"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,975 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
===தன்னியல்புக் கட்டுப்பாடு===
மூளைத்தண்டுப் பகுதியில் உள்ள சிறப்புப் பகுதிகள், மூச்சுவிடுவதைத் தன்னியல்பாகக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட நேரமொன்றில் உடலின் தேவையைப் பொறுத்து மூச்சுவிடும் வீதம், அதன் ஆழம் என்பவை இவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன. குருதியில் காபனீரொட்சைடு கூடும்போது, அது குருதியில் உள்ள நீருடன் சேர்ந்து காபோனிக் அமிலத்தை உருவாக்குகிறது. உடற்பயிற்சிகளின்போது ஏற்படும் [[காற்றில்லா மூச்சியக்கம்]] [[இலக்டிக் அமிலம்|இலக்டிக் அமிலத்தை]] உருவாக்குகிறது. இவை குருதியின் பி.எச் அளவைக் குறைக்கின்றன. இது [[கழுத்துத்தமனி முடிச்சு]], [[பெருந்தமனி முடிச்சு]] ஆகியவற்றிலும், [[நீள்வளைய மையவிழையம்|நீள்வளைய மையவிழையத்திலும்]] உள்ள [[வேதியுணரி]]களைத் தூண்டுகிறது. வேதியுணரிகள், நீள்வளைய மையவிழையத்திலும் [[மூளைப்பாலம்|மூளைப்பாலத்திலும்]] உள்ள மூச்சியக்க மையத்துக்கு கூடுதலான நரம்புத் தூண்டல்களை அனுப்புகின்றன. அங்கிருந்து [[மென்றகட்டு நரம்பு]], [[மார்பு நரம்பு]] ஆகியவற்றூடாக நரம்புத் தூண்டல்கள் செல்கின்றன.
 
==மூச்சுவிடல் வளிமங்கள்==
ஒட்சிசனே எல்லா [[மூச்சுவிடல் வளிமம்|மூச்சுவிடல் வளிமங்களினதும்]] இன்றியமையாத கூறு. மனிதர் மூச்சுவிடும்போது உள்ளிழுக்கும் வளியில் கனவளவுப்படி 78% [[நைதரசன்|நைதரசனும்]], 21% ஒட்சிசனும், 0.96% [[ஆர்கன்|ஆர்கனும்]], 0.04% காபனீரொட்சைடு, [[ஈலியம்]], நீர், பிற வளிமங்கள் என்பனவும் அடங்கியுள்ளன. நீரடி மூழ்காளர்கள் ஒட்சிசன் அல்லது ஈலியச் செறிவு கொண்ட வளிமக் கலவைகளைப் பயன்படுத்துவது உண்டு. மருத்துவக் கவனிப்பில் உள்ள நோயாளருக்கு ஒட்சிசனும், வலிநீக்கி வளிமங்களும் கலந்த கலவைகளைக் கொடுப்பது உண்டு. விண்வெளி உடைகளில் உள்ள சூழல் தூய ஒட்சிசன் ஆகும். பொதுவாகக் குறைந்த அளவு ஒட்சிசன் சூழலில் தங்கியிருக்கும் மனிதர், தூய ஒட்சிசனைக் கொண்ட அல்லது ஒட்சிசன் செறிவு மிக்க சூழல்களில் பதற்ற நிலைக்கு அல்லது [[மகிழுணர்வு நோய்]]க்கு ஆளாகக்கூடும்.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090700" இருந்து மீள்விக்கப்பட்டது