"நரந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* சோலையில் பூத்துக் குலுங்கும். <ref>பரிபாடல் 7-11</ref>
* காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். <ref>பரிபாடல் 16-15</ref>
* நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். <ref>நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302 </ref>
* நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மொருள்களில் ஒன்று. <ref>நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237</ref>
* அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். <ref>புறநானூறு 235</ref>
* நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். <ref>நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266</ref> <ref>கலித்தொகை 54-5</ref> <ref>நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553</ref>
* இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம். <ref>கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11</ref>
* புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம். <ref>மணிமேகலை 3-162</ref>
==இவற்றையும் காண்க==
:[[சங்ககால மலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1061385" இருந்து மீள்விக்கப்பட்டது