சிரேனிக் கஸ்தூர்பாய் லால்பாய்

சிரேனிக் கஸ்தூர்பாய் லால்பாய் (Shrenik Kasturbhai Lalbhai) (28 திசம்பர் 1925 - 19 சூன் 2014) இவர் ஓர் இந்திய தொழிலதிபரும், அறப்பணிகளை செய்து வந்தவருமாவார். இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்புகளை முடித்த பின்னர், பல தொழில்களில் பரவியிருக்கும் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான குடும்ப வணிகத்தில் சேர்ந்தார். பல கலாச்சார, கல்வி மற்றும் மத நிறுவனங்களின் ஆளும் குழுக்களிலும் பணியாற்றினார்.

சிரேனிக் கஸ்தூர்பாய் லால்பாய்
குசராத்தி விசுவகோசு அறக்கட்ளையில் சிரேனிக்
பிறப்பு(1925-12-28)28 திசம்பர் 1925
இறப்பு19 சூன் 2014(2014-06-19) (அகவை 88)
அகமதாபாத்
குடியுரிமைஇந்தியன்
கல்விஇரசாயனப் பொறியியல் மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலை
படித்த கல்வி நிறுவனங்கள்ராஞ்சோட்லால் சோட்டலால் அரசு உயர்நிலைப்பள்ளி, MIT, ஆர்வர்டு பல்கலைக்கழகம்
பணிதொழிலதிபர், கல்வியாளர், பரோபகாரர்
அமைப்பு(கள்)லால்பாய் குழும நிறுவனங்கள், அரவிந்த்
பெற்றோர்கஸ்தூரிபாய் லால்பாய், சாரதாபென்
வாழ்க்கைத்
துணை
பன்னாபென்
பிள்ளைகள்சஞ்சய், கல்பனா
உறவினர்கள்சாந்திதாசு சாவேரி

குடும்பம்

தொகு

இவர் அகமதாபாத்தின் நகரத்லைவர் குடும்பத்தில் பிறந்தார். மேலும் முகலாய பேரரசர்களின் அரச நகைக்கடை விற்பனையாளரான சாந்திதாஸ் சாவேரியின் நேரடி வம்சாவளியாக இருந்தார். [1] சாந்திதாசின் பேரனான குசால்சந்த் (1680–1748) 1725 இல் அகமதாபாத்தை கொள்ளையடிப்பதில் இருந்து காப்பாற்ற மராட்டியர்களுக்கு ஒரு தொகையை செலுத்தினார். குசால்சந்தின் மகன் வாகாத்சந்த் (1740-1814) ஒரு குறிப்பிடத்தக்க தொழிலதிபரும் ஆவார். [2]

இவரது தாத்தா தல்பத்பாய் பாகுபாய் 1870 களில் பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இவரது தாத்தா லால்பாய் தல்பத்பாய் (1863-1912) 1896 ஆம் ஆண்டில் சரசுபூர் பருத்தி ஆலை ஒன்றை நிறுவினார். இது குடும்பத்தின் விலைமதிப்பற்ற கற்கள் வணிகத்தில் பருத்தி பதப்படுத்தலையும் சேர்த்தது. [2] இவரது தந்தை கஸ்தூர்பாய் லால்பாய் ஒரு தொழிலதிபரும் தொண்டுப்பணிகளை செய்து வந்தவருமாவார். இவர், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அரசியலில் தீவிரமாக இருந்தார். கஸ்தூர்பாய் பல நிறுவனங்களின் இணை நிறுவனருமாவார். இறுதியில் அரவிந்த் ஆலைகள், அதுல் இரசாயனங்கள் மற்றும் அனில் மாவுப்பொருட்கள் உள்ளிட்ட லால்பாய் குழுமமாக மாறியது. [3] [4]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1925 திசம்பர் 28 அன்று கஸ்தூர்பாய் லால்பாயின் இளைய மகனாக இவர் பிறந்தார். நவி குசராத்தி சாலை மற்றும் அகமதாபாத்தில் உள்ள ராஞ்சோதாசு சோட்டலால் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். குசராத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்த இவர், பின்னர் இரசாயனப் பொறியியல் படிப்பதற்காக மாசாச்சூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்றார். அதிலிருந்து இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் 1948 இல் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் பன்னாபென் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு சஞ்சய் என்ற மகனும், கல்பனா என்ற மகளும் இருந்தனர். [5] [6] [7] [8] [9]

தொழில்

தொகு

கல்வியை முடித்த பின்னர், இவர் லால்பாய் குழும நிறுவனத்தில் சேர்ந்தார். முதல் ஐந்து ஆண்டுகளில், குடும்ப நிறுவனங்களின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தபோது, 1948-49ல் சட்டவிரோத சந்தைப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான அரசாங்க குற்றச்சாட்டுகளைத் தீர்க்க குழுவுக்கு உதவ இவர் கணிசமான நேரத்தை செலவிட்டார். [10] இறுதியில் தீபக் நைத்திரேட்டு நிறுவனம் மற்றும் பல லால்பாய் குழும நிறுவனங்களுக்கு தலைமை தாங்கினார். [11] நிர்மா நிறுவனம், அனுகுல் நிதியகம், ஏபிள் நிதியகம், அனிமேஷ் நிதியகம், சோனாலங்க் நிதியகம் மற்றும் குஜராத் தொழில்துறை முதலீட்டுக் கழகத்தின் இயக்குநராக பணியாற்றினார். [12] [9]

அகமதாபாத் கல்விச் சங்கம் , குசராத் விசுவகோசு அறக்கட்டளை, குசராத் கலைச்சங்கம், ஜெயின் விசா ஆசுவால் சங்கம், சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தேசிய வடிவமைப்பு நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, நிர்மா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி, கலாச்சார, தொழில்துறை மற்றும் மத அமைப்புகளின் பலகைகளில் இவர் பணியாற்றினார். பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம், அகமதாபாத், இந்திய மேலாண்மை கழகம் , அகமதாபாத் நெசவு நிறுவன ஆராய்ச்சி அமைப்பு, லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் மற்றும் சமண தொழில்நுட்ப நிறுவனம் போன்றவை. மேலும் இவர், சபர்மதி ஆசிரம பாதுகாப்பு மற்றும் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் பணியாற்றினார்.[9]

சமண மதத்தின் வரலாறு குறித்த நிபுணத்துவத்தை வளர்த்த இவர், ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளைக்கு தலைமை தாங்கினார். இது பாலிதான சமணக் கோவில்கள் உட்பட 1200 க்கும் மேற்பட்ட சமணக் கோவில்களை மீட்டெடுத்து பாதுகாத்து வருகிறது. [13] [14] [15]

இறப்பு

தொகு

லால்பாய் தனது வாழ்நாளில் தசைக் களைப்பு நோயால் அவதிப்பட்டார். அகமதாபாத்தின் பட் பகுதியில் அமைந்துள்ள கோட்டீசுவர் என்ற இடத்தில் தனது வீட்டில் 2014 சூன் 19, அன்று இறந்தார். இவரது உடல் தால்தேஜ் என்ற இடத்தில் தகன தகனம் செய்யப்பட்டது. [16] [17] [18]

குறிப்புகள்

தொகு
  1. Vora, Rutam. "Educationist, industrialist Shrenik Lalbhai dead" இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714190910/http://m.thehindubusinessline.com/news/educationist-industrialist-shrenik-lalbhai-dead/article6130150.ece/. 
  2. 2.0 2.1 Piramal, Gita (1999). Business Legends. Penguin Books India. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140271874.
  3. Vora, Rutam. "Educationist, industrialist Shrenik Lalbhai dead" இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714190910/http://m.thehindubusinessline.com/news/educationist-industrialist-shrenik-lalbhai-dead/article6130150.ece/. 
  4. "Sanjay Lalbhai's father Shrenik Lalbhai passes away". http://wap.business-standard.com/article/current-affairs/sanjay-lalbhai-s-father-shrenik-lalbhai-passes-away-114061900814_1.html. 
  5. "Educationist, industrialist Shrenik Lalbhai dead". 19 June 2014 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714190910/http://m.thehindubusinessline.com/news/educationist-industrialist-shrenik-lalbhai-dead/article6130150.ece/. பார்த்த நாள்: 1 July 2014. 
  6. "Sanjay Lalbhai's father Shrenik Lalbhai passes away". 19 June 2014. http://wap.business-standard.com/article/current-affairs/sanjay-lalbhai-s-father-shrenik-lalbhai-passes-away-114061900814_1.html. பார்த்த நாள்: 1 July 2014. 
  7. "Ahmedabad mourns demise of industry doyen, philanthropist Shrenik Lalbhai". 19 June 2014. http://indianexpress.com/article/cities/ahmedabad/ahmedabad-mourns-demise-of-industry-doyen-philanthropist-shrenik-lalbhai/. பார்த்த நாள்: 28 June 2014. 
  8. "Shrenik Lalbhai, Jain philanthropist, dies at 88". 20 June 2014. http://m.timesofindia.com/india/Shrenik-Lalbhai-Jain-philanthropist-dies-at-88/articleshow/36849166.cms. பார்த்த நாள்: 1 July 2014. 
  9. 9.0 9.1 9.2 "Condolence Message: Shrenikbhai Kasturbhai". CEPT University. 19 June 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
  10. Vora, Rutam. "Educationist, industrialist Shrenik Lalbhai dead" இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714190910/http://m.thehindubusinessline.com/news/educationist-industrialist-shrenik-lalbhai-dead/article6130150.ece/. 
  11. "Sanjay Lalbhai's father Shrenik Lalbhai passes away". http://wap.business-standard.com/article/current-affairs/sanjay-lalbhai-s-father-shrenik-lalbhai-passes-away-114061900814_1.html. 
  12. "Ahmedabad mourns demise of industry doyen, philanthropist Shrenik Lalbhai". http://indianexpress.com/article/cities/ahmedabad/ahmedabad-mourns-demise-of-industry-doyen-philanthropist-shrenik-lalbhai/. 
  13. Vora, Rutam. "Educationist, industrialist Shrenik Lalbhai dead" இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714190910/http://m.thehindubusinessline.com/news/educationist-industrialist-shrenik-lalbhai-dead/article6130150.ece/. 
  14. "Ahmedabad mourns demise of industry doyen, philanthropist Shrenik Lalbhai". http://indianexpress.com/article/cities/ahmedabad/ahmedabad-mourns-demise-of-industry-doyen-philanthropist-shrenik-lalbhai/. 
  15. "Shrenik Lalbhai, Jain philanthropist, dies at 88". http://m.timesofindia.com/india/Shrenik-Lalbhai-Jain-philanthropist-dies-at-88/articleshow/36849166.cms. 
  16. "Sanjay Lalbhai's father Shrenik Lalbhai passes away". 19 June 2014. http://wap.business-standard.com/article/current-affairs/sanjay-lalbhai-s-father-shrenik-lalbhai-passes-away-114061900814_1.html. பார்த்த நாள்: 1 July 2014. 
  17. "Ahmedabad mourns demise of industry doyen, philanthropist Shrenik Lalbhai". 19 June 2014. http://indianexpress.com/article/cities/ahmedabad/ahmedabad-mourns-demise-of-industry-doyen-philanthropist-shrenik-lalbhai/. பார்த்த நாள்: 28 June 2014. 
  18. "Shrenik Lalbhai, Jain philanthropist, dies at 88". 20 June 2014. http://m.timesofindia.com/india/Shrenik-Lalbhai-Jain-philanthropist-dies-at-88/articleshow/36849166.cms. பார்த்த நாள்: 1 July 2014.