மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
===தன்னியல்புக் கட்டுப்பாடு===
மூளைத்தண்டுப் பகுதியில் உள்ள சிறப்புப் பகுதிகள், மூச்சுவிடுவதைத் தன்னியல்பாகக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட நேரமொன்றில் உடலின் தேவையைப் பொறுத்து மூச்சுவிடும் வீதம், அதன் ஆழம் என்பவை இவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன. குருதியில் காபனீரொட்சைடு கூடும்போது, அது குருதியில் உள்ள நீருடன் சேர்ந்து காபோனிக் அமிலத்தை உருவாக்குகிறது. உடற்பயிற்சிகளின்போது ஏற்படும் [[காற்றில்லா மூச்சியக்கம்]] [[இலக்டிக் அமிலம்|இலக்டிக் அமிலத்தை]] உருவாக்குகிறது. இவை குருதியின் பி.எச் அளவைக் குறைக்கின்றன. இது [[கழுத்துத்தமனி முடிச்சு]], [[பெருந்தமனி முடிச்சு]] ஆகியவற்றிலும், [[நீள்வளைய மையவிழையம்|நீள்வளைய மையவிழையத்திலும்]] உள்ள [[வேதியுணரி]]களைத் தூண்டுகிறது. வேதியுணரிகள், நீள்வளைய மையவிழையத்திலும் [[மூளைப்பாலம்|மூளைப்பாலத்திலும்]] உள்ள மூச்சியக்க மையத்துக்கு கூடுதலான நரம்புத் தூண்டல்களை அனுப்புகின்றன. அங்கிருந்து [[மென்றகட்டு நரம்பு]], [[மார்பு நரம்பு]] ஆகியவற்றூடாக நரம்புத் தூண்டல்கள் செல்கின்றன.
 
எடுத்துக்காட்டாக, உடற்பயிற்சியின் போது தசைநார்களிலுள்ள கலங்களில் ஏற்படும் கூடுதலான மூச்சியக்கத்தினால், குருதியில் உள்ள காபனீரொட்சைடின் அளவும் கூடுகிறது. இது, [[கழுத்துத்தமனி முடிச்சு]], [[பெருந்தமனி முடிச்சு]], மூச்சியக்க மையம் ஆகியவற்றிலுள்ள வேதியுணரிகளைத் தூண்டுவதால் மூச்சுவிடல் வீதம் கூடுகிறது. ஓய்வாக இருக்கும்போது, குருதியில் காபனீரொட்சைடின் அளவு குறைவாக இருக்கும். அதனால் மூச்சுவிடும் வீதம் குறைவாக இருக்கும். இது சரியான அளவில் தசைநார்களுக்கும், பிற உறுப்புக்களுக்கும் ஒட்சிசன் செல்வதை உறுதி செய்கிறது.
 
==மூச்சுவிடல் வளிமங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுவிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது