இளங்கோ (வேங்கையின் மைந்தன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
===நட்பு===
இப்புதினத்தில் வீரமல்லன், மாங்குடி மருதன் என இருவர் இவனதுஇளங்கோவின் நெருங்கிய நண்பர்களாய் வருகின்றனர். ஆபத்தான ஒரு சமயத்தில் தன் உயிரைக் காத்த காரணத்தால் வீரமல்லன் மேல் இளங்கோ கொண்ட நட்பு நெருக்கமாகிறது. பழம்பெரும் குடியான முத்தரையர் வம்சத்தில் தோன்றிய வீரமல்லன் நாடில்லா வீரனாக இருப்பது அவன் மேல் அதிகப் பரிவைத் தூண்டுகிறது இளங்கோவுக்கு. சோழமன்னரிடம் பரிந்துரைத்து அவனது நாட்டைப் பெற்றுத்தருவதாகவும் அதுவரை பொறுமையாகவும் பொறுப்புடனும் இருக்கும்படியும் வீரமல்லனுக்குக் கூறுகிறான்.
தங்களுடையதைப் போல் ஒரு சிற்றரச வம்சத்தைச் சேர்ந்த இளங்கோவின் மேம்பட்ட நிலையையும் தனது நாடற்ற நிலையையும் எண்ணி வீரமல்லன் அசூயை கொண்டு எதிரிகள் பக்கம் மாறிவிட்டாலும் இளங்கோவின் மனதில் அவன் தனது நண்பன் என்ற எண்ணம் மாறவில்லை. அவன் மேல் வெறுப்பு ஏற்படுவதற்குப் பதில் அவனது அவசரபுத்தியை நினைத்து வருத்தம்தான் அடைகிறான். இராமருக்கு அனுமன் துணை போன்று இளங்கோவிற்கு அவனது நண்பன் மாங்குடி மருதன். தனது நிழல் போல் தன்னைப் பாதுகாத்துத் தொடரும் தன் நண்பன் மாங்குடி மருதனிடமும் இளங்கோ கொண்டுள்ள நட்பு ஆழமானது.
"https://ta.wikipedia.org/wiki/இளங்கோ_(வேங்கையின்_மைந்தன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது