சிர்க்கோனியம் நைட்ரைடு

சிர்க்கோனியம் நைட்ரைடு (Zirconium nitride) என்பது ZrN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்திற்கே உரிய பண்புகளால் இது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

சிர்க்கோனியம் நைட்ரைடு
Zirconium nitride in the unit cell
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிர்க்கோனியம் நைட்ரைடு
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம்(III) நைட்ரைடு, நைட்ரிடோ சிர்க்கோனியம்
இனங்காட்டிகள்
25658-42-8 Y
ChemSpider 85159 N
EC number 247-166-2
InChI
  • InChI=1S/N.Zr (Zr≡N) N
    Key: ZVWKZXLXHLZXLS-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image

(Zr≡N)

பப்கெம் 94359
SMILES
  • N#[Zr] (Zr≡N)
பண்புகள்
ZrN[1]
தோற்றம் மஞ்சள் பழுப்பு நிற படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 7.09 கி/செ.மீ3 (24 °C)[1]
உருகுநிலை 2,952 °C (5,346 °F; 3,225 K)
at 760 mmHg[1]
கரையாது
கரைதிறன் அடர் ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரையும்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுர படிகத் திட்டம், cF8[2]
புறவெளித் தொகுதி Fm3m, No. 225[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பண்புகள் தொகு

இயற்பிய ஆவிப் படிவு முறையில் சிர்க்கோனியம் நைட்ரைடு மெல்லிய தங்க நிறத்தில் உலோகத் தங்கம் போலவே உருவாக்கப்படுகிறது. அறைவெப்பநிலையில் சிர்க்கோனியம் நைட்ரைடின் மின் தடைத்திறன் 12.0 µΩ•செ.மீ ஆகும். மேலும், மின் தடையின் வெப்பநிலைக் கெழு மதிப்பு 5.6•10−8 Ω•செ.மீ/கெல்வின், மீக்கடத்துத்திறன் இடைநிலை வெப்பம் 10.4 கெல்வின், தளர்வுநிலை அணிக்கோவை அளவுரு 0.4575 நானோமீட்டர் போன்றவையும் இதன் தனிச்சிறப்பு பண்புகளாகும். இவற்றைத் தவிர சிர்க்கோனியம் நைட்ரைடு ஒற்றைப் படிகத்தின் கடினத் தன்மை மதிப்பு 22.7±1.7 கிகாபாசுகல் என்றும், மீட்சிக் குணக மதிப்பு 450 கிகாபாசுகல் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது[3].

பயன்கள் தொகு

 
சிர்க்கோனியம் நைட்ரைடு பூசப்பட்ட வெட்டிகள்

தைட்டானியம் நைட்ரைடு போன்ற ஒரு கடினமான பீங்கான் பொருளாகவும், சிமெண்ட் போல வெப்பந் தாங்கும் பொருளாகவும் சிர்க்கோனியம் நைட்ரைடு கருதப்படுகிறது. இதனால் இச்சேர்மத்தை வெப்பந்தாங்கும் பொருட்களாகவும், பீங்கான் உலோகமாகவும், புடக் குவளைகளாகவும் பயன்படுத்துகிறார்கள். இயற்பிய ஆவிப் படிவுப் பூச்சுச் செயல்முறையில் இதைப்பயன்படுத்தும் போது பொதுவாக மருத்துவக் கருவிகளின் மீது பூசப் பயன்படுத்துகிறார்கள்[4]. தொழிற்சாலைகளில் குறிப்பாக துளையிடும் கருவிகளிலும், தானியங்கிப் பொறிகள் மற்றும் விண்வெளி பொறிகளிலும் சிர்க்கோனியம் நைட்ரைடைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றைத் தவிர அரிக்கும் சூழல்களில் உடுத்தும் பொருளாகவும் இது பயன்படுகிறது.

ராக்கெட்டுகள் மற்றும் வானூர்திகளில் ஐதரசன் பெராக்சைடு எரிபொருள் கலத்தின் உள்ளக உறையாக சிர்க்கோனியம் நைட்ரைடைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார்கள்[5].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Lide, David R., தொகுப்பாசிரியர் (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. 
  2. 2.0 2.1 Sirajuddeen, M. Md. Sheik.; Banu, I. B. S. (2014). "FP-LAPW investigation of electronic, magnetic, elastic and thermal properties of Fe-doped zirconium nitride". AIP Advances 4 (5): 057121. doi:10.1063/1.4879798. 
  3. Mei, A. B.; Howe, B. M.; Zhang, C.; Sardela, M.; Eckstein, J. N.; Hultman, L.; Rockett, A.; Petrov, I. et al. (2013). "Physical properties of epitaxial ZrN/MgO(001) layers grown by reactive magnetron sputtering". Journal of Vacuum Science & Technology A: Vacuum, Surfaces, and Films 31 (6): 061516. doi:10.1116/1.4825349. 
  4. "IonFusion Surgical". IonFusion Surgical, Inc. பார்க்கப்பட்ட நாள் 2014-06-30.
  5. 7736751 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்க்கோனியம்_நைட்ரைடு&oldid=2470398" இலிருந்து மீள்விக்கப்பட்டது