குடம்புளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
மால்பிஜியேல்சு
குடும்பம்:
குலுசியேசியா
பேரினம்:
கார்சினியா
இனம்:
கா. கும்மி குட்டா
இருசொற் பெயரீடு
கார்சினியா கும்மி குட்டா
(லின்னேயஸ்) ராக்சுப்.
வேறு பெயர்கள் [1]
  • கம்போகியா binucao பிளாங்கோ
  • கம்போகியா கும்மி குட்டா எல்.
  • கம்போகியா சாலிடாரியா சுடோக்சு
  • கார்சினியா அபினிசு விட் & அர்ன்.
  • கார்சினியா கம்போகியா (கேர்ட்டன்) தேசர்.
  • கார்சினியா சல்கேட்டா சுடோக்சு

குடம்புளி (Garcinia gummi-gutta, கார்சினியா கும்மி குட்டா, இலங்கை வழக்கு: சீமை கொறுக்காய்) என்ற இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம் கட்டிபரேயீ (Guttiferae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. மலபார் புளி[2] மற்றும் காம்போட்ஜ் (கன்னடம்: gambooge,ಕಾಚುಪುಳಿ) என்று அழைக்கப்படும் குடம் புளியானது 'கார்சினியா கம்போஜியோ'(Garcinia cambogia)'[3] என்று தாவரவியலாளர்களால் அறியப்படும் பழநறுமணப் பயிராகும்.

காணப்படும் இடங்கள்

தொகு
 

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் நடு ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த இப்பயிர் கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றன. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.

பூக்கும் காலம்

தொகு

குடம்புளி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. மரமானது இருபால் பூக்களை இரு வேறு மரங்களில் உற்பத்தி செய்கிறது. பூக்கள் முதிர்ந்த குச்சிகளின் இலைக் கணுக்களிலும் கிளை நுனியிலும் உற்பத்தியாகின்றன. பொதுவாக ஆண்மரங்களில் கொத்திற்கு மூன்று முதல் ஐந்து பூக்களும் பெண் மரங்களில் ஒரு கொத்தில் 2 முதல் 3 பூக்களும் உற்பத்தியாகின்றன. ஆண் மலர்கள் நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். ஆனால், பெண் மலர்கள் குட்டையாக, சற்று பருமனாக இருக்கும்.

 
நீண்ட நாள் வெயிலில் உலர்ந்து கறுப்பு நிறமான குடம்புளி

பயிரிடும் முறை

தொகு

மரமானது பழுப்பு நிறமாகவும், நடுமரப்பகுதி கடினமாகவும் இருக்கும். மரங்கள் காய்ப்பதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வதால் நீண்ட காலத்திற்கு ஆண் மரமா? அல்லது பெண்மரமா? என அறிவது சிரமமானதாகும். தற்போது விதைவழி மற்றும் இளந்தண்டு ஒட்டு முறையிலும் குடம்புளி செடிகள் உருவாக்கப்படுகின்றன. எத்தகைய தட்பவெட்ப நிலைகளிலும், எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது குடம்புளி. இதை, குறிப்பிடும்படியான எந்த நோய்களும், பூச்சிகளும் தாக்குவதில்லை.

பயன்கள்

தொகு

குடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.[4] பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும்.[5] ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது. உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம்[6]. இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது.[7] கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Garcinia gummi-gutta (L.) Roxb.". World Checklist of Selected Plant Families. ராயல் தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013 – via The Plant List.
  2. "Garcinia cambogia". National Center for Complementary and Integrative Health, US National Institutes of Health. 1 December 202. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.
  3. Publications & Information Directorate, Council of Scientific & Industrial Research (1986). G. cambogia Desr. The Useful Plants of India. (New Delhi: Publications & Information Directorate, 1986) 229.
  4. "The acid rinds of the ripe fruit are eaten, and in Ceylon are dried, and eaten as a condiment in curries." Drury, Heber (1873). Garcinia gambogia (Desrous). The Useful Plants of India, second edition. (London: William H. Allen & Co., 1873) 220.
  5. "Fruits edible, but too acidic, also pickled; rind used as a condiment. Seeds yield an edible fat....A decoction of rind is given in rheumatism and bowel complaints."
  6. Garcinia cambogia Desrouss. Dictionary of Economic Plants, second edition. (New York: Verlag von J. Cramer, 1968) 237. Articles Lewis, Y. S. and S. Neelakantan (1965). (–)-Hydroxycitric acid--the principal acid in the fruits of Garcinia cambogia (Assam Fruit) Desr. Phytochemistry 4 (1965) 619-625. Sreenivasan, A. and R. Venkataraman (1959).
  7. Lobb A (14 April 2009). "Hepatoxicity associated with weight-loss supplements: a case for better post-marketing surveillance". World J. Gastroenterol. 15 (14): 1786–7. doi:10.3748/wjg.15.1786. பப்மெட்:19360927. பப்மெட் சென்ட்ரல்:2668789. http://www.wjgnet.com/1007-9327/15/1786.asp. பார்த்த நாள்: 24 மார்ச் 2012. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Garcinia gummi-gutta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடம்புளி&oldid=3612255" இலிருந்து மீள்விக்கப்பட்டது