இலாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mk:Лама
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 18:
நன்கு வளர்ந்த லாமாவானது தலைப்பகுதி வரை ஐந்தரை [[அடி]] முதல் ஆறு அடி உயரம் இருக்கும். சராசரியாக 127 [[கிலோகிராம்|கிலோ]] முதல் 204 கிலோ எடை வரை இருக்கும். பிறந்த ஒட்டகக் கன்றுகள் ஒன்பது கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். லாமாக்கள் மந்தைகளாகக் கூடி வாழ்வன. பொதுவாக இவற்றின் மயிரிழையானது மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். இவை புத்திச்சாலி விலங்குகளாகும். பல வேலைகளை சில முறை சொல்லிக்கொடுத்தவுடன் கற்றுக்கொண்டு செய்யும். பொதி சுமக்கும் லாமாக்கள் தங்கள் உடல் எடையில் 20-30% வரை தூக்கிக் கொண்டு பலமைல்கள் நடக்கவல்லன.
 
லாமாக்கள் வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளில் 40 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இவை 3 மில்லியன் ஆண்டுகட்கு முன் [[தென் அமெரிக்கா]]வுக்கும் [[ஆசியா]]விற்கும் இடம்பெயர்ந்தன. [[பனி யுகம்|பனியுகத்தின்]] முடிவில் இவை வடஅமெரிக்காவில் அழிந்துவிட்டன. 2007-ஆம் கணக்கெடுப்பின் படி தென்அமெரிக்காவில் 7 மில்லியன் லாமாக்களும் [[அல்ப்பாக்கா]]க்களும் உள்ளன. [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]]வில் ஒரு இலட்சம் லாமாக்கள் உள்ளன. இவை தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
[[படிமம்:A Quechua girl and her Llama.jpg|thumb|250px|[[கெச்சுவா]]ச் சிறுமி ஒருத்தி தன் லாமாவுடன் (இடம்:[[கோசுக்கோ]])]]
 
"https://ta.wikipedia.org/wiki/இலாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது