ஒருமைய வலய மாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
# குடியிருப்புப் பகுதி. இது பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர் வாழும் பகுதி. நல்ல தரத்தில் அமைந்த வீடுகளைக் கொண்டது.
# பயணம் செய்வோர் வலயம். இது அன்றாடம் வேலைத் தலங்களுக்குப் பயணம் செய்வோர் வாழும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது.
 
முன்னர் நகரை கீழ்-இடை-மேல் என்னும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி மைய வணிகப் பகுதி கீழ்நகரம் என்றும், வசதி படைத்தவர்கள் வாழும் குடியிருப்பு வெளிப் பகுதி மேல் நகரம் என்றும், இரண்டுக்கும் இடையில் காணப்படும் பகுதிகள் இடை நகரம் என்றும் கொள்ளப்பட்டன. மேற் சொன்ன பிரிப்பு முறையை விட ஒருமைய வலய மாதிரி விரிவானது.
 
பர்கெசின் ஆய்வு [[வாடகைக் கேள்வி வளைவு|வாடகைக் கேள்வி வளைவை]] அடிப்படையாகக் கொண்டது. இக் கோட்பாட்டின் கூற்றுப்படி, ஒருமைய வளையங்கள், மக்கள் நிலத்துக்குக் கொடுக்க விரும்பும் பணத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டவை. மேற்படி நிலத்தின் மதிப்பு அந்நிலத்தில் இடம்பெறக்கூடிய வணிக முயற்சியில் இருந்து கிடைக்கக்கூடிய இலாபத்தின் அளவில் தங்கியுள்ளது. நகரின் மையப்பகுதி அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் என்பதால் [[சில்லறை வணிகம்|சில்லறை வணிக]] முயற்சிகளுக்கு இப்பகுதி அதிக இலாபம் தரக்கூடியது. உற்பத்தி நடவடிக்கைகள் சற்றுக் குறைவான தொகையையே நிலத்துக்குத் தர விரும்புவர். தொழிலாளர்கள் இலகுவாக அணுகத் தக்கதாகவும், பொருட்களை இலகுவாக உள்ளே கொண்டுவரவும், வெளியே கொண்டு செல்லவும் கூடியதாகவும் இருப்பது உற்பத்தி முயற்சிகளுக்கு முக்கியமானது. நிலத்துக்குக் குறைவான விலையையே கொடுக்கக்கூடிய குடியிருப்பு நடவடிக்கைகள் இவற்றுக்கு வெளியே உள்ள பகுதிகளை எடுத்துக்கொள்கின்றன.
 
[[பகுப்பு:நகரத் தளவமைப்பு மாதிரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒருமைய_வலய_மாதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது