ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6,256 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lt:Joseph John Thomson)
No edit summary
[[படிமம்:Jj-thomson2.jpg|thumb|ஜெ.ஜெ. தாம்சன்]]
 
'''ஜெ.ஜெ. தாம்சன்''' என்று பொதுவாக அறியப்படுகின்ற '''[[சர்]] ஜோசப் ஜான் தாம்சன்'''([[டிசம்பர் 18]], [[1856]] - [[ஆகஸ்ட் 30]], [[1940]])அணுவின் அடிப்படைப் பொருளான னின்னணு எனப்படும் [[எதிர்மின்னி|எலக்ட்ரானைக்]] கண்டுபிடித்த ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலார்]] ஆவார். இவர் [[மின்சாரவியல்]], [[காந்தவியல்]] குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன [[அணு]] இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். [[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ஆகியவற்றைப் பெற்றவர்.
==இளமை==
1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள சீத்தம் குன்று (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செஸ்டரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து ஸ்மித் பரிசை வென்றார். அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். <br />
 
இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை, ஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது. 1883 -ல் அக்கல்லூரியிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimenral Physics) கேவண்டிஷ் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார். ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் 'ஜார்ச் பேஜட் தாம்சன்' மிகச்சிறந்த இயற்பியல் பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937-ல் நோபல் பரிசையும் வென்றார்.
 
==ஆய்வுப்பணிகள்==
தாம்சன் முதன்முதலில் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து " நீர்ச்சுழி வளையங்களின் இயக்கத்தில் ஆய்வு" (Treatise on the motion of Vortex Rings) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அது 1884-ல் ஆதம்சு பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. 1886-ல்'இயற்பியல், வேதியலில் இயக்கவியலின் தாக்கம்'(Application of the Dynamics to Physics and Chemistry) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.
 
1892-ல் 'மின்சாரவியல், காந்தவியலில் அண்மை ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்' (Notes on Recent Researches in Electricity and Magnetism)என்ற நூலை வெளியிட்டார். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எழுதிய நூலின் விளக்கவுரையாக அவருடைய நூலுக்கு மூன்றாவது தொகுதியாக இது அமைந்திருந்தது. பேராசிரியர் பாண்டிங் (J.H.Poynting) என்பவருடன் இணைந்து இயற்பியலுக்கான பாடத்தைப் 'பொருளின் குணங்கள்'(Properties of Matter) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.
 
 
 
 
 
{{commons|Joseph John Thomson}}
15,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1026675" இருந்து மீள்விக்கப்பட்டது