அபினிப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்ட...
 
No edit summary
வரிசை 7:
==கிழக்கிந்தியக் கம்பனி (1773-1833)==
 
1773 இல், வங்காளத்தின் ஆளுனர்-நாயகம் அபினி விற்பனையில் கம்பனியின் தனியுரிமையை மேலும் உறுதி செய்துகொள்ள, [[பாட்னா]]விலிருந்த அபினிக் கூட்டமைப்பைக் (opium syndicate) கலைத்தார். பின்னர் வந்த ஐம்பது ஆண்டுகளாக, அபினியே கிழக்கிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் முக்கியமாக இருந்தது. சீனாவில் அபினி சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்ததால், கிழக்கிந்தியக் கம்பனி, அபினிக்காக மாற்றீடு செய்யமுடியாமல், தேயிலையைச்[[தேயிலை]]யைச் சீனாவிடமிருந்து கடனுக்கு வாங்கியது. ஆனால், அபினியைக் கொல்கத்தாவில் ஏலத்தில் விற்று, அது சீனாவுக்குள் கடத்திச் செல்லப்படுவதை அனுமதித்தது. 1797 ஆம் ஆண்டில், வங்காளத்துத்து அபினித் [[முகவர்]]களின் பங்கை இல்லாமல் செய்து, அபினிப் பயிர்ச் செய்கையாளர் நேரடியாகவே கம்பனிக்கு அபினியை விற்கும்படி ஏற்பாடு செய்து கொண்டது.
 
சீனாவுக்கான பிரித்தானியரின் அபினி ஏற்றுமதி, 1730 ஆம் ஆண்டில் 15 [[தொன்]] (ton) அளவாக இருந்தது, 1773 ஆம் ஆண்டில் 75 தொன்களாக உயர்ந்தது. ஒவ்வொன்றும் 64 கிலோகிராம் நிறையுள்ள அபினியைக்கொண்ட 2000 பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
 
1799 இல், சீனப் பேரரசு அபினி [[இறக்குமதி]] மீதான அதனது தடையை மீளவும் உறுதி செய்தது. 1810 ஆம் ஆண்டில் பின்வரும் ஆணை வெளியிடப்பட்டது:
 
: ''அபினி வன்முறையான தாக்கத்தைக் கொடுக்கக்கூடியது. இதற்குப் பழக்கப்பட்டவர் அதனைப் புகைக்கும்போது, மிக விரைவாக அது அவரை உற்சாகப்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நிலைக்கு உள்ளாக்குகிறது. அதிக காலம் செல்லுமுன்னரே அது அவரைக் கொன்று விடுகிறது. அபினி, எமது நற் பழக்கங்களையும், நெறிமுறைகளையும் வலுவற்றதாக்கும் ஒரு [[நஞ்சு]]. இதன் பயன்பாடு சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது, பொதுமக்கள், இதைத் [[தடுக்கப்பட்ட நகரம்|தடுக்கப்பட்ட நகருக்குள்]] கொண்டுவருகிறார்கள். உண்மையில் இவர்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படியாது அதனை இகழ்கிறார்கள்!''
 
: ''இருந்தும், அண்மைக்காலத்தில், அபினியை வாங்குவோரும், அதனை உட்கொள்வோரும் அதிகமாகியுள்ளனர். ஏமாற்றுகின்ற வணிகர்கள் இலாபம் பெறுவதற்காக அதனை வாங்கி விற்கிறார்கள். ''சுங் வென்'' நுழைவாயிலில் உள்ள சுங்க இல்லம், இறக்குமதிகளை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டது (அபினிக் கடத்தல் தொடர்பான பொறுப்பு எதுவும் அதற்கு இல்லை). நாங்கள் அபினிக்கான தேடுதலைத் துறைமுகங்களில் மட்டும் நடத்துவது போதாது. ஐந்து நுழைவாயில்களிலும் உள்ள போலீஸ் ஆணையர்களுக்கும், போலீஸ் சென்சார்களுக்கும், அபினியைத் தடைசெய்யவும், அதற்காகத் தேடுதல் நடத்தவும் ஆணை பிறப்பிக்க வேண்டியுள்ளது. மீறுபவர்கள் யாராவது பிடிபட்டால், உடனடியாக அவர்கள் தண்டிக்கப்படுவதோடு, அபினியும் உடனடியாக அழிக்கப்படும். அபினி நுழைகின்ற ''குவாந்துங்'' மற்றும் ''ஃபூக்கீன்'' மாகாணங்களைப் பொறுத்தவரை, அங்குள்ள, வைஸ்ராய்கள், ஆளுனர்கள் மற்றும் கடற் சுங்க அதிகாரிகளுக்கும், முறையான தேடுதல் நடத்தி அபினியின் வழங்கலை முற்றாகத் தடுக்குமாறு ஆணையிடப்படுகின்றது. அவர்கள் இதை ஒரு உயிரற்ற கடிதமாகக் கருதி அபினி கடத்தி வரப்படுவதை அநுமதிக்கக்கூடாது.''
 
:: (Lo-shu Fu, A Documentary Chronicle of Sino-Western relations, Vol. 1 (1966), page 380)
 
இந்த ஆணை மிகக் குறைவான தாக்கத்தையே விளைவித்தது. சீன அரசாங்கம் [[பெய்ஜிங்]]கில் இருந்தது. தெற்கிலிருந்து, வடக்கில் மிகத்தொலைவில் நடைபெற்றுவந்த அபினிக் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் செயற்பாடின்மை, அபினியின் அடிமையாக்கும் தன்மை, கிழக்கிந்தியக் கம்பனியினதும், வணிகர்களினதும் அதிக இலாபம் பெறுவதற்கான பேராசை, பிரித்தானிய அரசின் வெள்ளிக்கான தாகம் என்பனவறின் கூட்டுவிளைவாக அபினி வணிகம் மேலும் வளர்ந்தது. 1820 ஆம் ஆண்டில், வங்காளத்திலிருந்து, சீனாவுக்கான அபினி வணிகம், சராசரியாக ஆண்டொன்றுக்கு, 900 தொன்களை எட்டியது.
 
[[பகுப்பு:சீனா]]
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]
 
[[da:Opiumskrigene]]
[[de:Opiumkriege]]
[[en:Opium Wars]]
[[es:Guerras del opio]]
[[fr:Guerre de l'opium]]
[[ko:아편 전쟁]]
[[hu:Ópiumháború]]
[[nl:Opiumoorlog]]
[[pl:Wojny opiumowe]]
[[pt:Guerras do ópio]]
[[ru:Опиумные войны]]
[[sv:Opiumkrigen]]
[[zh-yue:鴉片戰爭]]
[[zh:鸦片战争]]
"https://ta.wikipedia.org/wiki/அபினிப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது