சிரியா ஆறு
சிரியா ஆறு (Shiriya River) கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பாயும் ஒரு நதியாகும். [1]
சிரியா ஆறு 67 கிமீ நீளம் கொண்டது. கேரளாவின் பதினெட்டாவது நீளமான நதியாகவும், காசர்கோடு மாவட்டத்தில் பாயும் இரண்டாவது நீளமான நதியாகவும் அறியப்படுகிறது.[1] கடல் மட்டத்திலிருந்து 230 மீட்டர் உயரத்தில் கர்நாடகாவில் உள்ள தெற்கு கன்னடா மாவட்டத்தில் உள்ள அனேகுண்டி காப்புக்காட்டில் சிரியா ஆறு உருவாகிறது, முதன்மையாக மேற்கு திசையில் பாய்ந்து கேரளாவின் காசர்கோடு நகரத்திற்கு வடக்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிரியா நகருக்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. [1] [2] முகப்பில் இந்த நதி சிரியா மற்றும் கும்பலா நகரங்களுக்கு இடையே உள்ள உப்பங்கழியில் சேர்ந்து கும்பலா-சிரியா முகத்துவாரத்தை உருவாக்குகிறது.
கல்லஞ்சே தோடு, கன்னியா தோடு, எரமட்டி ஒல் மற்றும் கும்பளா ஆகியவை இந்த ஆற்றின் முக்கிய துணை ஆறுகளாகும். [1] [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Shiriya River and Yelkanna River, Reconnaissance Survey Report" (PDF). December 2017."Shiriya River and Yelkanna River, Reconnaissance Survey Report" (PDF). Tropical Institute of Ecological Sciences (TIES), Kerala. December 2017. Retrieved 2021-05-14.
- ↑ "District Census Handbook - Kasaragod District 2011" (PDF). Directorate of Census Operations-Kerala. 2011-10-01.
- ↑ "About the Rivers of Kerala". பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.