பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''பிரான்சு''' அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு [[ஐரோப்பா]]வில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட [[நாடு|நாடாகும்]]. பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது தெற்கே [[மத்தியதரைக் கடல்]] தொடக்கம் வடக்கே [[ஆங்கிலக் கால்வாய்]] [[வட கடல்]] வரையும் விரிந்து காணப்படுகிறது. [[பெல்ஜியம்]], [[யேர்மனி]], [[சுவிஸர்லாந்து]], [[லக்சம்பேர்க்]], [[இத்தாலி]], [[மொனாகோ]], [[அன்டோரா]], [[ஸ்பெயின்]] ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "[[அறுகோணி]]" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய [[தனிப் பொருளாதார வலயம்]] பிரான்சிலேயே உள்ளது.
 
கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்சு விளங்கி வருகிறது. 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பெரும் பகுதிகளைப் பிரான்சு தனது குடியேற்றவாத ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய குடியேற்றவாதப் பேரரசைப் பிரான்சு கட்டியெழுப்பியது. அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றவாதப் பேரரசாக விளங்கியது.
 
பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. பிரான்ஸ் [[ஐக்கிய நாடுகள்]] சபை, [[ஜி8]] நாடுகள், [[ஐரோப்பிய ஒன்றியம்]] ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. [[ஐக்கிய நாடுகள்]] சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது