புறநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Suburbia by David Shankbone.jpg|thumb|கொலராடோவில் உள்ள கொலராடோ இசுப்பிரிங்கு என்னும் புறநகர். மூடிய வழிகள் புறநகர் வடிவமைப்பின் வழமையான அம்சங்களில் ஒன்று.]]
'''புறநகர்''' (Suburb) என்பது, நகரங்களின் புறப் பகுதியில் அவற்றின் ஒரு பகுதியாக அல்லது நகரத்தில் இருந்து அன்றாடம் போக்குவரத்துச் செய்யக்கூடிய தொலைவில் தனியாக அமைந்திருக்கும் [[குடியிருப்பு]]ப் பகுதியைக் குறிக்கும். முதல் வகைக்கு எடுத்துக்காட்டாக, [[ஆசுத்திரேலியா]], [[நியூசிலாந்து]] ஆகிய நாடுகளில் உள்ள புறநகர்களையும், இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டாக [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் காணப்படும் புறநகர்களையும் கூறலாம். சில புறநகர்கள் தன்னாட்சி நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான புறநகர்கள் உள்நகரப் பகுதிகளை விடக் குறைவான [[மக்கள்தொகை அடர்த்தி]]யைக் கொண்டனவாக இருக்கின்றன. மேம்பட்ட சாலைப் போக்குவரத்து வசதிகளும், தொடருந்துப்[[தொடருந்து]]ப் போக்குவரத்து வசதிகளும் அறிமுகமானதன் விளைவாக 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் பெரிய அளவில் புறநகர்கள் உருவாயின. தமது சூழலில் பெருமளவிலான மட்டமான நிலப்பரப்பைக் கொண்ட நகரங்களைச் சுற்றிப் புறநகர்கள் உருவாகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நகர்ப்புற அமைப்பு]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/புறநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது