கஸ்தூரிபாய் லால்பாய்

கஸ்தூர்பாய் லால்பாய் (Kasturbhai Lalbhai ) (19 திசம்பர் 1894 - 20 சனவரி 1980) இவர் ஓர் இந்திய தொழிலதிபரும், அறப்பணிகளை செய்து வந்தவருமாவார். இவர் தனது சகோதரர்கள் மற்றும் பல நிறுவனங்களுடன் சேர்ந்து அரவிந்த் ஆலைகளை இணைந்து நிறுவினார். அகமதாபாத் கல்விச் சங்கம் மற்றும் அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றைத் தொடங்கிய அகமதாபாத் கல்விச் சங்கத்தின் இணை நிறுவனராகவும் இருந்தார். சத்ருஞ்செய மலை மற்றும் பல சமண யாத்திரை மையங்களை நிர்வகிக்கும் வரலாற்று மற்றும் செல்வாக்குமிக்க ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளையின் தலைவராக இவர் 50 ஆண்டுகள் பணியாற்றினார்.

கஸ்தூரிபாய் லால்பாய்
கஸ்தூர்பாய் 1940 களில் காதி துணிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன் காதி
பிறப்பு(1894-12-19)19 திசம்பர் 1894
அகமதாபாத்
இறப்பு20 சனவரி 1980(1980-01-20) (அகவை 85)
அகமதாபாத்
குடியுரிமைஇந்தியா
கல்விமெட்ரிகுலேசன்
படித்த கல்வி நிறுவனங்கள்ராஞ்சோட்லால் சோட்டலால் அரசு உயர்நிலைப்பள்ளி
பணிதொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1912–1977
அமைப்பு(கள்)அரவிந்த்
பெற்றோர்மோகினி மற்றும் லால்பாய் தல்பத்பாய்
வாழ்க்கைத்
துணை
சாரதா சிமன்லால் சாவேரி
பிள்ளைகள்சரனிக், சித்தார்த்
விருதுகள்பத்ம பூசண்

குடும்பம்

தொகு

கஸ்தூர்பாய் அகமதாபாத்தைச் சேர்ந்த முகலாயர்கள், மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் வெவ்வேறு காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நகரத் தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். [1]

இவர், அக்பரின் அரச நகைக்கடை விற்பனையாளர் சாந்திதாசு ஜாவேரி மற்றும் மார்வார் பகுதியைச் சேர்ந்த ஓஸ்வால் ஜெயின் ஆகியோரின் வழித்தோன்றல் ஆவார். சாந்திதாசின் பேரனான குசால்சந்த் (1680–1748) 1725 இல் அகமதாபாத்தை கொள்ளையடிப்பதில் இருந்து காப்பாற்ற மராட்டியர்களுக்கு ஒரு தொகையை செலுத்தினார். குசால்சந்தின் மகன் வாகாத்சந்த் (1740-1814) ஒரு குறிப்பிடத்தக்க தொழிலதிபர் ஆவார். [2] இவரது தாத்தா தல்பத்பாய் பாகுபாய் 1870களில் பருத்தி வர்த்தக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவரது தந்தை லால்பாய் தல்பத்பாய் (1863-1912) 1896 ஆம் ஆண்டில் சரசுபூர் பருத்தி ஆலையை நிறுவினார். இது விலைமதிப்பற்ற ரத்தினங்களின் பாரம்பரிய வணிகத்திற்கு கூடுதலாக இருந்தது. இது இந்தியாவில் சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் மாறியது.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கஸ்தூர்பாய் 1894 ஆம் ஆண்டில் குசராத்தின் அகமதாபாத்தில் உள்ள சாவேரிவாத்தில், லால்பாய் தல்பத்பாய் மற்றும் மோகினி ஆகியோருக்கு ஒரு முக்கிய சமணக் குடும்பத்தில் பிறந்தார்.

இவர், அகமதாபாத்தில் உள்ள தீன் தர்வாசாவுக்கு அருகிலுள்ள நகராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் ராஞ்சோட்லால் சோட்டலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவர் 1911 இல் இரண்டாம் வகுப்புடன் மெட்ரிக் படித்தார். 1912 ஆம் ஆண்டில், இவர் குசராத்தி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, இவரது தந்தை இறந்த காரணத்தால், குடும்பத் தொழிலில் உதவுவதற்காக இவரது படிப்பை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். [3]

இவர், மே 1915 இல் சாரதா சிமன்லால் சாவேரி என்பவரை மணந்தார். இவருக்கு சிரேனிக் மற்றும் சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

வணிகம்

தொகு

இவர் 1912 இல் ராய்ப்பூர் ஆலையில் தலைவராக சேர்ந்தார். முதலாம் உலகப் போரின்போதும் அதற்குப் பின்னரும் துணிகளின் தேவை அதிகரித்தது நிறுவனத்தின் செயல்பாடுகளை உறுதிப்படுத்த இவருக்கு உதவியது. இவர் 1918 இல் ராய்ப்பூர் ஆலையின் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தார். பின்னர் இவர் 1920களில் தக்யாபாய் படேலின் உதவியுடன் அசோகா ஆலைகளை நிறுவினார். [4] 1924 மற்றும் 1938 க்கு இடையில் தக்யாபாய் படேலின் உதவியுடன் ஐந்து ஆலைகளில் முதலீடு செய்து இவர் வணிகத்தை விரிவுபடுத்தினார். 1931 இல் அரவிந்த் ஆலைகள் மற்றும் நூட்டன் ஆலைகள், 1928 இல் அருணா ஆலைகள், 1938 இல் அகமதாபாத் நியூ காட்டன் ஆலைகள் ஆகியவை இதில் அடங்கும். [5] 1930களில் மகாத்மா காந்தியின் சுதேசி இயக்கம் மற்றும் 1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது இந்தியாவில் நெசவுத் தொழிலுக்கு உதவியது. [6] இவர், ஏழு ஆலைகளையும் நவீனப்படுத்தினார். இவர்கள் இந்தியாவின் மொத்த நூற்பு திறனில் 12% மற்றும் அகமதாபாத்தின் மொத்த நெசவுத் திறனில் 24% ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக இவர்கள் 1939 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏழாவது பெரிய பருத்தி நுகர்வோராகத் திகழ்ந்தனர். [7]

1948 ஆம் ஆண்டில், கறுப்பு-வணிகத்தில் ஈடுபடும் வணிக நிறுவனங்களின் பட்டியலில் இவரது வணிகக் குழு பெயரிடப்பட்டது. நிதி அமைச்சரும், கஸ்தூர்பாயின் நண்பருமான, ஆர்.கே.சண்முகம் செட்டி நிறுவனத்தின் பெயரை பட்டியலில் இருந்து நீக்குமாறு கூறியதற்காக பதவி விலகவேண்டியிருந்தது. வருமான வரித் திணைக்களம் தனது குற்றச்சாட்டுகளை பல விசாரணைகளுடன் தொடர்ந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எந்தவொரு தவறும் ஏற்படவில்லை என்பதால் குழுவை விடுவித்தது. [8]

1952 ஆம் ஆண்டில், தகயாபாய் படேல் அமெரிக்க சயனமிட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் நவீன சாய உற்பத்திநிறுவனமான அதுல் நிறுவனத்திமுன்னிலைப்படுத்தி தொடங்க உதவினார். இதை நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். [9]

அரசியல்

தொகு
 
கஸ்தூர்பாய் லாலபாய் காதி ஆடை யுடன்

1923 திசம்பரில் மத்திய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது மூன்று ஆண்டு காலப்பதவியில், நெசவு மீதான கலால் வரியை ரத்து செய்வது உட்பட இந்திய தொழில்களுக்கான பரப்புரைகளில் ஈடுபட்டார். [10] 1930களில், இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கி வந்து சுதேசி இயக்கத்தில் அவருக்கு உதவினார். இது வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்து உள்ளூர் தொழில்களை ஊக்குவித்தது. 1930களின் பொருளாதார மந்தநிலையின் போது இந்திய நெசவு நிறுவனங்களுக்கான பிரிட்டிசாருடன் வரி பேச்சுவார்த்தை நடத்துவதிலும் இவர் ஈடுபட்டார். [11]

இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு பல முக்கிய பதவிகளை வகித்தார். இதில் அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் விலக்கப்பட்ட பகுதிகளின் நிர்வாகக் குழு, 1947 இல் நிதி அமைச்சகத்தின் பொருளாதாரக் குழுவின் தலைவர், மத்திய பொதுப்பணித் துறை தொழில் குழுவின் தலைவர், 1952 ஆம் ஆண்டில், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் உறுப்பினர், காந்தி நினைவு நிதியின் அறங்காவலர், இந்திய முதலீட்டு மையத்தின் உறுப்பினர் போன்றவை. மகாத்மா காந்தி நினைவு நிதியத்தின் அறங்காவலராகவும் தலைவராகவும் இருந்தார். சிறுபான்மையினர் துணைக்குழு உறுப்பினராகவும் சமண மதத்தின் பிரதிநிதியாக பணியாற்றினார். [12]

நிறுவனத்தைக் கட்டியெழுப்புதல்

தொகு

இவர் 1934 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும், 1935 இல் அகமதாபாத் நெசவு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 முதல் 1949 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநராக பணியாற்றினார்.

1936 ஆம் ஆண்டில் இவர் அமிர்தலால் அரிகோவிந்ததாசு, கணேஷ் வாசுதேவ மாவ்லேங்கர் ஆகியோருடன் இணைந்து அகமதாபாத் கல்விச் சங்கத்தை [13] தொடங்கினார். பின்னர் இது 2009 இல் அகமதாபாத் பல்கலைக்கழகமாக உருவானது. பின்னர் இந்த சமூகம் எம்.ஜி. அறிவியல் கல்லூரி, எல்.எம். மருந்தியல் கல்லூரி , இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையம், காஸ்ட்ரோல் அகமதாபாத் கல்விச் சங்க கண்காணிப்பு நிறுவனம் உட்பட பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியது. கண்பார்வையற்றோர் சங்கம் ஒன்றைத் தொடங்கி பார்வையற்றவர்களுக்கு பயிற்சி அளித்து விக்ரம் சாரபாய் சமூக அறிவியல் மையம், குசராத், விசுவ கோசு அறக்கட்டளை மற்றும் பல கல்வி நிறுவனங்களுக்கு உதவியது. ஆரம்ப ஆண்டுகளில் குசராத் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புதற்கும், குசராத் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும் ரூ .0.5 மில்லியனை நன்கொடையாக அளித்தது. அம்தாவத் நி குபா போன்ற கலாச்சார மையத்தை நிறுவவும் உதவியது. [14]

நெசவுத் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக அகமதாபாத் நெசவு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் இவரும் விக்ரம் சாராபாயும் சுதந்திரத்திற்கு முன்பு அகமதாபாத் நெசவாலைகள் ஆராய்சிச் சங்கத்தினை நிறுவினர். [14]

அகமதாபாத், இந்திய மேலாண்மை கழகத்தை நிறுவுவதற்காக அகமதாபாத் கல்விச் சங்கம் விக்ரம் சாராபாயுடன் இணைந்து முக்கிய பங்கு வகித்தது. இவர் இந்திய மேலாண்மை கழகத்தின் குழுவில் இருந்தார். ஆனால் அதன் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். [14] [15] இப்போது இந்திய மேலாண்மை கழகம் கஸ்தூர்பாய் லால்பாய் மேலாண்மை மேம்பாட்டு மையத்தையும் தொழில் முனைவோர் துறையில் கஸ்தூர்பாய் லால்பாய் இருக்கையையும் கொண்டுள்ளது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக, இவர் 1947 இல் ஒரு பொறியியல் கல்லூரியை நிறுவினார். அதற்கு இவரது தந்தை லால்பாய் தல்பத்பாயின் பெயரிட்டார். [14] இவர் 1962 இல் லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவினார். [16] இது பல கையெழுத்துப் பிரதிகள், அரிய புத்தகங்கள் மற்றும் நுண்ணியப்படங்களைப் பாதுகாக்கிறது.

1949 இல், இவர் குசராத் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையையும் நிறுவினார். 1955 முதல் 1965 வரை, இவர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவராக இருந்தார்.

இந்த நிறுவனங்களில் சிலவற்றை வடிவமைக்கவும், அகமதாபாத்தில் நவீன கட்டிடக்கலைகளைக் கொண்டுவரவும் உலக புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களான இலூயிஸ் கான், லெ கொபூசியே, பி.வி. டோஷி மற்றும் சார்லசு கோர்ரியா ஆகியோரை இவர் நியமித்தார். [15]

பிற்கால வாழ்வு

தொகு

காலப்போக்கில், கஸ்தூர்பாய் தனது தொழில்களின் செயல்பாடுகளை 1960 களில் தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கத் தொடங்கினார். இவர் பொது நடவடிக்கைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கினார். 1977 சனவரியில் வணிகத்திலிருந்து ஓய்வு பெற்றார். 1980 சனவரி 20 அன்று அகமதாபாத்தில் காலமானார். [17]

மத நடவடிக்கைகள்

தொகு

இவர் கண்டிப்பான சமணராக இருந்தார். 1925 ஆம் ஆண்டில் 30 வயதில் ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளையின் தலைவரான இவர் 50 ஆண்டுகள் பணியாற்றினார். [18] அதன் நிர்வாகத்தின் கீழ் பல சமண கோவில்கள் உள்ளன. இந்த அறக்கட்டளை, இரணக்பூர், தில்வாரா கோயில் (அபு மலை), கிர்நார், தரங்கா சமணர் கோயில் மற்றும் சத்ருஞ்ஜெய மலை உள்ளிட்ட பல சமணக் கோவில்களை புதுப்பித்தது. [19]

அங்கீகாரம்

தொகு

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. THE NAGARSHETH OF AHMEDABAD: THE HISTORY OF AN URBAN INSTITUTION IN A GUJARAT CITY, Dwijendra Tripathi and M. J. Mehta, Proceedings of the Indian History Congress, Vol. 39, Volume I (1978), pp. 481-496 (16 pages)
  2. "The Lalbhais –A Historical Perspective". Arvind Mills. Archived from the original on 1 December 2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2011.
  3. Piramal, Gita. Business Legends. p. 310.
  4. Piramal, Gita. Business Legends. pp. 312–314.
  5. Piramal, Gita. Business Legends. p. 337.
  6. Piramal, Gita. Business Legends. pp. 347–348.
  7. Piramal, Gita. Business Legends. p. 349.
  8. Piramal, Gita. Business Legends. pp. 403–405.
  9. Piramal, Gita. Business Legends. p. 350.
  10. Piramal, Gita. Business Legends. pp. 329–331.
  11. Piramal, Gita. Business Legends. pp. 350–393.
  12. Piramal, Gita. Business Legends. pp. 406–407.
  13. "Archived copy". Archived from the original on 27 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-22.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  14. 14.0 14.1 14.2 14.3 "Dynamic leadership & Contributions". AES. Archived from the original on 11 July 2013. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013.
  15. 15.0 15.1 Business Legends.
  16. "India gets its first e-library of ancient manuscripts" இம் மூலத்தில் இருந்து 2013-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104022517/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-08/ahmedabad/30372922_1_manuscripts-indology-digitizing. பார்த்த நாள்: 30 April 2013. 
  17. Piramal, Gita. Business Legends. p. 421.
  18. The dynamics of a tradition: Kasturbhai Lalbhai and his entrepreneurship, Dwijendra Tripathi, Manohar, 1981, p. 50
  19. શેઠ આણંદજી કલ્યાણજી પેઢીનો ઇતિહાસ Sheth Anandji Kalyanji Pedhino Itihas 1, Ratilal Dipchand Desai, Shilchandrasuri, Anandji Kalyanji Pedhi Ahmedabad 1983
  20. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரிபாய்_லால்பாய்&oldid=3335553" இலிருந்து மீள்விக்கப்பட்டது