வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த முசுலிம் வேதியியலாளர்களுள் சாபிர் இபின் ஐய்யான், [[அல்-கின்டி]], [[அல்-ராசி]], [[அல்-பிரூனி]], [[அல்-அசென்]] என்போர் அடங்குவர். சாபிரின் ஆக்கங்கள், 14 ஆம் நூற்றாண்டின் [[எசுப்பானியா]]வைச் சேர்ந்த [[சியுடோ-கெபெர்]] என்பவரின் [[இலத்தீன்]] மொழிபெயர்ப்புக்கள் ஊடாக ஐரோப்பாவுக்கு அறிமுகமாகின. சியுடோ-கெபெர், கெபெர் என்னும் புனை பெயரில் தானாகவும் சில நூல்களை எழுதியுள்ளார். வேதியியலின் வளர்ச்சியில் இந்திய இரசவாதிகளினதும், உலோகவியலாளர்களினதும் பங்களிப்புகளும் குறிப்பிடத் தக்கவை.
 
[[Image:Antoine lavoisier color.jpg|thumb|right|200px|தற்கால வேதியியலின் தந்தை எனக் கருதப்படும் [[ஆன்ட்டொயின்-லாரென்ட் டி லவோய்சியர்]]<ref>{{Cite journal|last=Eagle |first=Cassandra T. |coauthors=Jennifer Sloan |title=Marie Anne Paulze Lavoisier: The Mother of Modern Chemistry |journal=The Chemical Educator |year=1998 |volume=3 |issue=5 |pages=1–18 |url=http://www.springerlink.com/content/x14v35m5n8822v42/fulltext.pdf |format=PDF |accessdate=2007-12-14 |doi=10.1007/s00897980249a }}</ref>]]
ஐரோப்பாவில் வேதியியலின் எழுச்சி, இருண்ட காலம் என அழைக்கப்படும் காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட கொள்ளை நோயின் காரணமாகவே ஏற்பட்டது. இது மருந்துகளுக்கான தேவையைக் கூட்டியது. அக்காலத்தில் எல்லா நோயையும் குணப்படுத்தவல்ல "காயகல்பம்" என ஒன்று இருப்பதாகக் கருதினர். ஆனால், இரசவாதக்கல் என்பதைப் போலவே இதையும் எவரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
 
இரசவாதத்தைக் கைக்கொண்ட சிலர் அதை ஒரு அறிவார்ந்த செயற்பாடாகவே கருதி வந்தனர். அவர்களிற் சிலர் காலப் போக்கில் முன்னேற்றமான கருத்துக்களையும் முன்வைத்தனர். எடுத்துக்காட்டாக [[பராசெல்சசு]] (1493–1541) என்பார், வேதியியல் பொருட்களையும் மருந்துகளையும் குறித்துத் தனக்கு இருந்த தெளிவற்ற புரிதலை வைத்துக்கொண்டு, நான்கு மூலக் கொள்கையை மறுத்து இரசவாதமும் அறிவியலும் கலந்த கலப்புக் கொள்கையொன்றை உருவாக்கினார். இதுபோலவே, கணிதத் துறையில் கூடுதலான கட்டுப்பாடுகளையும், அறிவியல் கவனிப்புக்களில் பக்கச் சார்பை நீக்குவதையும் வலியுறுத்திய மெய்யியலாளர்களான சர் [[பிரான்சிசு பேக்கன்]] (1561–1626), [[ரெனே டெக்காட்டசு]] (1596–1650) போன்றோரின் செல்வாக்கு அறிவியல் புரட்சிக்கு வித்திட்டது. வேதியியலில், இது [[ராபர்ட் போயில்]] (1627–1691) என்பவருடன் தொடங்கியது. இவர் வளிம நிலையின் இயல்புகள் தொடர்பான விதி ஒன்றை வெளிப்படுத்தினார். இது [[போயில்சின் விதி]] என அழைக்கப்படுகிறது.
 
[[ஆன்ட்டொயின் லவோய்சியர்]] என்பவர் 1783 ஆம் ஆண்டில் திணிவுக் காப்புக் கோட்பாட்டையும், 1800ல் [[ஜான் டால்ட்டன்]] அணுக் கோட்பாட்டையும் வெளியிட்டனர். உண்மையில் இதன் பின்னரே வேதியியல் முதிர்ச்சியடைந்தது எனலாம். திணிவுக் காப்பு விதியினதும், லவோய்சியரின் ஆக்கங்களைஒயே பெரிதும் அடிப்படையாகக் கொண்ட எரிதலுக்கான ஒட்சிசன் கோட்பாடினதும் விளைவாக வேதியியலை மீளுருவாக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. எல்லாச் சோதனைகளையும், ஒரே கோட்பாட்டுச் சட்டகத்துள் பொருத்துவதற்கான முயற்சியே லவோய்சியர் வேதியியலுக்கு அளித்த அடிப்படையான பங்களிப்பு ஆகும்.
 
 
== பருப்பொருட்களின் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது