சிராலா என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும் . இந்த நகரம் ஒரு நகராட்சி மற்றும் ஓங்கோல் வருவாய் பிரிவின் சிரால மண்டலத்தின் தலைமையகம் ஆகும்.[1][2] 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பு நிலவரப்படி இது 250,000 க்கும் அதிகமான மக்கட் தொகையைக் கொண்டிருந்தது.[3] பாபட்லா லோக் ஷாபா நாடாளுமன்றத் தொகுதியில் அதிக மக்கட் தொகை கொண்ட நகரமாக சிராலா விளங்குகின்றது.

சொற்பிறப்பியல்தொகு

இந்த நகரம் க்ஷிராபுரி என்றும் அழைக்கப்பட்டது. இது பால் நகரம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சிரா என்றால் புடவை என்று பொருள்படுவதால் சிராலா என்று பெயர் மாற்றப்பட்டது.[4] நகரமும் சுற்றுப்புறங்களும் உயர்தர கை-தறித் தொழிலில் அறியப்பட்ட பகுதிகளாகும்.

புவியியல்தொகு

இந்த நகரம் 15.8246 ° வடக்கு 80.3521 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளன. மேலும் சிராலா நகரம் வங்காள விரிகுடாவின் கடற்கரையிலிருந்து 3 மீ (9.8 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[5]

காலநிலைதொகு

சிராலா நகரம் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நகரின் சராசரி ஆண்டு வெப்பநிலை 28.5 °C (83.3 °F) ஆகும். வங்காள விரிகுடா கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதால் வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலம் காணப்படுகிறது. இது தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை இரண்டையும் பெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 200 மில்லிமீற்றர் (8 அங்குலம்) மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 197 மில்லிமீற்றர் (8 அங்குலம்) மழை வீழ்ச்சி பதிவாகும்.[6]

நிர்வாகம்தொகு

சிராலா நகராட்சி என்பது நகரத்தின் குடிமை நிர்வாகக் குழுவாகும். இது முதல் தர நகராட்சியாகும். நகராட்சி 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று அமைக்கப்பட்டது. மேலும் 13.57 கிமீ 2 (5.24 சதுர மைல்) பரப்பளவில் 33 தேர்தல் வார்டுகளைக் கொண்டுள்ளது.[7]

புள்ளிவிபரங்கள்தொகு

2011 ஆம் ஆண்டி இந்தய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 172,826 மக்கட் தொகையையும், 23,070 குடும்பங்களையும் இந் நகரம் கொண்டிருந்தது.[8] மக்கட் தொகை வளர்ச்சி 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்போடு ஒப்பிடும்போது 2.04% வீத வளர்ச்சியைக் காட்டுகிறது. மக்கட் தொகை 85,455 ஆக பதிவாகியுள்ளது.[9] மொத்த மக்கட் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 42,927 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 44,273 ஆகவும் காணப்படுகின்றது. 1000 ஆண்களுக்கு 1031 பெண்கள் என்ற பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியான 1000 க்கு 940 ஐ விட அதிகமாகும். மக்கட் தொகையில் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 8,389 ஆகும். அவர்களில் 4,253 சிறுவர்களும், 4,136 சிறுமிகளும் அடங்குவர். 1000 சிறுவர்களுக்கு 973 சிறுமிகள் என்ற பாலின விகிதம் காணப்படுகின்றது. சராசரி கல்வியறிவு விகிதம் 78.80% ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 73.00% ஐ விட அதிகமாகும்.[1][10]

சிராலாவின் நகர்ப்புற ஒருங்கிணைப்பு மக்கட் தொகை 162,471 ஆகும்.[11]

பொருளாதாரம்தொகு

கைத்தறி நெசவுத் தொழில் நகரத்தின் முக்கிய தொழிலாகும்.[12] சிராலாவில் பல துணி சந்தை வளாகங்கள் அமைந்துள்ளன. சூரத், பம்பாய், குவாலியர் ஆகிய பகுதிகளில் இருந்து ஜவுளி தொழிற்சாலைகள் இந்த சந்தைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்குகின்றன. சிராலா ஜவுளி கடைகளில் துணி மிகவும் மலிவானது. சிராலா சிறிய பம்பாய் என்றும் அழைக்கப்படுகிறது.

சிராலாவின் கடற்கரைகள் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். இந் நகரத்தின் வதேரேவ் கடற்கரை, ராமாயப்பட்டின கடற்கரை என்பன சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பிரபலாமான கடற்கரைகளாகும். ஐதராபாத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகைத் தருகின்றனர்.

வதேரேவ் கடற்கரை ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவுக்கு அருகில் மச்செர்லா மற்றும் நாகார்ஜுனா சாகர் பாதை வழியாக அடையக் கூடியதாக அமைந்துள்ளது.

சிராலாவில் ஐ.டி.சி தொழிற்சாலை காணப்படுகின்றது. அங்கு சிகரெட்டுகளின் மூலப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டு சிகரெட்கள் தயாரிக்கப்படுகின்றன.

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராலா&oldid=3053062" இருந்து மீள்விக்கப்பட்டது