பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பாட்டியல்''' என்பது, [[பிரபந்தம்|பிரபந்த]] இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வருணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வருணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர் நூல் கேட்கவேண்டிய முறை, நூல் [[அரங்கேற்றம்]] செய்வதற்குரிய அவையின் இயல்பு, [[புலவர்]]களின் வகை போன்றவை பாட்டியலுள் அடங்குகின்றன. இதனால், [[செய்யுள்]]களின் உறுப்புக்களையும் அவற்றின் இனங்களையும் விளக்கும் யாப்பியலினின்றும் வேறுபடுகின்றது.
 
பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும். புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியமை, நன்னூல், இறையனார் களவிழல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள்.
 
பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும்.
 
ஐங்குறு நூறு என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதிற்றுப்பத்து 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு.
 
அவற்றைப் போல, பன்னிரு பாட்டியல் என்னும் நூலும் ஒரு தொகைநுல். இதில் முன்னோர் 15 பேர் பாடிய இலக்கணப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
 
==பாட்டியல் நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது