தற்கால மொழிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நவீன மொழி என்பது மனிதர் பேசும் மொழிகளில் தற்போது வழக்கில் இருக்கும் மொழியாகும். மொழி கற்றலில் பயன்படும் இச்சொல், மொழியின் சிறப்பினால் கற்கப்படும் அழிந்த மொழிகளான இலத்தீன்,
தமிழ் மொழி,சமசுகிருதம் ஆகிய மொழிகளில் இருந்து வழக்கில் இருக்கும் பிரெஞ்சு, செருமன் போன்ற மொழிகளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுகிறது.
உலகெங்கும் நவீன மொழிகள்
தொகுஆசியா
தொகுசிங்கப்பூர்
தொகுசிங்கப்பூர் தவிர்த்த பிற ஆசிய நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நாட்டின் தேசிய மொழியைப் பயில்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலம் முதன்மை மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மாண்டரின் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் ஒன்றைத் தாய்மொழிப் பாடமாக கற்பர். பிற நாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.
இந்தியா
தொகுஇந்தியாவில் ஆங்கிலம் மக்களின் முதல்மொழியாய் இல்லாவிடிலும், அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தபடுவதால் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் இந்தியையும் கற்பர். பிற இந்திய மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் விளங்கும் தாய்மொழிகளைக் கற்பர்.
மலேசியா
தொகுமலேசியாவில் தேசியமொழியாகிய மலாய் மொழி கட்டாயப் பாடமாகும். மலாய், ஆங்கிலத்துடன் தமிழ், மாண்டரின் ஆகிய மொழிகளும் தேசிய மாதிரிப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. தேசிய பள்ளிகளில் பாடங்கள் மலாய் மொழியில் கற்றுத் தரப்படுகின்றன. தேசிய மாதிரிப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழிலும், சீனத்திலும் கற்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, மலேசிய மாணவர்கள் இனவேறுபாடின்றி அனைவரும் மூன்று மொழிகளை பயிலலாம். இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.
இலங்கை
தொகுஇலங்கை அரசுப் பள்ளிகளில் ஆட்சிமொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் பாடங்கள் கற்றுத் தப்படுகின்றன. இவ்வகையில் கற்கும் மாணவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். பாடங்களை ஆங்கில வழியிலும் கற்க முடியும். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தாய்மொழியாக சிங்களத்தையும், தமிழையும் கற்க வேண்டும். சிங்கள மாணவர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. .
பிற ஆசிய நாடுகள்
தொகுசீனா, யப்பான், பாக்கிஸ்த்தான், தென்கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஆங்கிலமே அதிகளவில் கற்கப்படும் மொழியாக இருக்கிறது. சீனாவில், மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்கின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது இல்லை. நேபாளத்தில் நேபாளமொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாகிஸ்த்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.
ஆப்பிரிக்கா
தொகுஆப்பிரிக்கக் கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோக்கோ, துனீசியா போன்ற நாடுகளில் அரபியும், பிரெஞ்சும் முதன்மையாகக் கற்கப்படும் மொழிகளாகும். எகிப்து , வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். ஈராக், பாலஸ்தீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.
ஐரோப்பிய ஒன்றியம்
தொகுஅனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் பள்ளிக்காலத்தில் வெளிநாட்டு மொழி ஒன்ற கற்க வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் அதிக மாணவர்களால் கற்கப்படும் மொழிகள்.
ஐக்கிய இராச்சியம்
தொகுஐக்கிய ராச்சியத்தில் ஆங்கிலமும் வேல்சு மொழியும் கற்பிக்கப் படுகின்றன. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றையும் பள்ளிக்காலத்தில் சில ஆண்டுகள் கற்க வேண்டும்.
ஐக்கிய அமெரிக்கா
தொகுஐக்கிய அமெரிக்காவிற்கு ஆட்சிமொழி இல்லையெனினும் மணவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் கற்கப்பட்ட மொழிகள் எசுப்பானியம், பிரெஞ்சு ,இத்தாலி, யப்பானியம், சீனம், உருசிய மொழி, அரபி மொழிகள் ஆகும்.