ஐரோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
==வரைவிலக்கணம்==
"ஐரோப்பா" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப் பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது. பழைக காலத்தில் கிரேக்க வரலாற்றாளரான [[ஏரோடாட்டசு]] (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, [[ஆசியா]], லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். [[நைல் ஆறு]]ம், [[ஃபாசிசு ஆறு]]ம் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, [[டான் ஆறு|டான் ஆறே]] ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார். முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் [[இசுட்ராபோ]] (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார். யூதர்களின் பழைய மத நூலான "யுபிலீசு நூல்", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத் தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் அந்நூல் கூறுகிறது.
 
கிறித்தவ-இலத்தீன் பண்பாட்டின் அடிப்படையிலும், செருமானிய மரபுகளின் அடிப்படையிலும் 8 ஆம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டுக் கூட்டான இலத்தீன்-கிறித்தவ உலகமே ஐரோப்பா என்பது அதற்கான பண்பாட்டு வரைவிலக்கணம். இது பைசன்டியம், [[இசுலாம்]] என்பவற்றுக்குப் புறம்பாக வடக்கு [[ஐபீரியா]], பிரித்தானியத் தீவுகள், [[பிரான்சு]], கிறித்தவமாக்கப்பட்ட மேற்கு செருமனி, அல்பைன் பகுதிகள், வடக்கு இத்தாலி, நடு இத்தாலி என்பவற்றை உள்ளடக்கியது. இந்தக் கருத்துரு "கரோலிங்கிய மறுமலர்ச்சி"யின் நீடித்திருக்கும் மரபுரிமைகளுள் ஒன்று ஆகும். புவியியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலுமான இந்தப் பிரிப்பு முறை பிந்திய நடுக்காலம் வரை தொடர்ந்தது. கண்டுபிடிப்புக் காலத்தில் இதன் சரியான தன்மை பற்றிக் கேள்வி எழுந்தது. ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுக்கும் பிரச்சினை 1730 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டது. சுவீடியப் புவியியலாளரும் நிலப்பட வரைவாளருமான [[இசுட்ரகலன்பர்க்]] (Strahlenberg) என்பவர் ஆறுகளுக்குப் பதிலாக [[ஊரல் மலைகள்|ஊரல் மலை]]களைக் கிழக்கு எல்லையாகக் கொள்ளவேண்டும் என முன்மொழிந்தார். இது உருசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆதரவு பெற்றது.
 
== ஐரோப்பாவிலுள்ள நாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது