இந்திய எண் முறைமை

(தென்னாசிய எண் முறைமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய எண் முறைமை (Indian numbering system) என்பது இரண்டு பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் மறை எண் முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் (இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக) பயன்படுத்தப்படும் எண் முறைமை ஆகும். உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மூன்று பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் முறை பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் தென்னாசிய எண் முறைமையில் பயன்படுத்தப்படும் இலட்சம் (Lakh), கோடி (Crore) முதலிய சொற்கள் இந்திய ஆங்கிலத்திலும் பாக்கித்தானிய ஆங்கிலத்திலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 30 மில்லியன் (மூன்று கோடி) உரூபாய் என்பது இந்திய உரூபாய் 30,000,000 என்பதற்குப் பதிலாக 3,00,00,000 அல்லது இந்திய உரூபாய் 3,00,00,000 என்று ஆயிரம், நூறாயிரம், கோடி ஆகிய நிலைகளில் காற்புள்ளிகள் இடப்பட்டு எழுதப்படுகின்றது; ஒரு பில்லியன் (100 கோடி=நூறு கோடி) என்பது 1,00,00,00,000 என்று எழுதப்படுகின்றது. தென்னாசிய எண் முறைமையிற் பெரிய தொகை பெரும்பாலும் நூறாயிரத்திலும் கோடியிலுமே குறிப்பிடப்படும்.

பிரிப்பான்களின் பயன்பாடு

தொகு

இந்திய எண் முறைமையானது அராபிய எண் முறைமையிலிருந்து வேறுபட்ட முறையில் பிரிப்பான்களைப் பயன்படுத்துகின்றது. முழுவெண் பகுதியில் மூன்று குறைந்த மதிப்புறு இலக்கங்களையடுத்து, ஒவ்வொரு மூன்று இலக்கங்களுக்கும் பதிலாக ஒவ்வோர் இரண்டு இலக்கங்களுக்கும் இடையில் பின்வருமாறு காற்புள்ளி இடப்படுகின்றது.

இந்திய முறைமை அராபிய முறைமை
5,05,000 505,000
12,12,12,123 121,212,123
7,00,00,00,000 7,000,000,000

ஆயிரம், நூறாயிரம், பத்து மில்லியன் போன்றவற்றிற்கு அலகுகளைக் கொண்ட இந்திய எண் முறைமையை இது ஒத்துள்ளது.

எண்களின் பெயர்கள்

தொகு

கீழேயுள்ள வரிசைப் பட்டியலில் ஒரு பில்லியனானது ஆயிரம் மில்லியனுக்குச் சமனாக உள்ள குறுகிய அளவைப் பின்பற்றுகின்றது. இந்தியாவிலோ, பண்டைய பிரித்தானியப் பயன்பாட்டைப் பின்பற்றியபடி, ஒரு பில்லியனானது மில்லியன் மில்லியனுக்குச் சமனாக உள்ள நீண்ட அளவு பின்பற்றப்படுகின்றது.

இந்தி/உருது (ஒலிபெயர்ப்பு)
தமிழ்
இந்திய உரு அடுக்குக்
குறிமுறை
அராபிய உரு அராபியக் குறுகிய அளவுc
(அராபிய நீண்ட அளவு)
एक/ایک (ஏக்)
ஒன்று
1 100 1 ஒன்று
दस/دس (தஸ்)
பத்து
10 101 10 ten
அறிவியன்முறை (அனைத்துலக முன்னொட்டு): தெக்கா-
सौ/سو (சௌ)
நூறு
100 102 100 one hundred
அனைத்துலக முன்னொட்டு: எட்டோ-
இந்தி: सहस्र (சகஸ்ர)/இந்துசுத்தானி: हज़ार/ہزار (ஹசார்)
ஆயிரம்
1,000 103 1,000 one thousand
அனைத்துலக முன்னொட்டு: கிலோ-
दस हज़ार/دس ہزار (தஸ் ஹசார்)
பத்தாயிரம்
10,000 104 10,000 பத்தாயிரம்
लाख/لاکھ (லாக்)
இலட்சம்
1,00,000 105 100,000 நூறாயிரம்
अदन्त/ادنت (அதந்த்)/दस लाख/دس لاکھ (தஸ் லாக்)
பத்து இலட்சம்
10,00,000 106 1,000,000 ஒரு மில்லியன்
அனைத்துலக முன்னொட்டு: மெகா-
करोड़ / کروڑ (karoṛ)
one crore />கோடி
1,00,00,000 107 10,000,000 ten million
दस करोड़ / دس کروڑ (das karoṛ)
ten crore />பத்து கோடி
10,00,00,000 108 100,000,000 one hundred million
अरब / ارب (arab)
one hundred crore />நூறு கோடி
100,00,00,000 109 1,000,000,000 one billion
(one milliard)
SI prefix: giga-
एक हज़ार करोड़ (ek hazār karoṛ) / دس ارب (das arab)
one thousand crore / one lakh lakh/ten arab />ஆயிரம் கோடி
1,000,00,00,000 1010 10,000,000,000 ten billion
(ten milliard)
खरब / کھرب (kharab)
ten thousand crore />பத்தாயிரம் கோடி
10,000,00,00,000 1011 100,000,000,000 one hundred billion
(one hundred milliard)
एक लाख करोड़ (ek lākh karoṛ) / دس کھرب (das kharab)
one lakh crore / 10 kharab />இலட்சம் கோடி
1,00,000,00,00,000 1012 1,000,000,000,000 one trillion
(one billion)
SI prefix: tera-
नील / نیل (neel / nīl)
ten lakh crore />பத்து இலட்சம் கோடி
10,00,000,00,00,000 1013 10,000,000,000,000 ten trillion
(ten billion)
एक करोड़ करोड़ (ek karoṛ karoṛ) / دس نیل (das nīl)
one crore crore />ஒரு கோடி கோடி
1,00,00,000,00,00,000 1014 100,000,000,000,000 one hundred trillion
(one hundred billion)
पद्म / پدم (padm)
ten crore crore />பத்து கோடி கோடி
10,00,00,000,00,00,000 1015 1,000,000,000,000,000 one quadrillion
(one billiard)
SI prefix: peta-
दस पद्म / دس پدم (das padm)
one hundred crore crore />நூறு கோடி கோடி
100,00,00,000,00,00,000 1016 10,000,000,000,000,000 ten quadrillion
(ten billiard)
शङ्ख / شنکھ (shankh / śaṅkh)
one thousand crore crore / one lakh lakh crore />ஆயிரம் கோடி கோடி
1,000,00,00,000,00,00,000 1017 100,000,000,000,000,000 one hundred quadrillion
(one hundred billiard)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_எண்_முறைமை&oldid=3622003" இலிருந்து மீள்விக்கப்பட்டது