பாறை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
[[படிமம்:Oil_wellOil well.jpg|thumb|right|280px|[[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவில்]] [[டெக்ஸாஸ்]] மாநிலத்தில் எண்ணெய்க்கிணறு ஒன்றில் இருந்து கச்சா இறைத்தல்.]]
'''பாறை எண்ணெய்''' அல்லது '''பெற்றோலியம்''' என்பது [[புவி]]யில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ்வெண்ணெய் [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ள பல [[ஹைடிரோகார்பன்|ஐதரோகார்பன்]]களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, [[ஆல்க்கேன்]]கள் ஆகும். இவற்றின் நீளம் C<sub>5</sub>H<sub>12</sub> இல் இருந்து C<sub>18</sub>H<sub>38</sub> வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை [[எரிவளி]] அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், [[திண்மம்|திண்ம]] நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் [[நிலக்கரி]] ஆகும்.
 
வரிசை 5:
 
== வரலாறு ==
பாறை எண்ணெயை முதன் முதலாக 1556 இல் [[ஜெர்மனி|ஜெர்மன்]] கனிமவியலாளர் [[ஜியார்ஜியஸ் அகிரிகோலா]] (''Georgius Agricola'') என்று அறியப்பட்ட, "கியார்கு பௌவர்" (''Georg Bauer'') என்பவர் பயன்படுத்தியதாக அவருடைய ஆய்வுநூல் தெரிவிக்கின்றது<ref>{{cite book |authorlink=Georg Bauer |author=Bauer Georg, Hoover Herbert (tr.), Hoover Lou(tr.) |title=De re metallica |originalyear=1556 |volume=xii |originallanguage={{la icon}} }} 1912 இல் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டது </ref>. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், [[மே 26]], [[1908]] ஆம் நாள் [[ஈரான்|பெர்சியாவில்]], ஒரு [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியக்]] கும்பினி எண்ணெய்க் கிணறு ஒன்றை வெட்டி எண்ணெய் எடுத்ததே<ref>[http://www.wired.com/science/discoveries/news/2008/05/dayintech_0526?npu=1&mbid=yhp முதல் எண்ணெய்க் கிணறு]</ref> இன்றைய பாறை எண்ணெய்ப் பயன்பாட்டுக்கு வழிவகுத்த முதல் நிகழ்வு. "டார்சி” (''D'Arcy'') என்பவர் [[1901]] ஆம் ஆண்டு பெர்சிய அரசிடம் இருந்து பெற்ற உரிமத்தின்படி, [[ஈரான்|ஈரானில்]] எண்ணெய் இருக்கும் இடத்தைத் தேடினர். பணமின்றி அவரது கும்பினி முழுகும் தருவாயில் இருந்தபொழுது, கும்பினியைச் சேர்ந்த ''ஜியார்ஜ் ரேய்னால்ட்ஸ்'' (''George Reynolds'') என்பவர் ''மஸ்ஜித்-இ-சுலைமான்'' (''Masjid-i-Suleiman'') என்னும் இடத்தில் 1,180 [[அடி]] ஆழத்தில் தோண்டிய பொழுது, எண்ணெய் குபுக்கென்று மேல் பரப்புக்கு மேலே, 75 அடி உயரமாய் பீய்ச்சி அடித்தது. இக் கண்டுபிடிப்பின் பயனாய் ஆங்கிலோ-பெர்சிய எண்ணெய் நிறுவனம் (''Anglo-Persian Oil Co'') உருவாகியது. பின்னர் அது பற்பல வடிவங்களில் உருமாறிப் பின் 1954 இல் பிரித்தானியப் பாறை எண்ணெயாகவும் (''British Petroleum''), அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு ”பி.பி” (''BP'') ஆகவும் உருப்பெற்றது.
 
== உருவாகும் முறை ==
பாறை எண்ணெயைக் கச்சா எண்ணெய் அல்லது ''பாறைநெய்'' என்றும் கூறலாம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரிகள் மடிந்து (மரித்துப்) போன பின், கடல் அடியில் மண்ணுள் புதையுண்டு, அங்கு ஏற்பட்ட அழுத்தத்திலும் வெப்பத்திலும் அழுகி, [[கோலுரு நுண்ணுயிர்]]களால் (பாக்டீரியாக்களால்) சில மாற்றங்கள் அடைந்து, சுற்றி இருந்த மண்ணோடும், உப்புக்களோடும் சில வேதிவினைகளின்பாற்பட்டும் இப்படிக் கச்சா எண்ணெயாகவும் நிலத்தடி [[வளிமம்|வளிமமாகவும்]] மாறுகின்றன. பிறகு உயர் அழுத்தங்களால் புவியின் பாறை வெடிப்புக்களுக்குள் சென்று எண்ணெய் வளங்களாக மாறுகின்றன. அதனாலேயே இன்றும் பல எண்ணெய்க் கிணறுகள் கடல்களின் மீது அமைந்திருக்கின்றன.
 
[[படிமம்:Octane_molecule_3D_modelOctane molecule 3D model.png|thumb|right||250px|பாறை எண்ணெயில் காணப்படும் ஆக்டேன் என்னும் ஐதரோகார்பன் எட்டு [[கரிமம்|கரிம]] அணுக்கள் கொண்டது. கறுப்பு நிற உருண்டைகள் [[கரிமம்|கரிமத்தைக்]] காட்டுகின்றன, வெள்ளைநிற உருண்டைகள் [[ஹைட்ரஜன்]] அணுக்களைக் காட்டுகின்றன, கோடுகள் ஒற்றைப் பிணைப்புகளைக் காட்டுகின்றன.]]
மண்ணடியில் இருந்து எடுக்கும் எண்ணெயில் அடங்கி இருக்கும் வேதிப்பொருட்களின் அளவுகள் உருவான சூழலுக்கு ஏற்றாற்போல இடத்துக்கு இடம் வெகுவாக மாறும், ஆனால் அவற்றின் விகிதங்களை ஓரளவுக்கு நெருக்கமான எல்லைகளுக்குள் கீழ்க்காணுமாறு கொடுக்கலாம்<ref name="Speight"> {{Cite book
| last = Speight
| first = James G.
வரிசை 37:
== உற்பத்தியும் உச்சமும் ==
[[படிமம்:OilConsumptionpercapita.png|thumb|right|250px|உலகில் பாறை எண்ணெய் பயன்படுத்தும் நாடுகள். நிறத்தின் அடர்த்திக்கு ஏறார்போல பாறை எண்ணெயின் பயன்பாடு இருக்குமாறு வரையப்பட்டுள்ளது.]]
[[படிமம்:Oil_producing_countries_mapOil producing countries map.png|thumb|right|250px|உலகில் பாறை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்]]
இற்றையாண்டுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருப்பது [[சவுதி அரேபியா]] தான். ஆனால் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவே]] எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட தொழில்கள் சிறந்து விளங்கின. இந்த வளமும் போகமும் தொடர்ந்து நிலைக்கும் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்த வளமான நிலை எப்போதும் நிலைக்காது என்று [[1950]] வாக்கில் ஒரு எண்ணெய் வள ஆய்வு நிபுணர் கணித்துக் கூறியிருந்தார். அவர் பெயர் மேரியான் கிங் ஹப்பர்ட் (Marion King Hubbert). பொதுவாக எண்ணெய் கண்டுபிடிப்பு, பயன்பாடு, இவற்றையெல்லாம் வைத்து ஆய்ந்து உருவகப் படுத்தி, ஒரு கணிப்பைச் சொல்லி இருந்தார். ஒரு மணி-வளைவு (bell curve) போல [[எண்ணெய் வள உச்சம்|எண்ணெய் வளம் உச்சத்தை]] ([[ஹப்பெர்ட் உச்சம்]], Hubbert Peak) அடைந்து பிறகு குறைந்து விடும் என்று அவர் கணித்தபடியே [[1970கள்|எழுபதுகளில்]] எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து போனது.
 
வரிசை 50:
சில ஆண்டுகளுக்குள்ளாகவே விலை இவ்வளவு தூரம் கூடியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் [[கப்பல்]]கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள் (refineries) புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியைக் கூட்ட முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி கூடவில்லை என்கின்றனர்.
 
கச்சா எண்ணெயின் விலை [[மார்ச் 12]] [[2008]]<ref>[http://www.theglobeandmail.com/servlet/story/RTGAM.20080312.woilprices0312/BNStory/energy/home globeandmail.com: energy<!-- Bot generated title -->]</ref> ல், $110 ஆகவும், [[மே 9]], [[2008]]<ref>[http://www.enerfaxgold.com/ Energy, Oil & Gas<!-- Bot generated title -->]</ref> ல, $125 ஆகவும் [[மே 21]], [[2008]] <ref>[http://afp.google.com/article/ALeqM5hNR10SoGdTWgTw5XtVog3HlakYlA AFP: Oil spikes above 133 dollars on tighter US supplies<!-- Bot generated title -->]</ref> ல, $130 ஆகவும் உயர்நதுள்ளது. [[ஜுன் 26]], [[2008]] $145 தாக உயர்ந்து, [[ஜுலை 3]], [[2008]]<ref>[http://news.bbc.co.uk/2/hi/business/7486764.stm Oil prices reach new record high]</ref> ல் $ 145 ஆக உயர்ந்தது.
 
[[படிமம்:Oil Oil_Prices_1861_2007Prices 1861 2007.svg|thumb|500px| கச்சா எண்ணெய் விலை, 1861-2007 (ஆரஞ்சு நிற கோடு பணவீக்கம் சரிசெய்யபட்ட விலை, நீல நிற கோடு பணவீக்கம் சரிசெய்யபடாத விலை).]]
 
{| class="wikitable"
வரிசை 60:
| 2001 || $19.84
|-
 
| 2002 ||
$31.20
|-
 
| 2003 ||
$32.52
|-
 
| 2004 ||
$43.45
|-
 
| 2005 ||
$61.04
|-
 
| 2006 ||
$61.05
|-
 
| 2007 ||
$95.98
 
|}
 
வரி 96 ⟶ 89:
[[பகுப்பு:பெட்ரோலியம்|*]]
[[பகுப்பு:வேதிப் பொறியியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|ar}}
{{Link FA|cs}}
{{Link FA|ru}}
 
[[af:Ru-olie]]
[[am:ፔትሮሊየም]]
"https://ta.wikipedia.org/wiki/பாறை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது