பாக்கித்தான்

தெற்காசியாவிலுள்ள ஒரு நாடு
(பாக்கிஸ்த்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாக்கித்தான் (Pakistan, பாகிஸ்தான், உருது: پاکستان‎), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (உருது: اسلامی جمہوریۂ پاکستان‎), ஆசியக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து. கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள இலாகூர் மற்றொரு முக்கிய நகரம்.

பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு
Islamic Republic of Pakistan
கொடி of பாக்கித்தான்
கொடி
சின்னம் of பாக்கித்தான்
சின்னம்
குறிக்கோள்: "நம்பிக்கை, ஒற்றுமை, ஒழுக்கம்"[1]
நாட்டுப்பண்: காமீ தரானா
قَومی ترانہ
"தேசியப் பண்"
பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் அடர் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது; உரிமை கோரப்பட்டு, ஆனால் கட்டுப்பாட்டில் இல்லாத நிலம் வெளிர் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் அடர் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது; உரிமை கோரப்பட்டு, ஆனால் கட்டுப்பாட்டில் இல்லாத நிலம் வெளிர் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
தலைநகரம்இசுலாமாபாது
33°41′30″N 73°03′00″E / 33.69167°N 73.05000°E / 33.69167; 73.05000
பெரிய நகர்கராச்சி
24°51′36″N 67°00′36″E / 24.86000°N 67.01000°E / 24.86000; 67.01000
ஆட்சி மொழி(கள்)
தேசிய மொழிகள்உருது[2]
பிராந்திய மொழிகள்மாகாண மொழிகள்
ஏனைய மொழிகள்77 இற்கும் அதிகம்[3]
இனக் குழுகள்
(2017[a])
சமயம்
மக்கள்பாக்கித்தானி
அரசாங்கம்கூட்டாட்சி இசுலாமிய நாடாளுமன்றக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
ஆரிப் அல்வி
செபாஷ் செரீப்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
தேசியப் பேரவை
விடுதலை 
23 மார்ச் 1940
• விடுதலை
14 ஆகத்து 1947
• குடியரசு
23 மார்ச் 1956
• கிழக்குப் பகுதி வெளியேறல்
26 மார்ச் 1971
14 ஆகத்து 1973
பரப்பு
• மொத்தம்
881,913 km2 (340,509 sq mi)[b][8] (33-ஆவது)
• நீர் (%)
2.86
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
242,923,845[9] (5-ஆவது)
• அடர்த்தி
244.4/km2 (633.0/sq mi) (56-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
Increase $1.512 திரிலியன்[10] (23rd)
• தலைவிகிதம்
Increase $6,662[10] (168-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
Increase $376.493 billion[11] (42-ஆவது)
• தலைவிகிதம்
Increase $1,658[10] (177-ஆவது)
ஜினி (2018)positive decrease 31.6[12]
மத்திமம்
மமேசு (2022)Increase 0.544[13]
தாழ் · 161-ஆவது
நாணயம்உரூபாய் (₨) (PKR)
நேர வலயம்ஒ.அ.நே+05:00 (நேரம்)
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை
திகதி அமைப்பு
  • dd-mm-yyyy
வாகனம் செலுத்தல்இடது[14]
அழைப்புக்குறி+92
ஐ.எசு.ஓ 3166 குறியீடுPK
இணையக் குறி
  • .pk
  • پاکستان.

180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095 கிமீ2 (307,374 ச மை) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் 1,046-கிலோமீட்டர் (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது.

நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக[15][16] விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது.[17] ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.[18]

பெயர்க்காரணம்

தொகு
  • முன்னோரு காலத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பழமை பெயராக பாலகிருஸ்தானம் என்ற பெயரில் அழைக்கபெற்ற இவ்விடம் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு இஸ்லாமியர் ஆதிக்கம் மிக்க தனிநாடு சுதந்திரம் பெற்ற பிறகு பாலகிருஸ்தானம் என்ற பெயர் பால்கிஸ்தானம் என்று மறுவி காலப்போக்கில் பாகிஸ்தானம் என்றும் சுருக்கமாக பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது.
  • மேலும் இஸ்லாமிய முறைப்படி உருதுச் சொல்லுக்குப் பொருள் (பாக்+ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள் ஸ்தான் என்றால் இடம் என்று அர்த்தம் அதனால் பாகிஸ்தான் என்று தூய்மையான இடம் என்று பெயர் அர்த்தமாக உள்ளது[19].

வரலாறு

தொகு

1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கிஸ்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது.

புவியியல்

தொகு

பாக்கிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மக்கள்

தொகு

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 
பாக்கித்தானின் மாகாணங்களும், பிரதேசங்களும்

பாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

 
Disputed Region of Kashmir

மாகாணங்கள்:

  1. பலூச்சிஸ்தான்
  2. கைபர் பக்தூன்க்வா (NWFP)
  3. பஞ்சாப்
  4. சிந்து

பிரதேசங்கள்:

  1. இஸ்லாமாபாத் தலைநகரப்பகுதி
  2. நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்

பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்:

  1. ஆசாத் காஷ்மீரம்
  2. கில்கித்பல்திஸ்தான்

அரசியல்

தொகு

அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம்.[சான்று தேவை] பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் – பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.

பொருளாதாரம்

தொகு

பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.[சான்று தேவை]

குறிப்புகள்

தொகு
  1. வெவ்வேறு ஆதாரங்கள் பரவலாக வெவ்வேறு புள்ளிவிவரங்களைக் கொடுக்கின்றன. மதிப்பீடுகள் 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தரப்பட்டுள்ளன.[4][5]
  2. "காசுமீரின் பாக்கித்தானியப் பகுதிகளுக்கான தரவுகளை உள்ளடக்கியது; ஆசாத் காஷ்மீர் (13,297 km2 or 5,134 sq mi) மற்றும் வடக்கு நிலங்கள் (72,520 km2 or 28,000 sq mi).[7] இவற்றைத் தவிர்த்த பிரதேசங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 796,095 km2 (307,374 sq mi)."

மேற்கோள்கள்

தொகு
  1. "The State Emblem". Ministry of Information and Broadcasting, பாக்கித்தான் அரசு. Archived from the original on 1 July 2007. பார்க்கப்பட்ட நாள் 18 December 2013.
  2. Article: 251 National language. https://pakistanconstitutionlaw.com/article-251-national-language/. பார்த்த நாள்: 23 July 2018. 
  3. Ethnologue 2022.
  4. "Pakistan's population is 207.68m, shows 2017 census result". 19 May 2021.
  5. "TABLE 11 – POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/ URBAN" (PDF). www.pbs.gov.pk. Pakistan Bureau of Statistics. 2021. Archived from the original (PDF) on 9 April 2022. பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.
  6. "Part I: "Introductory"". pakistani.org.
  7. "Pakistan statistics". Geohive. Archived from the original on 6 April 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.
  8. "Where is Pakistan?". worldatlas.com. 24 February 2021.
  9. "Pakistan". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 24 September 2022. (Archived 2022 edition)
  10. 10.0 10.1 10.2 "World Economic Outlook database: April 2022". IMF. பார்க்கப்பட்ட நாள் 26 May 2022.
  11. "Report for Selected Countries and Subjects".
  12. "Gini Index". World Bank. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
  13. "Human Development Report 2021/2022" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  14. Loureiro, Miguel (28 July 2005). "Driving—the good, the bad and the ugly". Daily Times (Pakistan) இம் மூலத்தில் இருந்து 10 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120110085150/http://www.dailytimes.com.pk/default.asp?page=story_28-7-2005_pg3_5. 
  15. Barry Buzan (2004). The United States and the great powers: world politics in the twenty-first century. Polity. pp. 71, 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7456-3374-9. பார்க்கப்பட்ட நாள் 27 December 2011.
  16. Hussein Solomon. "South African Foreign Policy and Middle Power Leadership". Archived from the original on 24 June 2002. பார்க்கப்பட்ட நாள் 27 December 2011.
  17. Pakistan among top 20 happiest countries, beating India, US: Report
  18. Thumbs up: Pakistan meets criteria for CERN
  19. Choudhary Rahmat Ali (28 சனவரி 1933). "Now or never: Are we to live or perish for ever?". Columbia University.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்&oldid=3713850" இலிருந்து மீள்விக்கப்பட்டது