பாக்கித்தானிய ரூபாய்

பாக்கித்தானிய ரூபாய் (உருது: روپیہ‎ மொழிபெயர்ப்பு: ரூபியா}}; ஐ.எசு.ஓ: PKR) பாக்கித்தானின் அலுவல்முறையான நாணயம் ஆகும். இதனை நாட்டின் நடுவண் வங்கியாக செயல்படும் பாக்கித்தானிய அரசு வங்கி வெளியிடுகின்றது. மிகவும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் சின்னம் ரூ ஆகும்; சரக்குகளையும் சேவைகளையும் பாவிக்கும் போது வழங்கப்படும் இரசீதுகளில் இச்சின்னம் பயன்படுத்தப்படுகின்றது. பாக்கித்தானில் "ரூபாய்கள்", "ருபாயா" அல்லது "ருபாயே" என அறியப்படுகின்றது. பாக்கித்தானில் ரூபாயின் பெரும் மதிப்புகள் தென்னாசிய எண் முறையில் ஆயிரம், இலட்சம் (100 ஆயிரங்கள்), கோடி (10 மில்லியன்), 1 அரப் (1 பில்லியன்), 1 கரப் (1/10 டிரில்லியன்), 100 கரப் என எண்ணப்படுகின்றன.

பாக்கித்தானிய ரூபாய்
پاکستانی روپیہ
ஐ.எசு.ஓ 4217
குறிPKR (எண்ணியல்: 586)
சிற்றலகு0.01
அலகு
வேறுபெயர்ருபய்யா , பைசே
மதிப்பு
துணை அலகு
 1/100பைசா (பயனில் இல்லை)
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)10, 20, 50, 100, 500, 1000, 5000 ரூபாய்கள்
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 2, 5 ரூபாய்கள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) பாக்கித்தான்
 ஆப்கானித்தான்
வெளியீடு
நடுவண் வங்கிபாக்கித்தானிய அரசு வங்கி
 இணையதளம்www.sbp.org.pk
மதிப்பீடு
பணவீக்கம்1.8% (சூலை 2015)[1]
 ஆதாரம்2013[2]
பாக்கிதானின் ரூபாய்க்கான குறியீடு

வரலாறு

தொகு
 
பகவல்பூர் சமத்தானத்தில் 1947க்கு முன்னர் பயன்படுத்திய வெள்ளியாலான ரூபாய் நாணயம்.
 
பகவல்பூர் சமத்தானத்தில் 1947க்கு முன்னர் பயன்படுத்திய தங்கத்தாலான ரூபாய் நாணயம்.
 
1947இல் பாக்கித்தான் அரசினால் முத்திரையிடப்பட்ட இந்திய ரூபாய்கள் சட்டபூர்வமாக பயன்படுத்தப்பட்டன.


ரூபியா என்ற சொல் ரூப்யா என்ற சமசுகிருத வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது; இச்சொல் "வார்த்த வெள்ளி, வெள்ளி சிட்டை",[3] எனப் பொருள்படும். ருபாயா என்ற சொல்லை நாணயங்களைக் குறிக்க முதன்முதலில் 1540 முதல் 1545 வரையான தனது ஆட்சிக்காலத்தில் சேர் சா சூரி அறிமுகப்படுத்தினார்.

1947இல் பிரித்தானிய ஆட்சி கலைக்கப்பட்ட போது பாக்கித்தானிய ரூபாய் வழக்கத்திற்கு வந்தது. துவக்கத்தில் பிரித்தானிய இந்திய நாணயங்கள்/ ரூபாய்த்தாள்கள் மீது "பாக்கித்தான்" என முத்திரை பதித்து பயன்படுத்தப்பட்டன. புதிய நாணயங்களும் வங்கித்தாள்களும் 1948இல் வெளியிடப்பட்டன. இந்திய ரூபாய் போலவே பாக்கித்தானிய ரூபாயும் 16 அணாக்களாகவும், ஒவ்வொரு அணாவும் 4 பைசா அல்லது 12 பையாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சனவரி 1, 1961 முதல் பதின்மமுறைக்கு மாற்றப்பட்டது; ஒரு ரூபாய்க்கு 100 பைசாக்களாக இருக்கின்றது. இருப்பினும் 1994 முதல் பைசா மதிப்புள்ள நாணயங்கள் வெளியிடப்படவில்லை.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Inflation dips to 12-year low at 1.8% in July". The Express Tribune. Aug 4, 2015. http://tribune.com.pk/story/931731/price-index-inflation-dips-to-12-year-low-at-1-8-in-july/. பார்த்த நாள்: Aug 4, 2015. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-05-24. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.
  3. etymonline.com (20 September 2008). "Etymology of rupee". பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தானிய_ரூபாய்&oldid=3562503" இலிருந்து மீள்விக்கப்பட்டது