பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் [[நடுநிலக்கடற் காலநிலை]] நிலவுகிறது. மேற்கில், கடும் மழைவீழ்ச்சியுடனும், மிதமான மாரி, குளிர் முதல் மிதமான வெப்பம் கொண்ட கோடையுடனும் கூடிய [[பெருங்கடற் காலநிலை]] காணப்படுகின்றது. உட்பகுதிகளில், கொந்தளிப்பான வெப்பத்துடன் கூடிய கோடையையும், குறைவான மழையுடன் கூடிய குளிரான மாரி காலத்தையும் கொண்ட [[கண்டக் காலநிலை]] உள்ளது. ஆல்ப்சுப் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள் வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும்.
 
===சூழல்===
சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றாகப் பிரான்சு விளங்குகிறது. பிரான்சின் சூழல் அமைச்சு 1971 ஆம் ஆண்டில் உருவானது. பிரான்சு பெருமளவு தொழில்மயமானதும், வளர்ச்சியடைந்ததுமான நாடாக இருந்தும், காபனீரொட்சைடு வெளியேற்றுவதில் இது 17 ஆவது நிலையிலேயே உள்ளது. இது, கனடா, சவூதி அரேபியா, ஆசுத்திரேலியா போன்ற குடித்தொகை குறைவான நாடுகளைவிடக் குறைவான காபனீரொட்சைடையே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர், அணுவாற்றலில் முதலீடு செய்வதற்குப் பிரான்சு அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணம். தற்போது பிரான்சின் 78% மின்சாரம் அணுவாற்றல் மூலமே கிடைக்கிறது. இதனாலேயே பிரான்சு, அதனோடு ஒப்பிடத்தக்க பல நாடுகளைவிடக் கூடிய அளவு சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது.
 
பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் போலவே, பிரான்சும், 2020 ஆம் ஆண்டளவில், காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டின் நிலையில் 20% ஐக் குறைப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா 4% குறைப்பதற்கே சம்மதித்து உள்ளது.
 
2009 ஆம் ஆண்டில், ஒரு [[தொன்]] காபனீரொட்சைடு வெளியேற்றத்துக்கு 17 [[யூரோ]]க்கள் வீதம் [[கரிம வரி]] ஒன்றை விதிப்பதற்கும் பிரான்சு திட்டமிட்டு இருந்தது. இதன் மூலம் 4.3 பில்லியன் யூரோக்கள் வருமானமாகக் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவ்வரியினால், பிரான்சு நாட்டு நிறுவனங்கள் பிற அயல் நாட்டு நிறுவனங்களுடன் சமநிலையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் பிற காரணங்களினாலும் இந்த வரி விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது