திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2401:4900:4DF0:57F3:9026:6CDA:6AB1:8540 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3776359 இல்லாது செய்யப்பட்டது *நீக்கம்*
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
இந்திய [[அறிவாய்வியல்]], [[மீவியற்பியல்]] ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.{{sfn|Zvelebil|1973|p=156}}{{sfn|Cutler, 1992}} [[அகிம்சை]]யை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல்,{{sfn|Chakravarthy Nainar, 1953}}{{sfn|Krishna, 2017}}{{sfn|Thani Nayagam, 1971|p=252}}{{sfn|Sanjeevi, 2006|p=84}}{{sfn|Krishnamoorthy, 2004|pp=206–208}} தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக [[அகிம்சை|இன்னா செய்யாமை]] மற்றும் [[நனிசைவம்|புலால் உண்ணாமை]] ஆகியவற்றை வலியுறுத்துகிறது.{{sfn|Dharani, 2018|p=101}}{{sfn|Das|1997|pp=11–12}}{{sfn|Zvelebil|1973|pp=156–171}}{{sfn|Sundaram, 1990|p=13}}{{sfn|Manavalan, 2009|pp=127–129}}{{Ref label|A|a|none}} இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக்{{sfn|Zvelebil|1973|pp=160–163}} கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது.{{sfn|Hikosaka|Samuel|1990|p=200}}{{sfn|Ananthanathan, 1994|pp=151–154}}{{sfn|Kaushik Roy|2012|pp=151–154}} மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும்.{{sfn|Zvelebil|1973|pp=160–163}}{{sfn|Lal, 1992|pp=4333–4334}} சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.{{sfn|Thamizhannal, 2004|p=146}}
 
இயற்றப்பட்ட காலத்திலிருந்து குறள் அற, சமூக, அரசியல், பொருளாதார, மத, தத்துவ மற்றும் ஆன்மீகத் துறைகளைச் சார்ந்த அறிஞர்களாலும் தலைவர்களாலும் பரவலாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.{{sfn|Sundaramurthi, 2000|p=624}} இவர்களில் [[இளங்கோவடிகள்]], [[கம்பர்]], [[லியோ டால்ஸ்டாய்]], [[மகாத்மா காந்தி]], [[ஆல்பர்ட் சுவைட்சர்]], [[இராமலிங்க அடிகள்]], [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]], [[காரல் கிரவுல்]], [[ஜி. யு. போப்]], [[அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி]] மற்றும் [[யூசி|யூ ஹ்சி]] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழ் இலக்கியங்களில் மிகவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்படக்கூடிய நூலாகவும் திருக்குறள் திகழ்கிறது.{{sfn|Maharajan, 2017|p=19}} நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் உலகின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812-ம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலாகக் குறள் திகழ்கிறது.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=29}} திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பாகவும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.{{sfn|Manavalan, 2009|p=24}} அனைத்து நூல்களிலும் காணப்படும் சிறந்த அறங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக குறளின் ஆசிரியர் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.{{Sfn | Chellammal, 2015 | p = 119}} காலவெள்ளத்தில் தொன்றுதொட்டுத் தமிழக மக்களாலும் அரசாலும் போற்றிப் பாதுகாத்து வரப்படும் நூலாகக் குறள் திகழ்கிறது.திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.{{sfn|Zvelebil|1973|pp=156–171}}
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது