நையாண்டிப் போலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''நையாண்டிப் போலி''' என்பது, இன்னொரு ஆக்கத்தை நையாண்டி செய்யும் பாணிய...
 
No edit summary
வரிசை 1:
'''நையாண்டிப் போலி''' (Parody) என்பது, இன்னொரு ஆக்கத்தை [[நையாண்டி]] செய்யும் பாணியில் ஆக்கப்பட்ட [[ஆக்கம்]] ஒன்றைக் குறிக்கும். இந்த நையாண்டி, ஒரு [[வஞ்சப் புகழ்ச்சி]]யாகவோ, அந்த ஆக்கம், அதில் இடம் பெறும் பாத்திரம், ஆக்கியோன் அல்லது தொடர்புடைய வேறு ஏதாவது ஒன்றின் மீதான விருப்பத்தைக் காட்டுகின்ற ஒரு நகைச்சுவையாகவோ[[வேடிக்கை]]யாகவோ, இருக்கலாம்.
 
''நையாண்டிப் போலி, விமர்சனத்துடன் கூடிய ஒரு போலச் செய்தல்'' என்று, இலக்கியக் கோட்பாட்டாளரான [[லிண்டா ஹச்செனன்]] (Linda Hutcheon) என்பவர் கூறுகிறார். [[சைமன் டென்ட்டித்]] என்னும் இன்னொரு திறனாய்வாளர், நையாண்டிப் போலிக்கு, ''இன்னொரு பண்பாட்டு ஆக்கம் அல்லது செயல்முறை குறித்து, தருக்க வாதத்துடன் கூடிய போலச் செய்தலை முன் வைக்கும், ஒரு பண்பாட்டுச் செயல்முறை'' என விளக்கம் அளித்துள்ளார்.
 
நையாண்டிப் போலிகள், [[இலக்கியம்]], [[இசை]], [[திரைப்படம்]] ஆகியவை உள்ளிட்ட எல்லாக் [[கலை ஊடகம்|கலை ஊடகங்களிலும்]] காணப்படுகின்றன. பண்பாட்டு இயக்கங்களும் நையாண்டிப் போலிக்கு உட்படுவதுண்டு.
 
 
[[பகுப்பு:கலை]]
[[பகுப்பு:நகைச்சுவை]]
"https://ta.wikipedia.org/wiki/நையாண்டிப்_போலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது