"எகிப்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

846 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|footnote1 = பேச்சு மொழி எகிப்திய அரபு.
}}
'''எகிப்து''' வடக்கு [[ஆப்பிரிக்கா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடு. [[கெய்ரோ]] இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்கே [[லிபியா|லிபியாவையும்]], தெற்கே [[சூடான்|சூடானையும்]], கிழக்கே [[காசாக் கரை]] மற்றும் [[இஸ்ரேல்|இஸ்ரேலையும்]] எல்லையாக கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. வடக்குக் கரையில் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலும்]] கிழக்குக் கரையில் [[செங்கடல்|செங்கடலும்]] எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.எகிப்தின் ஜீவ நதியாக [[நைல்|நைல் நதி]] பாய்கிறது. நைல் நதிக் கரையிலிருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. ஆப்பிரிக்காவிலும் மையக் கிழக்கிலும் உள்ள நாடுகளுள் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுள் எகிப்தும் ஒன்று. 82.2 மில்லியன்<ref name="popclock">{{cite web |url=http://www.msrintranet.capmas.gov.eg/pls/fdl/tst12e?action=1&lname= |title=Population Clock |date=16 April 2011 |publisher=[[Central Agency for Public Mobilization and Statistics]] |accessdate=16 April 2011}}</ref> மக்களைக் கொண்ட இந்நாட்டின் பெரும்பாலானவர்கள், நைல் நதிக்கரையில் இருக்கும் 40,000 சதுர கிலோமீட்டர் (15,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட நிலப்பகுதியிலேயே வாழ்கின்றனர். இப்பகுதிகளிலேயே வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் காணப்படுவதுடன் [[கெய்ரோ]], [[அலெக்சாந்திரியா]], [[லூக்சூர்]] போன்ற பெரிய நகரங்களும் அடங்குகின்றன. மிகப் பெரிய [[சகாராப் பாலைவனம்|சகாராப் பாலைவனப்]] பகுதிகளில் குறைவான மக்களே வாழ்கின்றனர். எகிப்தில் வாழ்பவர்களுள் ஏறத்தாழ அரைப் பங்கினர் நகர்ப்புறப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.
 
இந்நாட்டுக்கு விடுதலை 1922-ல் வழங்கப்பட்டு 1953-ல் அறிவிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய எகிப்தின் பழங்காலத்து மன்னர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட [[பிரமிடு]]கள் உலகப்புகழ் பெற்றவை. எகிப்தில் உள்ள [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்களான]] கிசா பிரமிடுத் தொகுதி, பெரிய [[இசுஃபிங்சு]] என்பன பண்டை எகிப்து நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை. [[மெம்பிசு, எகிப்து|மெம்பிசு]], [[தேப்சு]], [[கர்னாக்]] போன்ற இடங்களில் உள்ள பண்டைய அழிபாடுகளும், லூக்சூருக்கு வெளியே உள்ள [[மன்னர்களின் பள்ளத்தாக்கு]]ப் பகுதியும் பெருமளவில் [[தொல்லியல்]] ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்பவை.
==வரலாறு==
===வரலாற்றுக்கு முந்திய காலம்===
நைல் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், [[பாலைவனச் சோலை]]களிலும் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைச் செதுக்கற் சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டில் வேடுவர்-உணவுசேகரிப்போர், மீன்பிடிப்போர் பண்பாடுகள் உருவாயின. காலநிலை மாற்றத்தால் அல்லது அளவு மீறிய மேய்ச்சல் நிலப் பயன்பாட்டினால், அல்லது இரண்டினாலும், கிமு 8000 ஆண்டளவில் மேய்ச்சல் நிலங்கள் பாலவனங்களாக மாறத் தொடங்கிச் சகாராப் பாலைவனம் உருவானது. தொடக்ககால இனக்குழுக்கள் நைல் ஆற்றங்கரைகளை அண்டி இடம் பெயர்ந்து, நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்பட்ட சமூகத்தையும் உருவாக்கினர்.<ref>Midant-Reynes, Béatrix. ''The Prehistory of Egypt: From the First Egyptians to the First Kings''. Oxford: Blackwell Publishers.</ref>
 
ஏறத்தாழ கிமு 6000 ஆண்டளவில், நைல் ஆற்றங்கரையில் புதிய கற்காலப் பண்பாடு உருவானது.<ref>{{cite web|url=http://www.worldtimelines.org.uk/world/africa/nile_valley/6000-4000BC|title=The Nile Valley 6000–4000 BC Neolithic|publisher=The British Museum|year=2005|accessdate=21 August 2008}}</ref> புதியகற்காலத்தில், மேல் எகிப்திலும், கீழ் எகிப்திலும், பல வம்சங்களுக்கு முற்பட்ட பண்பாடுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தன. [[பாடேரியப் பண்பாடு]]ம், தொடராக உருவான [[நக்காடாப் பண்பாடு]]களும் வம்ச ஆட்சி எகிப்துக்கு முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றன. கீழ் எகிப்தின் மிகப் பழைய களமான [[மெரிம்டா]], பாடேரியப் பண்பாட்டுக்கு 700 ஆண்டுகள் முந்தியது. ஒரேகாலக் கீழ் எகிப்தியப் பண்பாடுகளைச் சேர்ந்தோர் தமது தெற்கு எகிப்திய அயலவர்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. தனித்துவமான பண்பாடுகளைக் கொண்ட இவர்கள் வணிகம் மூலமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மிகவும் பழைய எகிப்தியப் படவெழுத்துக்கள், கிமு 3200 ஆண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த, வம்சங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நக்காடாக் கால மட்பாண்டங்களில் காணப்படுகின்றன.<ref>Bard, Kathryn A. Ian Shaw, ed. ''The Oxford Illustrated History of Ancient Egypt''. Oxford: Oxford University Press, 2000. p. 69.</ref>
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1182141" இருந்து மீள்விக்கப்பட்டது