பாக்கித்தான் நாட்டுப்பண்

கௌமி தரானா ( Qaumi Taranah, உருது : قومی ترانہ, ) என்பது உருதுவில் நாட்டுப் பண் என்பதாகும். இது பாக்கித்தானின் நாட்டுப் பண் ஆகும். இதற்கு 1949 இல் இசை அமைத்தவர் அகமது ஜி சாக்வா ஆவார். இந்த மெட்டுக்கு ஹஃபீஸ் ஜலந்தரி என்பவரால் 1952 இல் பாடல் எழுதப்பட்டது. இந்தப்பாடல் 1954 இல் பாக்கித்தான் நாட்டின் நாட்டுப்பண்ணாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.[1]

கௌமி தரானா

قومی ترانہ

 பாக்கித்தான் தேசிய கீதம்
இயற்றியவர்ஜகன்னாத் ஆஜாத், அதர்பின் அஃபீஜ் ஜல்லுந்தாரி, 1934
இசைஅக்பர் மொகமத், 1950
சேர்க்கப்பட்டது1954
இசை மாதிரி
இசைக்கருவி

பாகிஸ்தனின் தேசியப்பிதாவான முகமது அலி ஜின்னா லாகூர் சேர்ந்த இந்து-மத எழுத்தாளரான, ஜகன்னாத் ஆஜாத் என்பவரை ஐந்து நாட்களுக்குள் நாட்டுப்பன்ணை எழுதக் கேட்டுக்கொண்டார். ஆஜாத் எழுதியப் பாடலை ஜின்னா ஏற்றுக்கொண்டார். எனினும், ஆஜாதின் வரிகள் 18 மாதங்க�ள் உபயோகப்படுத்தப்பட்டது. 1952 இல் அஃபீஜ் ஜுல்லுந்திரி எழுதிய வரிகள் ஏற்கப்பட்டது.

வரலாறு

தொகு

1948 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்காவில் இருந்த ஏ.ஆர் கனி, என்ற ஒரு முஸ்லீம் பிரமுகர் புதியதாக உருவான சுதந்திர பாக்கித்தான் நாட்டுக்கான நாட்டுப் பண்ணை எழுதுபவர் மற்றும் இசையமைப்பவர் என இருவருக்கு ரூபாய் ஐயாயிரம் என இரண்டு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்தார். இவை சூன்1948 இல் அரசாங்க ஊடககத்தின் வாயிலாக விளம்பரம் வழியாக அறிவிக்கப்பட்டது, திசம்பர் 1948 இல் பாக்கிஸ்தான் அரசால் நாட்டுப்பண் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டியின் பணி சிறந்த பாடல், அதற்கான இசைக் கோர்வையைத் தேர்ந்தெடுப்பது ஆகும். இந்த கமிட்டி தகவல்கள் செயலாளர் ஷேக் முகம்மது இக்ரம் தலைமையில் நடைபெற்றது, மற்றும் இதன் உறுப்பினர்களாக பல அரசியல்வாதிகள், கவிஞர்கள், இசை கலைஞர்கள் போன்றோர் சேர்க்கப்பட்டுனர். பல பாடல்கள் பரிசீலிக்கப்பட்டது என்றாலும் எதிலும் முழுத் திருப்தி இல்லை.

இந்தோனேசியா சனாதிபதி சுகர்ணோ 1950 ஆம் ஆண்டு சனவரி 30 இல் பாக்கித்தான் பயணம் மேற்கோண்டார். இவர்தான் பாக்கித்தானுக்கு சுற்றுப்பயணம் வந்த முதல் வெளிநாட்டு தலைவர் ஆவார், இந்த சமயம் பாக்கித்தான் நாட்டுப்பண் இசைக்கப்படவில்லை. இந்நிலையில் 1950 ஆம் ஆண்டு ஈரான் ஷா பாக்கித்தானுக்கு வரவிருப்பதாக திட்டமிட்ட நிலையில் நாட்டுப்பண்ணை விரைவில் தாமதமின்றி சமர்பிக்கவேண்டி பாக்கித்தான் அரசாங்கம் கமிட்டியை கேட்டது. நாட்டுப்பண் கமிட்டியின் தலைவரும், பாக்கித்தான் கல்வி அமைச்சருமான, பஸ்லூர் ஏ. ஆர். ரகுமான் பல கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை பாடல்களையும், இசைக்கோர்வையையும் கேட்டார் ஆனால் சமர்ப்பிக்கபட்ட படைப்புகள் எதுவும் பொருத்தமான கருதப்பட்டவில்லை. நாட்டுப்பண் கமிட்டி பல்வேறு இசைக் கோர்வைகளை ஆய்வு செய்து இறுதியில் அகமது ஜி சாக்லா மூலம் வழங்கப்பட இசைக்கோர்வையை தேர்ந்தெடுத்து அதை அரசுக்கு ஒப்புதலுக்கு சமர்ப்பித்தது. [2] 21 ஆகத்து, 1949 ஆம் நாள் பாக்கிஸ்தான் அரசு தேசிய கீதத்துக்கான இசைக்கோர்வையை ஏற்றுக்கொண்டது. [3]

நாட்டுப்பண் பாடல் வரிகள் இல்லாமல், முதல் தடவையாக பாக்கித்தானின் கராச்சி நகரில் ஈரான் ஷா பயண்ம் மேற்கொண்ட 1 மார்ச் 1950 அன்று பாக்கிஸ்தான் கடற்படை இசைக்குழுவால் இசைக்கப்பட்டது.

அதன் பின்னர் பிரதமர் லியாகத் அலி கான் 3, மே 1950 ஆம் தேதி, ஐக்கிய அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டபொழுது இசைக்கப்பட்டது. எனினும், ஆகத்து 1954 வரை இதற்கு அதிகாரப்பூர்வமாக நாட்டுப்பண் அந்தஸ்துவழங்கப்படவில்லை. இந்த இசைக்கோவையை, நாட்டுப்பண் தேர்வு கமிட்டி பல கவிஞர்களுக்கு அனுப்பி அதற்கு பொருத்தமாக பாடல் எழுதி தருமாறு கேட்டுக்கொண்டது. சமர்பிக்கப்பட்ட பல நூறு பாடல்களை பரிசீலித்து ஹபீஸ் ஜலந்தரி எழுதிய பாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய நாட்டுப்பண் ஆகத்து 13 1954 அன்று பாக்கித்தான் அரசின் வானொலியில் ஹஃபீஸ் ஜலந்தரி வரிகளுடன் முதல் முறையாக ஒலிபரப்பியது. பிறகு உத்தியோகபூர்வ ஒப்புதல் ஆகத்து 16, 1954 அன்று பாக்கித்தானிய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டது.



உருது வட்டெழுத்து தமிழாக்கம்[4]

{{Nastaliq

پاک سرزمین شاد باد
کشور حسین شاد باد
تو نشان عزم عالیشان
! ارض پاکستان
مرکز یقین شاد باد}}
பாக் சர் ஜமீன் ஷாத் பாத்
கிஷ்வர்-எ-ஹசீன் ஷாத் பாத்
தூ-நிஷான்-எ அசம்-எ-ஆலி ஷான்
அர்ஸ்-எ-பாகிஸ்தான்!
மர்கஸ்-எ-யகீன் ஷாட்த் பாத்
இப்புனித நாடு
என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்
இந்த அழகான நிலம்
என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்
மனத்தின்மையின் சின்னம் நீ
ஓ பாகிஸ்தான்!
தளர்வுறா உறுதியின் மையம்
என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்

:پاک سرزمین کا نظام

قوت اخوت عوام
قوم ، ملک ، سلطنت
! پائندہ تابندہ باد
شاد باد منزل مراد
பாக் சர் ஜமீன் க நிஜாம்
குவத்-எ-உகுவத்-எ-அவாம்
கௌம், முல்க், சல்தனாத்
பா-இந்தா தபிந்தா பாத்!
ஷாத் பாத் மஞ்சில்-எ-முராத்
இப்புனித நாட்டின் நடைமுறை
மக்களின் ஒற்றுமையே
தேசமும், நாடும், அரசும்
என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்
இதயத்தோடு இணைந்த நம் இலக்கு
ஆசீர்வதிக்கப்பட்ட்டும்

:پرچم ستارہ و ہلال

رہبر ترقی و کمال
ترجمان ماضی شان حال
! جان استقبال
سایۂ خدائے ذوالجلال
பர்சம்-எ-சிதார்-ரஹொ-ஹிலால்
ரஹ்பர்-எ-தரக்கியொன்-கமால்
தர்ஜுமான்-எ-மர்ட்சஸொ, ஷான்-எ-ஹால்
ஜான்-எ-இஸ்டிக்பால்!
சாய-எ-குடாஹ்-எ-ட்ஸு-இல்-ஜலால்
பிறை நட்சத்திரக் கொடி
வளர்ச்சிக்கும் முழுமைக்கும் வழிகாட்டி
வரலாறின் பிரதிபலிப்பு, நிகழ்கால பெருமிதம்
வருங்காலத்தின் உத்வேகம்!
எல்லாம் வல்ல இறைவனின் நிழல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Information of Pakistan". Infopak.gov.pk. Archived from the original on 2007-10-26. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
  2. Michael Jamieson Bristow, National-Anthems.org. "Forty National Anthems". Archived from the original on 2006-05-09. பார்க்கப்பட்ட நாள் 2006-04-12.
  3. Aqeel Abbas Jafari (2010). Pakistan Chronicle (in Urdu) (1st ed.). 94/1, 26th St., Ph. 6, D.H.A., கராச்சி, Pakistan: Wirsa Publishers. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789699454004. {{cite book}}: |access-date= requires |url= (help)CS1 maint: location (link) CS1 maint: unrecognized language (link)
  4. "நாட்டுக்கொரு பாட்டு 2 - அவசரத்தில் கிடைத்த தேசிய கீதம்!". தி இந்து (தமிழ்). 20 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)