"தற்கால மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==உலகெங்கும் நவீன மொழிகள்==
==ஆசியா==
===சிங்கப்பூர்===
[[சிங்கப்பூர்]] தவிர்த்த பிற ஆசிய நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நாட்டின் தேசிய மொழியை பயில்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலம் பிரதான மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி [[மாண்டரின்]] சீனம், [[மலாய்]], [[தமிழ்]] மொழிகளில் ஒன்றை தாய்மொழிப் பாடமாக கற்பர் வெளினாடு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.
 
===இந்தியா===
[[இந்தியா|இந்தியாவில்]] ஆங்கிலம் மக்களின் முதல்மொழியாய் இல்லாவிடிலும், அரச அலுவல்களில் ஆங்கிலம் பயன்படுத்தபடுவதால் அனைவரும் கட்டாயம் ஆங்கிலம் கற்பிக்கப்படுவர். பெரும்பாலான மாணவர்கள் [[இந்தி|இந்தியையும்]] கற்பர். பிற இந்திய மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளை கற்பர்.
 
===மலேசியா===
[[மலேசியா|மலேசியாவில்]] தேசியமொழியாகிய [[மலாய்]] மொழி கட்டாயப் பாடமாகும். மலாய், ஆங்கிலத்துடன் [[தமிழ்]], [[மாண்டரின்]] ஆகிய மொழிகளும் தேசிய மாதிரிப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. தேசிய பள்ளிகளில் பாடங்கள் மலாய் மொழியில் கற்றுத் தரப்படுகின்றன. தேசிய மாதிரிப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழிலும், சீனத்திலும் கற்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, மலேசிய மாணவர்கள் இனவேறுபாடின்றி அனைவரும் மூன்று மொழிகளை பயிலலாம். இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட வில்லை.
 
===இலங்கை===
[[இலங்கை]] அரசுப் பள்ளிகளில் ஆட்சிமொழிகளான [[சிங்களம்|சிங்களத்திலும்]], [[தமிழ்|தமிழிலும்]] பாடங்கள் கற்றுத் தப்படுகின்றன. இவ்வகையில் கற்கும் மாணவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் மாணவர்கள் கற்க வேண்டும். பாடங்களை ஆங்கில வழியிலும் கற்க முடியும். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தாய்மொழியாக சிங்களத்தையும், தமிழையும் கற்க வேண்டும். சிங்கள மாணவர்கள் தமிழையும், தமிழையும் கற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. .
 
[[னேபாளம்|நேபாளத்தில்]] நேபாள மொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாக்கித்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதுவும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.
 
===ஆப்பிரிக்கா===
ஆப்பிரிக்க கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோகோ, துனீசியா போன்ற நாடுகளில் [[அரபி|அரபியும்]], [[பிரெஞ்சு|பிரெஞ்சும்]] பிரதானமாகக் கறக்க்ப்படும் மொழிகளாகும். எகிப்து, வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு எமிரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். இராக், பாலசுதீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பீக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.
 
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1148609" இருந்து மீள்விக்கப்பட்டது