பாக்கித்தானிய அரசு வங்கி
பாக்கித்தானிய அரசு வங்கி அல்லது பாக்கித்தானிய ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan, SBP; உருது: بینک دولت پاکستان) பாக்கித்தானின் நடுவண் வங்கி ஆகும். 1948இல் இந்த வங்கி உருவானபோது நிறுவப்பட்ட யாப்பு சனவரி 1, 1974 வரை மாற்றப்படவில்லை. அவ்வமயம் இவ்வங்கி தேசியமயமாக்கப்பட்டபோது இதன் செயற்பாட்டு வீச்சு பெரியளவில் விரிவாக்கப்பட்டது. பாக்கித்தானிய ஸ்டேட் வங்கி சட்டம் 1956,[2] மற்றும் அதன் பிந்தைய திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வங்கி இயங்குகின்றது. இதன் தலைமையகம் பாக்கித்தானின் நிதித் தலைநகரமாக விளங்கும் கராச்சியிலும் இரண்டாம் தலைமையகம் நாட்டுத் தலைநகர், இஸ்லாமாபாத்திலும் அமைந்துள்ளன.
![]() பாக்கித்தானிய அரசு வங்கி | |
தலைமையகம் | கராச்சி, பாக்கித்தான் |
---|---|
துவக்கம் | 1948 |
மத்திய வங்கி | பாக்கித்தான் |
நாணயம் | பாக்கித்தானிய ரூபாய் PKR (ஐ.எசு.ஓ 4217) |
ஒதுக்குகள் | அமெரிக்க டாலர் 18.60 பில்லியன் [1] |
வலைத்தளம் | www.sbp.org.pk |