குடம்புளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
==காணப்படும் இடங்கள்==
[[File:Assam-fruit-1-1.jpg|thumb]][[File:assam-fruit-2-1.jpg|thumb]][[File:Assam-gelugar-fruit-cut-in-half.jpg|thumb]]
இலங்கையின் ஈரவலயப் பகுதிகள், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த இப்பயிர் கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றன. புளிப்பு சுவையுடைய இது புளிக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.
 
==பூக்கும் காலம்==
குடம்புளி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. மரமானது இருபால் பூக்களை இரு வேறு மரங்களில் உற்பத்தி செய்கிறது. பூக்கள் முதிர்ந்த குச்சிகளின் இலைக் கணுக்களிலும் கிளை நுனியிலும் உற்பத்தியாகின்றன. பொதுவாக ஆண்மரங்களில் கொத்திற்கு மூன்று முதல் ஐந்து பூக்களும் பெண் மரங்களில் ஒரு கொத்தில் 2 முதல் 3 பூக்களும் உற்பத்தியாகின்றன. ஆண் மலர்கள் நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். ஆனால், பெண் மலர்கள் குட்டையாக, சற்று பருமனாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/குடம்புளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது