நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வதுதான் தியானம் என்கிறார் பதஞ்சலி முனிவர் [2] [3]அந்தத் தியானமானது நிதித்தியாசனமாக மாற வேண்டுமெனின் உடல், மனம் மற்றும் ஐம்புலன் விசயப் பொருட்கள், பிரம்மத்திலிருந்து வேறுபட்டுள்ள பொருள்களை விடுத்து பிரம்மத்தின் உருவைப் பெற்று இடைவிடாமல் பாய்ந்து தியானித்துக் கொண்டு ஞான நிஷ்டையில் இருக்கவேண்டும்.
ஞானநிஷ்டை (தன்னில் மனநிறைவு) அடைய விஷய சுகங்களைத் துறந்து, தனிமையில் ஆத்மாவைத் தியானிப்பதே நிதித்யாசனம் ஆகும். ஒருவன் கர்மத்தினால் கிடைக்கும் பாவ - புண்ணியங்களையும், அகங்காரத்தையும் துறந்து பகவானை மட்டும் சரணாகதி அடைந்து, பகவானைப் பற்றிய அறிவை (ஞானத்தை) அடைந்தவன் உலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைகிறான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.poornalayam.org/classes-recorded/introduction/introduction-to-vedanta/
- ↑ Patanjali Yoga Sutra 3. 2
- ↑ பதஞ்சலி யோக சூத்திரம் [1]