திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Some words I have changed
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
{{சங்க இலக்கியங்கள்}}
 
'''திருக்குறள்''', சுருக்கமாகக் '''குறள்''' ([[ஆங்கிலம்]]: ''Tirukkuṟaḷ''), ஒரு தொன்மையான [[தமிழ்|தமிழ் மொழி]] அற [[இலக்கியம்|இலக்கியமாகும்]]. [[சங்க இலக்கியம்|சங்க இலக்கிய]] வகைப்பாட்டில் [[பதினெண்கீழ்க்கணக்கு]] எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் [[குறள் வெண்பா]] என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.{{sfn|Pillai, 1994}} இந்நூல் முறையே [[அறம்]], [[பொருள் (புருஷார்த்தம்)|பொருள்]], [[காமம்]] (அல்லது [[இன்பம்]]) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.{{sfn|Sundaram|1987|pp=7–16}}{{sfn|Blackburn|2000|pp=449–482}}{{sfn|Zvelebil|1973|pp=157–158}} இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.{{sfn|Lal, 1992|pp=4333–4334, 4341}}{{sfn|Holmström, Krishnaswamy, and Srilata, 2009|p=5}} இதனை இயற்றியவர் [[திருவள்ளுவர்]] என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 300 முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.{{sfn|Zvelebil|1975|p=124}}
 
இந்திய [[அறிவாய்வியல்]], [[மீவியற்பியல்]] ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Cutler, 1992}} [[அகிம்சை]]யை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல்,{{sfn|Chakravarthy Nainar, 1953}}{{sfn|Krishna, 2017}}{{sfn|Thani Nayagam, 1971|p=252}}{{sfn|Sanjeevi, 2006|p=84}}{{sfn|Krishnamoorthy, 2004|pp=206–208}} தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக [[அகிம்சை|இன்னா செய்யாமை]] மற்றும் [[நனிசைவம்|புலால் உண்ணாமை]] ஆகியவற்றை வலியுறுத்துகிறது.{{sfn|Dharani, 2018|p=101}}{{sfn|Das|1997|pp=11–12}}{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{sfn|Sundaram, 1990|p=13}}{{sfn|Manavalan, 2009|pp=127–129}}{{Ref label|A|a|none}} இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக்{{sfn|Zvelebil|1973|pp=160–163}} கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது.{{sfn|Hikosaka|Samuel|1990|p=200}}{{sfn|Ananthanathan, 1994|pp=151–154}}{{sfn|Kaushik Roy|2012|pp=151–154}} மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும்.{{sfn|Zvelebil|1973|pp=160–163}}{{sfn|Lal, 1992|pp=4333–4334}} சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.{{sfn|Thamizhannal, 2004|p=146}}
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது