ஏர்மன் மெல்வில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
இடத்துக்கிடம் செல்வதில் இருந்த விருப்பினாலும், குடும்பத்தினரின் உதவியின்றிச் சொந்தக்காலில் நிற்க விரும்பியதாலும் ஏர்மன் [[நில அளவை]]ப் பணியில் சேர்ந்தார். ஆனால், இப்பணியில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் இவரது உடன்பிறந்தார் இவரை லிவர்பூலுக்குச் செல்லும் நியூயார்க்கைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் பணிக்குச் சேர்த்துவிட்டார். இக்கப்பலில் லிவர்பூலுக்குச் சென்று அதே கப்பலிலேயே திரும்பிவந்தார். 1839ல் லிவர்பூல் சென்று வந்தது தவிர 1837 தொடக்கம் 1840 வரையான 3 ஆண்டுக் காலத்தில் பெரும் பகுதி ஆசிரியப் பள்ளியில் செலவழிந்தது. 1840 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மீண்டும் கப்பலில் பயிற்சி மாணவனாகச் சேர்வதற்கு முடிவு செய்த ஏர்மன், 1841 சனவரி 3 ஆம் தேதி மசசூச்செட்சின் பெட்போர்டில் இருந்து பசிபிக் பெருங்கடலுக்குச் சென்ற திமிங்கில வேட்டைக் கப்பலான அக்கூசுநெட்டில் பயணமானார். தனது வாழ்க்கை அந்த நாளிலேயே தொடங்கியதாகப் பின்னாளில் ஏர்மர் கூறினார். அவரது இந்த 18 மாத வாழ்க்கை குறித்த நேரடி விவரங்கள் எதையும் ஏர்மன் விட்டுச் செல்லவில்லை எனினும், இவரது ஆக்கங்களான ''மொபி-டிக்'', ''த உவேல்'' (திமிங்கிலம்) என்னும் இரண்டிலும் இக்கப்பல் பயண வாழ்வின் பல அம்சங்கள் இருக்கக்கூடும்.
 
1842 சூலையில் [[மார்க்கெசாசுத் தீவு|மார்க்கெசாசுத் தீவில்]] கப்பலில் இருந்து சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிய மெல்வில், மூன்று கிழமைகள் "டைப்பீ''" (Typee) என்னும் தாயக இனத்தவர் மத்தியில் வாழ்ந்தார். அத்தீவில் வாழும் ஏனைய இரண்டு இனக்குழுக்களினால் மனித இறைச்சி உண்பவர்களாக "டைப்பீக்கள்" கருதப்பட்டாலும், ஏர்மனை அவர்கள் நன்றாகவே நடத்தினர். ஏர்மன் மெல்விலின் முதல் புதினமான "டைப்பீ" அவ்வினத்தைச் சேர்ந்த அழகிய இளம் பெண்ணொருத்தி உடனான குறுகியகாலக் காதல் பற்றிக் கூறுகிறது.
 
"அக்கூசுநெட்" கப்பலில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிச் சிந்திக்காத ஏர்மன் மெல்வில், [[அவாய்]]க்குச் செல்லும் இன்னொரு திமிங்கில வேட்டைக் கப்பலில் ஏறி [[ஒனலூலு]]வில் அக்கப்பலை விட்டு வெளியேறினார். ஒனலூலுவில் இருக்கும்போது தாயக மக்களை மதம் மாற்ற முயன்ற கிறித்தவ சபையினரின் நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்ததனால் இவர் ஒரு சர்ச்சைக்கு உரியவராக விளங்கினார். நான்கு மாதங்கள் அங்கே எழுத்தராகப் பணிபுரிந்த ஏர்மன் "யூ.எசு.எசு. யுனைட்டட் இசுடேட்ட்" என்னும் கப்பலில் பணியாளராக இணைந்து 1844 ஆம் ஆண்டு பொசுட்டனை அடைந்தார். இந்த அநுபவங்களை ஏர்மன், "டைப்பீ", "ஓமோ", "வைட் ஜாக்கெட்" என்னும் பெயர்களில் புதினங்களாக எழுதி வெளியிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்மன்_மெல்வில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது