ஏர்மன் மெல்வில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''ஏர்மன் மெல்வில்''' (ஆகத்து 1, 1819 – செப்டெம்பர் 28, 1891) (Herman Melville) ஒரு அமெரிக்க புதின [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], கட்டுரையாளரும், [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். ''மொபி-டிக்'' என்னும் [[புதினம்]] எழுதியதன் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார். இவரது முதல் மூன்று நூல்கள் சமகாலத்தில் புகழ் பெற்றன. 1840களில் விரைவாக ஏற்பட்ட இவரது இலக்கிய வெற்றிகளைத் தொடர்ந்து 1850 களின் நடுப் பகுதியில் இவரது புகழ் குறையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சியில் இருந்து அவரது வாழ்க்கைக் காலத்தில் அவர் மீளவே இல்லை. 1891 ஆம் ஆண்டில் மெல்வில் இறந்தபோது அவரைப் பலரும் முற்றாகவே மறந்துவிட்டிருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "மெல்வில் மறுமலர்ச்சி" ஏற்பட்டபோது மீண்டும் அவரது படைப்புக்களுக்கு மதிப்புக் கிடைத்தது. சிறப்பாக ''மொபி-டிக்'' அமெரிக்க இலக்கியத்தினதும், உலக இலக்கியத்தினதும் தலைசிறந்த படைப்புக்களுள் ஒன்றாகப் புகழப் பெற்றது. [[அமெரிக்க நூலகம்]] முதன் முதலாகத் தொகுத்து வெளியிட்டது இவரது ஆக்கங்களையே ஆகும்.
 
==வாழ்க்கை வரலாறு==
===இளமைக் காலம்===
ஏர்மன் மெல்வில் நியூ யார்க் நகரத்தில் 1819 ஆம் ஆண்டு ஆகத்து 1 ஆம் தேதி பிறந்தார். இவர் அலன், மரியா தம்பதியினரின் எட்டுப் பிள்ளைகளுள் மூன்றாமவர். இவரது தந்தை பொசுட்டனைச் சேர்ந்த, மிகவும் நல்ல நிலையில் இருந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். பிரான்சு நாட்டிலிருந்து உலர் பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். ஏர்மன் மெல்வில்லின் பாட்டனார் மேஜர் தாமசு மெல்வில், பெயர் பெற்ற "[[பொசுட்டன் தேனீர் விருந்து|பொசுட்டன் தேனீர் விருந்தில்]]" கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர். ஏர்மனின் தாய் வழியினர் அட்சன் வலி ஒல்லாந்து நாட்டவர். தாய்வழிப் பாட்டன் பீட்டர் கான்செவூர்ட் [[சரத்தோகா சண்டை]]யில் பங்குபற்றியவர். தனது இரட்டைப் புரட்சியாளர் வம்சாவளி குறித்து ஏர்மன் திருப்தி கொண்டிருந்தார்.
 
ஏர்மன் முதலில் நியூயார்க் ஆண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். வணிகத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்ட அவரது தந்தையார் வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்காக 1830 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் அல்பனிக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மென்மயிர் வணிகத்தில் ஈடுபட்ட அவருக்குப் புதிய முயற்சியும் வெற்றியாக அமையவில்லை. [[1812 ஆம் ஆண்டுப் போர்]] வெளிநாட்டு வணிகத்தை சீரழித்ததால் அவர் நொடிப்பு நிலை (bankruptcy) எய்தினார். ஏர்மனுக்கு 12 வயதான போது அவரது தந்தையார் காலமானார். குடும்பம் பண வசதியின்றித் தத்தளித்தது. ஏர்மனின் தாய் வழியினர் நல்ல நிலையில் இருந்தும் அவர்களிடம் இருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.
 
ஏர்மன் அக்டோபர் 1830 முதல் அக்டோபர் 1831 வரையும் பின்னர் அக்டோபர் 1836 முதல் மார்ச் 1837 வரையும் [[அல்பனி அக்கடமி]]யில் செந்நெறி இலக்கியம் பயின்றார்.
 
==தொழில்==
இடத்துக்கிடம் செல்வதில் இருந்த விருப்பினாலும், குடும்பத்தினரின் உதவியின்றிச் சொந்தக்காலில் நிற்க விரும்பியதாலும் ஏர்மன் [[நில அளவை]]ப் பணியில் சேர்ந்தார். ஆனால், இப்பணியில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் இவரது உடன்பிறந்தார் இவரை லிவர்பூலுக்குச் செல்லும் நியூயார்க்கைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் பணிக்குச் சேர்த்துவிட்டார். இக்கப்பலில் லிவர்பூலுக்குச் சென்று அதே கப்பலிலேயே திரும்பிவந்தார். 1839ல் லிவர்பூல் சென்று வந்தது தவிர 1837 தொடக்கம் 1840 வரையான 3 ஆண்டுக் காலத்தில் பெரும் பகுதி ஆசிரியப் பள்ளியில் செலவழிந்தது. 1840 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மீண்டும் கப்பலில் பயிற்சி மாணவனாகச் சேர்வதற்கு முடிவு செய்த ஏர்மன், 1841 சனவரி 3 ஆம் தேதி மசசூச்செட்சின் பெட்போர்டில் இருந்து பசிபிக் பெருங்கடலுக்குச் சென்ற திமிங்கில வேட்டைக் கப்பலான அக்கூசுநெட்டில் பயணமானார். தனது வாழ்க்கை அந்த நாளிலேயே தொடங்கியதாகப் பின்னாளில் ஏர்மர் கூறினார். அவரது இந்த 18 மாத வாழ்க்கை குறித்த நேரடி விவரங்கள் எதையும் ஏர்மன் விட்டுச் செல்லவில்லை எனினும், இவரது ஆக்கங்களான ''மொபி-டிக்'', ''த உவேல்'' (திமிங்கிலம்) என்னும் இரண்டிலும் இக்கப்பல் பயண வாழ்வின் பல அம்சங்கள் இருக்கக்கூடும்.
 
1842 சூலையில் [[மார்க்கெசாசுத் தீவு|மார்க்கெசாசுத் தீவில்]] கப்பலில் இருந்து சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிய மெல்வில், மூன்று கிழமைகள் "டைப்பீ'' (Typee) என்னும் தாயக இனத்தவர் மத்தியில் வாழ்ந்தார். அத்தீவில் வாழும் ஏனைய இரண்டு இனக்குழுக்களினால் மனித இறைச்சி உண்பவர்களாக "டைப்பீக்கள்" கருதப்பட்டாலும், ஏர்மனை அவர்கள் நன்றாகவே நடத்தினர். ஏர்மன் மெல்விலின் முதல் புதினமான "டைப்பீ" அவ்வினத்தைச் சேர்ந்த அழகிய இளம் பெண்ணொருத்தி உடனான குறுகியகாலக் காதல் பற்றிக் கூறுகிறது.
 
"அக்கூசுநெட்" கப்பலில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிச் சிந்திக்காத ஏர்மன் மெல்வில், [[அவாய்]]க்குச் செல்லும் இன்னொரு திமிங்கில வேட்டைக் கப்பலில் ஏறி [[ஒனலூலு]]வில் அக்கப்பலை விட்டு வெளியேறினார். ஒனலூலுவில் இருக்கும்போது தாயக மக்களை மதம் மாற்ற முயன்ற கிறித்தவ சபையினரின் நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்ததனால் இவர் ஒரு சர்ச்சைக்கு உரியவராக விளங்கினார். நான்கு மாதங்கள் அங்கே எழுத்தராகப் பணிபுரிந்த ஏர்மன் "யூ.எசு.எசு. யுனைட்டட் இசுடேட்ட்" என்னும் கப்பலில் பணியாளராக இணைந்து 1844 ஆம் ஆண்டு பொசுட்டனை அடைந்தார். இந்த அநுபவங்களை ஏர்மன், "டைப்பீ", "ஓமோ", "வைட் ஜாக்கெட்" என்னும் பெயர்களில் புதினங்களாக எழுதி வெளியிட்டார்.
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏர்மன்_மெல்வில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது