நகர்ப்புற அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
==பல்மைய மாதிரி==
1954 ஆம் ஆண்டில் புவியலாளர்களான சி. டி. அரிசு, ஈ. எல். உல்மன் ஏனும் இருவர் நகர்ப்புற அமைப்புக் குறித்த பல்மைய மாதிரியை உருவாக்கினர். ஒரு நகரம் பல மையங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும், அம்மையங்களைச் சுற்றிப் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் இம் மாதிரி விளக்குகிறது. சில நடவடிக்கைகள் குறித்த சில [[புள்ளி]]கள் அல்லது [[கணு]]க்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றன, வேறு சில நடவடிக்கைகள் அப் புள்ளிகளைத் தவிர்க்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பல்கலைக்கழகக் கணு, படித்தோர் குடியிருப்புக்கள், நூல் விற்பனை நிலையங்கள் போன்றவற்றைக் கவரும் அதேவேளை, ஒரு [[வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையக்]] கணு, விடுதிகளையும், களஞ்சியப்படுத்தல் வசதிகளையும் கவரக்கூடும். ஒன்றுடன் ஒன்று பொருந்திவராத நடவடிக்கைகள் ஓரிடத்தில் கூடி அமைவதில்லை. கனரகத் தொழிற்சாலைகளும், உயர்வருவாயினர் குடியிருப்புக்களும் ஓரிடத்தில் அமைவது அரிதாக இருப்பது இதனாலேயே.
 
==ஒழுங்கற்ற கோல மாதிரி==
இது, "ஊர் நிலையில் இருந்து நகர நிலைக்கு மாறும் நிலை"க்கு உரிய பண்புகளைக் கொண்ட பொது இடங்களின் ஒழுங்கமைப்பைக் குறிக்கும். பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் இதனைக் காணலாம். இம்மாதிரி, முறையான திட்டமிடல் இன்மையாலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் கட்டுமானங்கள் இடம்பெறுவதாலும் உருவாகிறது. இது, [[ஆப்பிரிக்கா]], [[இலத்தீன் அமெரிக்கா]], [[ஆசியா]] போன்ற கண்டங்களிலும், ஐரோப்பாக் கண்டத்தின் சில பகுதிகளிலும் உள்ள பழைய நகரங்களுக்குப் பொருந்துகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நகர்ப்புற_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது