அச்சே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
அதன் பின்னர் வந்த அச்சே அரசின் ஆட்சியாளர் [[இசுலாம்]] மதத்தைத் தழுவினார்.<ref name="BW114">Barwise and White, 114</ref> 15 ஆம் நூற்றாண்டில் இதன் மன்னர் அலீ முகாயத் சேக் என்பவரால் இது சுல்தானகமாகியது. அவர் 1520 ஆம் ஆண்டு வடக்கு [[சுமத்திரா]]வில் தன்னுடைய அதிகாரத்தை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.<ref>Ricklefs, 32</ref> [[டெலி சுல்தானகம்]], பெடிர், பசாய் என்பவற்றை வெற்றிகொண்ட அவர் சுமத்திராவில் நிலவிய [[அரு அரசு|அரு நாட்டு]] அரசையும் தாக்கினார். அவரது மகன் அலாவுத்தீன் அல்-கக்கார் தன்னுடைய அதிகாரத்தை தென் சுமத்திரா வரை விரிவாக்கினார். [[சொகோர் சுல்தானகம்]], மலாக்கா என்பவற்றை அவர் தொடர்ச்சியாகத் தாக்கிய போதும் [[மலாக்கா நீரிணை|மலாக்கா நீரிணையில்]] கேந்திர நிலையமொன்றைப் பெறுவதில் குறைந்தளவிலேயே வெற்றி பெற்றார்.<ref>Ricklefs, 33</ref> அவருக்கு உதவியாக உதுமானியப் பேரரசு, 15 கப்பல்களில் ஆட்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற சுடுகலன்களை ''குர்தொக்லு கிசிர் ரைசு'' என்பவரது தலைமையில் அனுப்பி வைத்தது.<ref name="BW114"/> தென்கிழக்கு ஆசிய இசுலாமிய சுல்தானகங்கள் சுடுகலன்களைப் பயன்படுத்தத் தொடங்கியமைக்கு அதுவே அடிப்படையாகும்.
 
அச்சே சுல்தானகத்தில் நிலவிய உள்நாட்டுக் குழப்பங்கள் வலிமை மிக்க ஆட்சியாளர் ஒருவர் உருவாவதைத் தடுத்தன. 1607 ஆம் ஆண்டு சுல்தான் ''இசுகந்தர் முடா'' ஆட்சிக்கு வரும் வரை இக்குழப்பங்கள் நீடித்தன. சுமாத்திராவின் பெரும்பாலான பகுதிகளுக்கும் தன்னுடைய அதிகாரத்தை விரிவாக்கிய சுல்தான் இசுகந்தர் முடா [[மலேசியா|மலாயத் தீபகற்பத்தில்]] வெள்ளீய உற்பத்தியில் முன்னணியில் இருந்த ''[[பகாங்'']] பகுதியையும் வெற்றி கொண்டார். 1629 ஆம் ஆண்டு அவர் [[மலாக்கா]] மீது போர் தொடுத்த போது அவரது வலிமை மிக்க கப்பற் படையின் வன்மை அழிந்தது. அப்போரில் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரும்]] [[சொகோர் சுல்தானகம்|சொகோர் சுல்தானகமும்]] இணைந்து அவரை எதிர்த்தன. அவரது படைக் கப்பல்கள் அனைத்தையும் அழித்ததுடன் அவரது படையின் 19000 வீர்ரகள் கொல்லப்பட்டதாக போர்த்துக்கேய தகவல்கள் கூறுகின்றன.<ref>Ricklefs, 34</ref><ref name="Hall">*D. G. E. Hall, '''தென்கிழக்காசிய வரலாறு'''. லண்டன்: மெக்மிலன், 1955.</ref> எனினும், அதே ஆண்டில் [[கடாரம்|கடாரத்தின்]] மீது போர் தொடுத்து வெற்றி கொண்டதன் மூலம் அச்சே சுல்தானகம் தனது படை வலிமையைக் காட்டியது..<ref name="Hall" /> சுல்தான் இசுகந்தர் முடாவின் மருமகனும் பகாங் இளவரசருமான இசுகந்தர் தானி அவரைத் தொடர்ந்து ஆட்சியிலமர்ந்தார். இசுகந்தர் தானி தனது ஆட்சியின் போது அச்சே சுல்தானகத்தின் உள்ளக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.
 
சுல்தான் இசுகந்தர் தானியின் ஆட்சியைத் தொடர்ந்து அச்சே சுல்தானகத்தை ஒரு பெண்ணரசி (சுல்தானா) ஆட்சி செய்தார். அப்போது, அச்சே சுல்தானகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அரசுகளின் மக்கள்<ref name="Hall" /> சுதந்திர வேட்கையுற்று ஆங்காங்கே கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இதனால் அச்சே சுல்தானகம் வலுவிழக்கத் தொடங்கியது. அதே வேளை அப்பகுதியிலிருந்த ஏனைய அரசுகள் வலுப் பெறத்வலுப்பெறத் தொடங்கின. அதனால் சுல்தான் பதவி வெறுமனே பெயரளவிலானதாக மாறியது.<ref>Ricklefs, 36</ref> 1680-களில் அங்கு சென்ற பாரசீகப் பயணி ஒருவர் [[சுமத்திரா]]வைப் பற்றி விவரிக்கையில், "அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தனியான அரசரோ ஆளுநரோ இருந்தார். அங்கிருந்த ஆட்சியாளர் எவரும் வேறெவருக்கும் திறை செலுத்தாமல் தம் சுதந்திரத்தைப் பேணிக் கொண்டிருந்தனர்"<ref name="BW117">Barwise and White, 117</ref> என எழுதுகிறார்.
 
==கலாச்சாரமும் ==
"https://ta.wikipedia.org/wiki/அச்சே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது